தன்னை அறிந்து பேசுங்கள் தனக்கான இடம் என்ன என்பதையும் தெரிந்து பேசுங்கள் விஜய்! ஆந்திரத்தில் நடிகர் சிரஞ்சிவி, பிகாரில் சத்துரகன் சின்கா, தமிழகத்தில் சிவாஜி, ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த என்ற பலரின் நிலை…
எல்லோரும் எம்ஜியார் , என்டிஆர் உடனே ஆகிட முடியாது….!
———————————————————
அந்தப் பிரச்சனை இந்தப் பிரச்சனை அதன் தள பாடங்கள் எல்லாம் எனக்குத் தெரியும் என்று புத்தி சிகாமணி பேசுவது போல பேசும் விஜய் அவர்களே! நாங்கள் கேட்கும் வினாக்களுக்கு நீங்கள் பதில் சொல்ல முடியுமா? நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பிரச்சினை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சேலம் இரும்பு ஆலை பிரச்சனை என்ன! கச்சத்தீவின் வரலாற்று சிக்கல்களும் அதன் பிரச்சினைகளும் என்ன! இப்போதுவரை அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? சேது சமுத்திரத் திட்டம் என்றால் என்ன? இதுவரையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் தீராது இருக்கும் காவேரி நதிநீர்த் தாவா என்றால் என்ன? முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றால் என்ன? கன்னியாகுமரி நெய்யாறு பிரச்சனை என்றால் என்ன? அச்சன் கோவில் வைப்பாறு நீர் பிரச்சனை என்றால் என்ன? செண்பகவல்லி அணையின் சீரமைப்பு பணி என்றால் என்ன? ஆழியாறு பரம்பிக்குளம் ஆண்டியாறு புன்னம்புழா அமராவதி பம்பாறு காவேரி ஒகேனக்கல் பொன்னியாறு பாலாறு போன்ற நதிநீர் பிரச்சனைகள் அண்டை மாநிலங்களில் அதற்காக இதுவரையில் நடக்கக்கூடிய வழக்குகள் ஏதாவது உங்களுக்கு அதன் நீள அகலங்கள் வரையாவது தெரியுமா? இல்லை நீங்கள் அதற்காக உங்கள் ரசிக குஞ்சுகளோடு போராடித்தான் அரசியலுக்குள் வந்திருக்கிறீர்களா?
இந்துமகா சமுத்திரத்தில் கால் கொண்டுள்ள சர்வதேச அரசியல் ராணுவத் தளங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது நாள் வரையில் தமிழ்நாட்டின் நெசவாளர்கள் பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை என்பதில் எல்லாம் உங்களுடைய கணிப்பு என்னவாக இருக்கிறது.
இப்படியாகத் தமிழ்நாடு அதைச் சுற்றியுள்ள பல பிரச்சனைகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு நீங்கள் வெளியே வாருங்கள்! நாங்கள் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்கின்றோம்!உங்களால் அது குறித்த முன்னேற்பாடுகள் திட்டங்கள் அதற்கான விடிவுகள் குறித்த கருத்துக்கள் அதற்காக ஏதேனும் பதிலாக நீண்ட தொலைநோக்குடன் கூடிய திட்டங்களைச்சொல்ல முடியுமா அல்லது அப்படியான முன்னேற்பாடுகள் ஏதும் உங்களிடம் இருக்கிறதா?
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல மக்கள் முன்னாடி நின்று எதையாவது பேசிவிட்டுத் தப்பிச் செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களுடைய அளவு என்ன? என்பது எங்களுக்கு தெரியும்! இன்றையத் தமிழகத்தின் புதிய இளம் தலைமுறைகளிடம் உங்களது செல்வாக்கு இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.. நீங்கள் இதுவரை நடித்து வந்த சினிமாக்களின் மீதான மோகம் கொண்ட ரசிகர்கள் உங்கள் பின்னால் ஓடி வருகிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறோம். அதைத் தவறு என்றெல்லாம் சொல்லவில்லை.
ஆனால் சுதந்திரத்திற்கு பின்பு இந்த இந்திய பிராந்திய மக்கள் உரிமைகளைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலமாக அரசியல் ஸ்திரத்தன்மையை மக்கள் அனைவருக்கும் உரிமைப்படுத்துவதற்காக ஏராளமான அறம் சார்ந்த சாதி மத இன பேதமற்ற மனிதர்கள் உழைத்துள்ளார்கள். மக்கள் நலம் சார்ந்து தொண்டுள்ளத்தோடு அவர்கள் இது நாள் வரையில் அரசியலுக்கும் வரலாற்றுக்கும் பின்னால் நிற்கிறார்கள். என்றைக்கு அரசியலில் வணிகர்கள் உள்ளே நுழைந்தார்களோ என்றைக்கு சினிமாவின் கவர்ச்சி நிறைந்த கதாநாயகர்கள் கதாநாயகிகள் மக்களை மயக்கி தாங்களும் அரசியல்வாதிகள் தான் என்று சொல்லிக் கொண்டு வந்தார்களோ அன்றையோடு இந்த மக்கள் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்ததை நான் ஞாபகப்படுத்துகிறேன். முற்றிலும் அரசியல் கவர்ச்சிகரமான வணிகமயமாகிவிட்டது. இந்த இடத்தில் தான் உங்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கையும் தொடங்குகிறது.
எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று உங்களுக்கு என ஒரு செல்வாக்கை கற்பனையாக எடுத்து வைத்துக்கொண்டு பேசுவது முறையாகாது. இந்த அரசியலில் நேரு இந்திராகாந்தி மன்மோகன் சிங் வாஜ்பாய் அத்வானி இன்றைய பிரதமர் மோடி வரை தமிழ்நாட்டில் பெரியார் அண்ணா கலைஞர் வைகோ நெடுமாறன் எம்ஜி ஆர் ஜெயலலிதா போன்ற பலரையும் சந்தித்து அவர்களுடன் அரசியல் நடத்தி மக்களைச் சந்தித்து அரசியல் வாழ்வை மேற்கொண்ட பலரும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் வாய்ப்புகளுக்காக பதவிகளுக்காகப் பணத்துக்காக இவர்களோடு இணைந்து இருக்கவில்லை. ஒரு இந்தியப் பெரும் தேசியத்தின் ஒருமைப்பாட்டுக்காக ஒரு பிராந்திய அரசியலில் உண்மையான மக்கள் உரிமைகளின் பாதுகாப்பாளர்களாக அவர்கள் அதில் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்கள். நடிகர் விஜய் அவர்களே நீங்கள் பிறப்பதற்கு முன்பு இருந்து இந்திய ஒருமைப்பாடு சர்வதேச தொடர்புகள்1/2
Translated from Tamil
The politics of the inner national regional states operates with unity in diversity, marked by various unique characteristics, and today, to the extent of establishing India's global prestige and the rights of its people, leaders with diverse political experiences—who have nurtured and developed it without merely representing it—have emerged and arrived here. For many of them, the times and opportunities to assume leadership may never come. But since you have managed to secure such times and opportunities through cinema, appearing before the people and delivering film dialogues as if you can speak about anything strikes one as laughable. We too possess the political wisdom to handle it civilly if the people express support for someone else. But the way you've set foot in Tamil Nadu politics feels just like children's play.
And that too—sitting inside a cart and discoursing on politics, like the companies that set up shop inside carts during temple festivals—comes across as quite amusing. Moreover, the way you speak, as if you're some great intellectual, amounts to utter nonsense that doesn't align with history or political practice.
There are certain political norms, a few boundaries, and some beliefs when it comes to speaking about anything. To go beyond all that and keep proclaiming, "I know everything! I'm the leader of it all!" is nothing but the plight of a pitiable man. For the sake of your political entry, some experienced predecessors graciously—or for the sake of democratic rights—yield certain things to you, for your rights. Thinking that entitles you to say whatever you want only reveals empty arrogance.
Know yourself before you speak, Vijay! Speak knowing what your place is! The status of actors like Chiranjeevi in Andhra, Shatrughan Sinha in Bihar, Sivaji, Rajinikanth, Kamal, Vijayakanth in Tamil Nadu...
Not everyone can instantly become MGR or NTR...
#actorVijay
#tvk
#tamilnadupoltics
#விஜய
#தமிழகஅரசியல்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
No comments:
Post a Comment