திருமணத்தை நா வானமாமலை முன்னின்று நடத்தி வைத்தார். இவர்களெல்லாம் கம்யூனிஸ்ட் போராட்டத்தை இணைந்து முன் எடுத்தார்கள். அப்போது ராஜாஜி கம்யூனிசத்துக்கு முழுமையான எதிரியாக இருந்தார்.
அன்றைக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன கம்யூனிஸ்ட்களும் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார்கள் அந்த நேரத்தில். பா ஜீவானந்தம் ஐக்கிய தமிழகம் என்ற நூலில் கன்னியாகுமரி மாவட்டத்துடன் செங்கோட்டையும் திருநெல்வேலியும் இணைக்க வேண்டும் என்று எழுதினார். ஆந்திராவில் சுந்தரய்யா விசால ஆந்திரம் வேண்டுமென்று கம்யூனிஸ்ட் சார்பாக முன்னெடுத்தார். அதேபோல் கேரளத்தில் நம்பூதிரி பாட் நவ கேரளம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்! பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ் ஏ டாங்கே சம்யுக்த மகாராஷ்டிரா வேண்டுமென்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திர பிரதேசம் கர்நாடகம் மலபார் தேவிகுளம் பீர்மேடு போன்றவை எல்லாம் இணைந்து இருந்தது. கன்னியாகுமரி செங்கோட்டை நீங்கலாக. ஐக்கியத் தமிழகம் வேண்டும் என்று ஜீவா அவர்கள் கூறும் போதும் அதற்கான கூட்டங்கள் நடந்த போதும் நல்ல கண்ணு வந்து கலந்து கொண்டார். ஜீவா சிலப்பதிகாரம் கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் மிக தேர்ச்சி பெற்றவர். கம்பராமாயணத்தை எரித்து அண்ணா அன்று “தீ பரவட்டும் “என்று பிரச்சாரம் செய்த போது ஜீவா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழின் புதிய சொல்லாட்சி முறையில் கம்பன் எழுதிய கம்ப ராமாயணம் தமிழின் இலக்கிய சாட்சிக்கு மிக முக்கியமானது என்று ஜீவா வலியுறுத்தினார். தமிழ் கூறும் நல் உலகத்திற்கு அது ஒரு கொடை என்றும் வர்ணித்தார். கம்பருடன் திருவள்ளுவர் பாரதியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று ஜீவா பல வகையில் தன் புலமை சார்ந்து எடுத்துரைத்தார். தொடக்கத்தில் திராவிடர் கழக பெரியாருடன் நட்பாக இருந்து ஆதரித்து வந்த ஜீவா இம்மாதிரி இலக்கிய வளமைகள் காரணமாக அதைப் பெரியாரியம் மறுத்து கேலி செய்யும் போது பெரியாரை விட்டு அவர்வெளியேறியதும் உண்டு என்றெல்லாம் நல்ல கண்ணு என்னிடம் சொல்லி இருக்கிறார். ஜீவாவிற்கும் சுத்தானந்த பாரதிக்கும் இருந்த நெருக்கம் பற்றியும் கூறிய நல்லகண்ணு அவர்கள் ஜீவா ஒரு பெரிய தலைவராக வந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். அந்த நேரத்தில் திராவிடக் கட்சிகள் மிகுந்த பலத்துடன் இருந்தார்கள். சீனிவாசராவ் பாலதண்டாயுதம் போன்றவர்கள் திராவிட கழகத்தை எதிர்த்தாலும் திராவிட இயக்கத்தவர் தனித்தமிழ் தனி நாடு போன்றவற்றை தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.. என்பதும் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளாக இருந்தது. நல்ல கண்ணு அவர்கள் மிக வருத்தப்பட்டு” என் சங்கரய்யா நாங்கள் எல்லாம் சிறையில் இருந்து சுதந்திரத்திற்கு போராடிய உண்மையான வரலாற்றுக்கு அப்பால் இந்தத் திராவிட இயக்கத்தினர் தனித்தமிழ் தனி நாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து உணர்ச்சிததும்ப மக்களிடம் பேசிப் பேசியே செல்வாக்கு பெற்றுவிட்டனர் என்பதன்றி அது முழுமையான மக்களாட்சி தத்துவத்தை நடத்தவில்லை” என்று வருத்தப்பட்டார். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டமும் ராமர் எதிர்ப்பு போராட்டமும் அவர்களின் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இப்படி அவர் சொன்னதையெல்லாம் எனது குறிப்புகளில் நான் எழுதி வைத்திருக்கிறேன். ஒருமுறை கேரள மூணாறில் இடைத்தேர்தல் நடந்தது. 1952 இல் பொதுவுடைமை கட்சி அங்கு போட்டியிட்டது. அப்போது இ எம் எஸ் அவர்கள் சொன்னார் நாங்கள் முதலமைச்சர் அதிகாரத்தில் இருக்கிறோம் ஆகவே நாங்கள் மூணாறு வந்து பிரச்சாரத்தை செய்ய மாட்டோம் செய்வதும் நல்லதல்ல என்றும் கண்ணியமாக க் கூறினார். எங்களது கட்சிக்காரர் வேட்பாளராக நிற்பதால் நாங்களோ அமைச்சர்களோ வரமாட்டோம் என்று கூறிவிட்டார். இப்படி அவர் சொன்ன பிறகு தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எல்லாம் மூணாறு சென்று பிரச்சாரம் செய்து பொது உடைமை கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தோம் என்றெல்லாம் நல்ல கண்ணு கூறினார். இப்படி ஒரு இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள் உட்படபிரச்சாரத்திற்கு செல்ல மாட்டோம் மக்கள் எங்களை மதித்து ஓட்டு போடுவார்கள் என்று நம்பிய இ எம் எஸ் அவர்களின் நேர்மையை நினைத்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இங்கு இடைத்தேர்தல் என்றால் ஒரு ஊரையே அமைச்சரிடம் கொடுத்து விடுகிறார்கள் எவ்வளவு செலவு எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும்! எப்படி இடைத்தேர்தலை லஞ்ச லாவண்யம் மூலம் கைப்பற்ற வேண்டும் என்றெல்லாம் மிக மோசமான முறையில் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை நினைத்தால் கால வேறுபாடுகளைப் பற்றி கவலை தான் மிஞ்சுகிறது. இன்னும் சொல்வதானால் நல்லகண்ணு அவர்கள் தொ மு சி ரகுநாதன் மு அழகிரிசாமி கி ராஜநாராயணன் ஜெயகாந்தன் பொன்னிலன் தி க சி கு சின்னப்ப பாரதி கவிஞர் சிற்பி கவிஞர் தமிழ்ஒளி பாவலர் வரதராஜன்2/4Saturday, April 11, 2026
திருமணத்தை நா வானமாமலை முன்னின்று நடத்தி வைத்தார். இவர்களெல்லாம் கம்யூனிஸ்ட் போராட்டத்தை இணைந்து முன் எடுத்தார்கள். அப்போது ராஜாஜி கம்யூனிசத்துக்கு முழுமையான எதிரியாக இருந்தார். அன்றைக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன கம்யூனிஸ்ட்களும் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார்கள் அந்த நேரத்தில். பா ஜீவானந்தம் ஐக்கிய தமிழகம் என்ற நூலில் கன்னியாகுமரி மாவட்டத்துடன் செங்கோட்டையும் திருநெல்வேலியும் இணைக்க வேண்டும் என்று எழுதினார். ஆந்திராவில் சுந்தரய்யா விசால ஆந்திரம் வேண்டுமென்று கம்யூனிஸ்ட் சார்பாக முன்னெடுத்தார். அதேபோல் கேரளத்தில் நம்பூதிரி பாட் நவ கேரளம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்! பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ் ஏ டாங்கே சம்யுக்த மகாராஷ்டிரா வேண்டுமென்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திர பிரதேசம் கர்நாடகம் மலபார் தேவிகுளம் பீர்மேடு போன்றவை எல்லாம் இணைந்து இருந்தது. கன்னியாகுமரி செங்கோட்டை நீங்கலாக. ஐக்கியத் தமிழகம் வேண்டும் என்று ஜீவா அவர்கள் கூறும் போதும் அதற்கான கூட்டங்கள் நடந்த போதும் நல்ல கண்ணு வந்து கலந்து கொண்டார். ஜீவா சிலப்பதிகாரம் கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் மிக தேர்ச்சி பெற்றவர். கம்பராமாயணத்தை எரித்து அண்ணா அன்று “தீ பரவட்டும் “என்று பிரச்சாரம் செய்த போது ஜீவா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழின் புதிய சொல்லாட்சி முறையில் கம்பன் எழுதிய கம்ப ராமாயணம் தமிழின் இலக்கிய சாட்சிக்கு மிக முக்கியமானது என்று ஜீவா வலியுறுத்தினார். தமிழ் கூறும் நல் உலகத்திற்கு அது ஒரு கொடை என்றும் வர்ணித்தார். கம்பருடன் திருவள்ளுவர் பாரதியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று ஜீவா பல வகையில் தன் புலமை சார்ந்து எடுத்துரைத்தார். தொடக்கத்தில் திராவிடர் கழக பெரியாருடன் நட்பாக இருந்து ஆதரித்து வந்த ஜீவா இம்மாதிரி இலக்கிய வளமைகள் காரணமாக அதைப் பெரியாரியம் மறுத்து கேலி செய்யும் போது பெரியாரை விட்டு அவர்வெளியேறியதும் உண்டு என்றெல்லாம் நல்ல கண்ணு என்னிடம் சொல்லி இருக்கிறார். ஜீவாவிற்கும் சுத்தானந்த பாரதிக்கும் இருந்த நெருக்கம் பற்றியும் கூறிய நல்லகண்ணு அவர்கள் ஜீவா ஒரு பெரிய தலைவராக வந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். அந்த நேரத்தில் திராவிடக் கட்சிகள் மிகுந்த பலத்துடன் இருந்தார்கள். சீனிவாசராவ் பாலதண்டாயுதம் போன்றவர்கள் திராவிட கழகத்தை எதிர்த்தாலும் திராவிட இயக்கத்தவர் தனித்தமிழ் தனி நாடு போன்றவற்றை தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.. என்பதும் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளாக இருந்தது. நல்ல கண்ணு அவர்கள் மிக வருத்தப்பட்டு” என் சங்கரய்யா நாங்கள் எல்லாம் சிறையில் இருந்து சுதந்திரத்திற்கு போராடிய உண்மையான வரலாற்றுக்கு அப்பால் இந்தத் திராவிட இயக்கத்தினர் தனித்தமிழ் தனி நாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து உணர்ச்சிததும்ப மக்களிடம் பேசிப் பேசியே செல்வாக்கு பெற்றுவிட்டனர் என்பதன்றி அது முழுமையான மக்களாட்சி தத்துவத்தை நடத்தவில்லை” என்று வருத்தப்பட்டார். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டமும் ராமர் எதிர்ப்பு போராட்டமும் அவர்களின் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இப்படி அவர் சொன்னதையெல்லாம் எனது குறிப்புகளில் நான் எழுதி வைத்திருக்கிறேன். ஒருமுறை கேரள மூணாறில் இடைத்தேர்தல் நடந்தது. 1952 இல் பொதுவுடைமை கட்சி அங்கு போட்டியிட்டது. அப்போது இ எம் எஸ் அவர்கள் சொன்னார் நாங்கள் முதலமைச்சர் அதிகாரத்தில் இருக்கிறோம் ஆகவே நாங்கள் மூணாறு வந்து பிரச்சாரத்தை செய்ய மாட்டோம் செய்வதும் நல்லதல்ல என்றும் கண்ணியமாக க் கூறினார். எங்களது கட்சிக்காரர் வேட்பாளராக நிற்பதால் நாங்களோ அமைச்சர்களோ வரமாட்டோம் என்று கூறிவிட்டார். இப்படி அவர் சொன்ன பிறகு தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எல்லாம் மூணாறு சென்று பிரச்சாரம் செய்து பொது உடைமை கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தோம் என்றெல்லாம் நல்ல கண்ணு கூறினார். இப்படி ஒரு இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள் உட்படபிரச்சாரத்திற்கு செல்ல மாட்டோம் மக்கள் எங்களை மதித்து ஓட்டு போடுவார்கள் என்று நம்பிய இ எம் எஸ் அவர்களின் நேர்மையை நினைத்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இங்கு இடைத்தேர்தல் என்றால் ஒரு ஊரையே அமைச்சரிடம் கொடுத்து விடுகிறார்கள் எவ்வளவு செலவு எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும்! எப்படி இடைத்தேர்தலை லஞ்ச லாவண்யம் மூலம் கைப்பற்ற வேண்டும் என்றெல்லாம் மிக மோசமான முறையில் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை நினைத்தால் கால வேறுபாடுகளைப் பற்றி கவலை தான் மிஞ்சுகிறது. இன்னும் சொல்வதானால் நல்லகண்ணு அவர்கள் தொ மு சி ரகுநாதன் மு அழகிரிசாமி கி ராஜநாராயணன் ஜெயகாந்தன் பொன்னிலன் தி க சி கு சின்னப்ப பாரதி கவிஞர் சிற்பி கவிஞர் தமிழ்ஒளி பாவலர் வரதராஜன்2/4
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment