தேர்தல் வந்துவிட்டால்
சின்னம் வரைவது தான் முதல் வேலை. வெள்ளையடிக்கப்பட்ட வீட்டுச் சுவர்களில் சொல்லி வைத்து... திமுக தோழர்கள் ஆக்கிரமிக்கு முன் இரட்டைக்காளைச் சின்னத்தை அரிதாகவும்,அழகாகவும் வரையும் மஜீத்பாய் கூடவே சுற்றி அழைத்து வந்து சின்னம் வரைய வேண்டும். இது முதற்கட்ட தேர்தல் வேலை.. ஜனசங்கம் தீப சின்னம். கமயூனிஸ்ட சின்னங்கள் கதிர்அறுவாள், அறுவாள் சுத்தியல் நட்சத்திரம் சோஸிலிஸ்டுகள் குடிசை, ஆலமரம் சுதந்திரா நட்சத்திரம் பார்வோடு பிளாக் சிங்கம்….என சின்னங்கள்! அப்புறம் டோர்சிலீப் ஒட்டவேண்டும். பசை காய்ச்சுதல் ஒரு பெரும்பணி. பதம் பார்த்துக் காய்ச்சி ஆறவைத்து, அளவாகப் பயன்படுத்தி தூங்கும் வீட்டுக்காரர்கள்.. ஓசை கேட்டு எழுந்து வராமல் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டியபணி. காலையில் பாராட்டும் உண்டு. கோப விளாசல்களும் கேட்கும். சிலர் கிழித்து விடுவார்கள். அந்த வீட்டு ஓட்டு நமக்கில்லை என்பது வெளிப்படை அறிதல்.. அபேட்சகர்கள் அறிவிப்புக்குப் பின் அவர் பெயருடன் சின்னம் பொறித்த நோட்டீஸ் வரும். அதை கையில் எடுத்துக்கொண்டு வார்டு,தெரு என்ற அளவில் இருக்கும் கட்சிக்காரர்களுடன் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பது. அபேட்சகர் வரும் நாளில் அவரையும் அழைத்துச் சென்று ஓட்டு கேட்பது. வாசல் தாண்டி உள்ளே அழைப்போரும், குடிக்க தண்ணீர் தருவோரும் நமக்கே ஓட்டுப் போடுவார்கள் என்பது நம்பிக்கை. காய் அறுக்கரே என்போரும் நோட்டீஸ் போட்டுட்டு போ எனும் குரல் எதிரணி என மதிப்பீடு. இப்படி துவங்கிய தேர்தல் பணிகள் இன்று அதிகாரப் பகிர்விலிருந்து ஆரம்பமாகிறது.. ஓட்டை விலைக்கு பணம் கொடுத்து இன்று வாங்கும் நிலையில்…. மது, ஆறு சுவை அசைவ உணவு என்று இன்றைய ஜனநாயகம்…… இதுவும் கடந்து போகுமா…..எப்படி
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment