#ஆர்_நல்லகண்ணு என்ற எளிமை
————————————————— அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று தமிழில் மூதுரை உள்ளது. பொதுவாக மனிதர்கள் தங்களின் இளம் பருவதில் அல்லது தான் பிறந்த இடத்தின் சுற்றுப்புறத்தை அங்கு நிலவும் நன்மை தீமைகளைக் கண்டு ஒரு நியாய உணர்ச்சியின் அடிப்படையில்தான் தங்களுக்கான பிற்கால க் கொள்கைகளை வகுத்துக் கொள்கிறார்கள். சிலர் அதன் பொருட்டு உறுதியாகவும் இருப்பார்கள். நாளடைவில் அவர்களுடைய கல்விப் பருவங்கள் அனுபவங்கள் அனைத்தும் ஒன்று சேரும்போது” தான் எதன் பக்கம் நிற்க வேண்டும்” என்பதை அறிகிறார்கள். அப்படி ஒரு சிறு பிராயத்தை வகுத்துக் கொண்டவர் தான் ஈடு இணையற்ற தலைவராக இன்று வரை விளங்கிக் கொண்டிருக்கிற நூறு வயதை தொட்டுவிட்ட அருமைத் தலைவர் தோழர் நல்லகண்ணு! அவர்களைப் பற்றிய என் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடைகிறேன். பொதுவுடைமையை இயக்கத் தலைவர் நல்லகண்ணு 101… போராடி உயர்நிலையை அடைந்து; அனைவரும் போற்றும் வண்ணம் அரசியல் களத்தில் உயர்ந்து நின்றார். எங்கள நெல்லை மாவட்ட அரசியலில் இவரோடு மற்றும் நீண்ட கால சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ. அழகர்சாமியோடு 1972 முதல் இருந்தவன். அக்காலத்தில் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 ஆம் ஆண்டின் வருட இறுதி டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நல்ல கண்ணு பிறக்கிறார். வளர்ந்து 18 வயது ஆனபோதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொள்கிறார். அது பிரிட்டிஷாரின் ஆட்சி காலம்! இந்தியக் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. முதன்முதலாக 1914 இல்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிமுகமும் துவக்கமும் நிகழ்ந்தது. டாங்கே நம்பூதிரி பாட் போன்ற தலைவர்கள் இந்தியா முழுக்க உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்க்கான இடதுசாரி இயக்கங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருந்த வேளையில் அவ்வியக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு 25 ஆண்டு காலம் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் நல்ல கண்ணு திகழ்ந்தார். அவரது தீரமிக்க செயல்களில் ஒன்று என்னவெனில் அந்த இளம் வயதிலேயேஸ்ரீவைகுண்டம் பகுதியில் தனியார் சிலர் அரசு விரோதமாக ப்பதுக்கி வைத்திருந்த இரண்டாயிரம் நெல் மூடைகளை கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். அப்போதுதான் நல்லகண்ணு அவர்கள்இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். ஆங்கிலேயர் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது . வெடிகுண்டு வைத்திருந்ததாகச் சொல்லி நெல்லைச் சதி வழக்கில் நல்ல கண்ணு கைது செய்யப்பட்டார். சிறையில் பல சித்திரவதைகளுக்கும் புண்படுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார் அவரது முகத்தில் இருந்த மீசையை நெறுப்பால் கறுக்கியம் வேரோடு பிடுங்கியும் சித்திரவதை செய்த பிரிட்டிசார் அவரைப்பல அடக்குமுறைக்கு உள்ளாக்கினார்கள்! அதன் பொருட்டு தான் ஒருபோதும் தான் இனி மீசை வைத்துக் கொள்ளப்போவதில்லை என்று இன்றுவரை மழித்த முகமாகவே இருக்கிறார்!. ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை!” நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்த எங்கள் அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.” என்று சொல்லும் நல்லகண்ணு அவர்கள் இன்று 100 வயதைத் தொட்டு இருக்கிறார்! அவர் அந்த சதி வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தபோது தூக்கிடக் கொண்டு சென்ற கம்யூனிஸ்டு கிளர்ச்சியாளர் பாலன் அவர்களைக (அதிலிருந்து மீண்டு தூக்குமர நிழலில் என்ற நூலை எழுதியவர்) அழைத்துச் சென்றபோது சிறைக்கு முன்பு கூடியும் உள்ளேயும் இன்குலாப் ஜிந்தாபாத் செங்கொடி வாழ்க என்று நாங்கள் எல்லாம் உணர்ச்சித் ததும்பக் கோஷமிட்டடோம் என்றுஅவர் என்னிடம் சொல்லக் கேட்டதுண்டு.. அப்போது சிறையில் இருந்த பி ராமமூர்த்தியும் தலைமறைவாக இருந்த மணலி கந்தசாமியும் பிரச்சாரத்திற்கு செல்லாமலே மக்களை சந்திக்காமலேயே சுதந்திரத்திற்கு பிறகான சட்டமன்றத் தேர்தலில் 1952ல் வெற்றி பெற்றார்கள். மேலும் சிறையில் இருந்த தோழர் பாலதண்டாயுதம் அவர்களை நாக்பூர் சிறைக்கு மாற்றிவிட்டார்கள். சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பல கோரிக்கைகளுக்காகப் போராடியதை எல்லாம் நல்லகண்ணுஎன்னிடம் சொல்லி உள்ளார். அதேபோல மாயாண்டி பாரதி பா மாணிக்கம் போன்ற தலைவர்களெல்லாம் நல்ல கண்ணுவுடன் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தார்கள். சிறையில் நல்லகண்ணு அவர்களுடைய எண் 96 58! அவர் சிறையில் இருந்த போது எழுதிய எழுத்துக்கள் கடிதங்கள் போன்றவற்றை இன்னும் பத்திரமாக வைத்துள்ளார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பள்ளி ஆசிரியர் திருமதி ரஞ்சிதம் அவர்களுடன் திருமணம் நடந்தது!1/4
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment