எப்போதும் ராஜ்யசபா தேர்தல் வரும் போதெல்லாம் திமுக ஒரு கூட்டு கணக்கைப் போடும். 2011 இல் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் சேர்ந்த போது அதற்கு சவால் விடும் வண்ணம் தங்கவேலுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுத்துவிட்டால் தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்று கலைஞர் திட்டமிட்டார். உண்மையில் அது எனக்கு அன்று சொல்லி ஒதுக்கப்பட்ட ராஜ்ய சபா சீட்.! தங்கவேலுக்கே கொடுத்து விட்டார்கள்.
இன்றைக்குக் கடற்கரையோர மீனவர்கள் திமுகவின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை கணக்கில் எடுக்காமல் மாற்றாக பத்து வருடத்திற்கு முன்பாக தேமு திமுகவிலிருந்து வந்த கான்ஸ்டன்டைன் என்பவருக்கு ராஜ்ய சபா கொடுத்துள்ளார்கள். இந்த கான்ஸ்டைன்டைன் என்பவர் நீண்ட நெடுங்காலமாக திமுகவிலும் கலைஞருடைய அன்பில் இருந்தவரா? இல்லை கலைஞருடன் நெருங்கி பழகியவர் என்பதற்காகக் கொடுத்தார்களா இல்லை மீனவர் ஓட்டுகளைப் பெறுவதற்காக கொடுத்தார்களா? அடிப்படையில் அவர் யார் என்றே தெரியாமல் இப்பொழுது வந்தவருக்குக் கொடுத்துள்ளார்கள். தமிழ் தாசன் என்பவர் அண்ணா காலத்தில் இருந்து நீண்ட காலமாகத் திமுகவில் இருக்கிறார். ஆங்கிலமும் தமிழும் கற்றவர்!முரசொலியில் நிறைய எழுதியவர்! அவருக்குக் கொடுக்கலாமே! இப்படி பாரம்பரியமாகத் திமுகவை நம்பி அதற்கான அடிப்படை வேலைகளைச் செய்து அங்கேயே இருந்து கடைசி வரை பணிகளை ஆற்றியவர்களுக்கு ஏன் இந்த ராஜ்யசபா சீட் போன்றவை மறுக்கப்படுகிறது!?. அதிமுகவில் இருந்து யார் ஒருவர் வந்தாலும் அவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் இந்த ஸ்டாலினுக்கு ஏதேனும் சிந்தனைத் தெளிவு இருக்கிறதா? இன்றைக்கு வந்திருக்கும் அதிமுக காரர்கள் தான் ஸ்டாலினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் ஐநா சபையிலும் கொண்டு போய் பேச வைத்தார்களா? இந்த ஸ்டாலின் அடிப்படையில் ஒரு புரிதல் இல்லாத மனிதர்! ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்பது மாதிரியே கடைசி வரைக் காட்டிக் கொள்வார். அதற்கு வேறு அழுத்தமான காரணங்கள் எதுவும் இருக்காது. தன்னைவிடக் கொஞ்சம் விவரம் தெரிந்தவர் என்றாலே அருகில் அனுமதிக்க மாட்டார். ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று ஆழ்ந்து பார்க்கவோ அவரிடம் என்ன திறமை இருக்கிறது அவரைப் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவும் கூட இல்லாதவர். இப்படி அவர் போக்கில் இருப்பதற்கு காலமும் இயற்கையும்தான் பதில் சொல்ல வேண்டும். அதேபோல் அவர்கள் தங்கை கனிமொழி ஏதோ உலகத்தை அதன் தத்துவத்தை எல்லாம் படித்த மேதை மாதிரி சாணக்கியதந்திரங்கள் உள்ளவர் போல அவரை மிகைப்படுத்தி இப்போது எல்லாம் காட்டுகிறார்கள். அவர் ஒரு பக்கம் அரசியல் செய்கிறார். கலைஞரின் பிள்ளைகள் என்றாலே பெரிய அறிவுள்ளவர்கள் மேதைகள் என்பது மாதிரி ஒரு பொய் தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்களை விடப் புரிந்தவர்கள் அறிந்தவர்கள் இயக்கத்தோடு கழகத்தோடு வேலை செய்தவர்கள் சிறைக்குச் சென்றவர்கள் தியாகம் செய்தவர்கள் வரலாற்றை அறிந்தவர்கள் அரசியல் நடைமுறையும் புரிந்தவர்கள் எத்தனையோ பேர் எந்த வாய்ப்பும் இல்லாமல் இன்று வரை இருக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கெடுக்காமல் இவர்கள் இஷ்டத்திற்கு யாருக்கும் ராஜ்ய சபா சீட் கொடுக்கிறார்கள் என்றால் இவர்கள் மனிதர்களே கிடையாது!? அதிமுகவிலிருந்து வந்தவர்களை விடவும் திமுகவில் ஏற்கனவே இருப்பவர்களும் இதை எல்லாம் கேட்க இல்லாமல் அடிமைகளாகத் தானே இருக்கிறார்கள். இல்லை நீங்கள் செய்வது தவறு என்று எங்களைப் போன்றவர்கள் சொன்னால் எங்களுக்கெல்லாம் திமுகவில் இடமில்லை.நாங்கள் என்ன ஸ்டாலினைக் கடுமையாகத் திட்டினோமா எதிர்வினை செய்தோமா என்ன துரோகம் செய்தோம்?திமுகவிற்காகத்தானே அவ்வளவு சிரமப்பட்டு உழைத்தோம். ஸ்டாலினுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பது தவறானது தானே நேர்மையாகவும் அடிப்படைக் கொள்கைக்கு உழைப்பவர்களாகவும் மக்களை சந்திப்பவர்களாகவும் இருந்தது தவறா? இல்லை ஸ்டாலின் தயவு இருந்தால்தான் சாப்பிட முடியுமா? அல்லது அவரதுதயவு இருந்தால் தான் தூங்க முடியுமா? இத்தனை வருட அனுபவத்தில் எ டு இஸட் அவரை அறிந்தவர்கள் நாங்கள். இன்றைய ஜால்ரா பார்ட்டிகள் ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்த மன்னாதி மன்னன் மாதிரி அவரைப் போற்றிப் பாடுகிறார்கள். இதையெல்லாம் பேசுவதற்காக வந்ததாக சொல்லிக் கொண்ட வைகோ இன்றைக்கு அவர் பாதுகாப்பில் ஒடுங்கி உட்கார்ந்து இருக்கிறார். வேறு என்னத்தைச் சொல்வது? #Rajysabhaelection #TamilNaduPolitics #ராஜ்யசபாதேர்தல் #தமிழகரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment