மறைந்த விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா ஸ்டாலினைச் சந்தித்து திமுகக் கூட்டணியில் இணைந்துள்ளார். சரி நன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்! கனிமொழி இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களில் அவைக்கு போட்டியிடும் போது கலைஞர் என்னை அழைத்து அன்றைக்கு தேமுதிகவின் ஒரே ஒரு சட்டமன்ற எம்எல்ஏவாக ஜெயித்து இருந்த விஜயகாந்தின் ஓட்டை கனிமொழிக்காகப் பெற்றுத் தருமாறு கேட்டார். அப்போது அவரை சந்தித்த போது விஜயகாந்த் என்னிடம் கேட்டார். எனது கல்யாண மண்டபத்தை திமுக அரசு காலத்தில் இடித்தனர். அவர்களை ஆதரித்து கனிமொழிக்கு நான் எப்படி வாக்களிக்க முடியும் என்று கேட்டார். புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உடைய ஒரு வாக்கையும் அவரிடம் கேட்டுப் பெற்றுக் கனிமொழிக்காக வாக்களிக்க வைத்தேன். அப்போது என்னோடு முன்னாள் அமைச்சர் தங்கவேலுவும் வந்திருந்தார். கிருஷ்ணசாமி அவர்களும் தனது வாக்கை கனிமொழிக்காக அளித்தார். அதேபோல 2016 தேர்தலில் கலைஞருடன் வைகோவைச் சந்திக்க வைத்து அந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடவும் ஏற்பாடு செய்தேன்.! இதற்கிடையே திமுக தோற்க வேண்டும் என்பதன் அடிப்படையில் மிக புத்திசாலித்தனமாக திமுக அதிமுக இரண்டையும் சாராத மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தையும் இணைத்து இரண்டு கம்யூனிஸ்ட்களையும் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவையும் சேர்த்துக்கொண்டு திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறித் தனித்து மாற்று ஏற்பாடு செய்வதாகச் சொல்லிக்கொண்டு விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தலில் நின்றார். விளைவாக திமுகவை தோற்கடித்தனர்!.. இதுதான் தமிழ்நாட்டு அரசியல்!! சோ ராமசாமி சொல்லுவது போல இங்கு யாருக்கும் வெட்கமில்லை!! பழம் நழுவி பாலில்(தவறான ன காலகட்டத்தில்) விழுந்தது... காங்கிரஸ் இல்லா திமுக கூட்டணியில் தேமுதிக? தேமுதிகவுக்கு இருக்கும் .5% வாக்குக்கு திமுக இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கினால் விசிக, இடதுசாரிகள்,வைகோ நிலை… #dmk_dmdkalliance
Saturday, April 11, 2026
மறைந்த விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா ஸ்டாலினைச் சந்தித்து திமுகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.
electoral strength — or electoral optics?
In Tamil Nadu’s intensely competitive landscape, arithmetic defeats nostalgia.
Until DMDK proves ground power again, it risks being viewed not as an asset — but as avoidable weight in alliance politics.2/2
அப்ப #தென்காசி மாவட்டத்தில் ஆர்பாட்டம் நடத்தி கனிமவள கடத்தலை பற்றி தாறு மாறாக பேசியது..
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கனிமவள கட்டத்தலை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னது.
அத்தனையும் பேசின இந்த அம்மையார்.
சொல்ல ஒன்றுமில்லை.
#Vijayakant
Subscribe to:
Post Comments (Atom)
Yoga day column by VP
Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment