Tuesday, April 28, 2026

#நயினார்நாகேந்திரன்அவர்கள்

 #நயினார்நாகேந்திரன்அவர்கள்

#நடிகர்விஜய்அவர்கள் #நடிகைதரிஷாஅவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் த வெ க தலைவர் நடிகர் விஜயிடம் தமிழ்நாடு இருக்கட்டும் முதலில் நடிகை திரிஷாவின் பிடியில் இருந்து வெளியே வாருங்கள் என்று எதார்தமாக சொன்னார்.! அவ்வாறு சொன்னதன் உண்மைத் தன்மை என்னவெனில் விஜயின் எதிர்கால அரசியல் குறித்த அக்கறை மட்டுமே தவிர அது தவறான அல்லது யாரையும் கொச்சைப்படுத்திய பேச்சாகவும் இல்லை. ஆனால் அவர் அப்படிச் சொன்னது தமிழ்நாடு முழுக்க ஒரு விவாதப் பொருளாக மாறி இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள்,முற்போக்கு பெண்ணியவாதிகள் எல்லோரும் எப்படி ஒரு பெண்ணை இப்படி ஒரு தமிழகத் தலைவர் கொச்சைப்படுத்தலாம் என்றெல்லாம் கேட்டு பண்பான அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள். ஆனால் தமிழகம் முழுக்க தெரிந்த அதாவது விஜய்க்குத் திரிஷாவுடன் இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை எல்லாம் அறிந்திருந்த அடிப்படையில் தான் நயினார் நாகேந்திரன் அவர்கள் அவ்வாறு கேட்டார் என்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? அது ஒன்றும் யாரும் அறியாத இரகசியமெலாம் இல்லையே. இருந்தாலும் அவர் மீது எகிறி அடித்து எப்படி ஒரு பெண்ணைப் பற்றி நீங்கள் இவ்வாறு அவதூறு பேசலாம் என்று கேட்ட , இப்படியாகப் பெண் போராளிகள் தமிழக அரசியல் தலைவர்கள படையெடுத்த போது அவரும் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். நாகரிகமாக, கண்ணியமாக வேறு என்ன செய்வது? சரிதான் போகட்டும்! ஆனால் இப்போது விஜயின் மனைவியான சங்கீதா அவர்களே இப்படி ஒரு குற்றச்சாட்டை குறிப்பாக திரிஷாவின் பெயரை வாக்கு மூலத்தில் சொல்லியே தன்னை த் தன் கணவரான விஜய் மனைவி என்றும் பாராமல் ஒரு நடிகைக்காகப் புறக்கணித்தார்!ஆகவே விவாகரத்து வேண்டும் என்று கேட்கிற போது த்ரிஷாவுக்குப் போராடிய பெண் போராளிகள் இந்தத் துயருற்ற எதிர்காலம் குறித்த அச்சத்துடன் இருக்கும் சங்கீதாவுக்கு ஏன் தாங்களாகவே முன்வந்து போராடாமல் இருக்கிறார்கள்? ஏன் மௌனம் காக்கிறார்கள்? இந்தச் சூழலுக்கு முற்போக்குப் போராளிகள் அதுவும் பெண் போராளிகள் பதில் சொல்வார்களா? சங்கீதாவும் பெண் தானே! முற்போக்குப் பெண்ணியவாதிகளை விட வேறு எந்த ஆண் அரசியல்வாதிகளும் கூட இதை என்னவென்று கேட்காமல் மௌனம் சாதிக்கிறார்களே! இப்போது விஜயின் மனைவியின் சார்பில பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தன் நிலைப்பாட்டின் மூலம் பேட்டி கொடுக்கப்படுகிறது.. நயினார் நாகேந்திரன் அவர்களின் கேள்விக்குப் பொங்கிய வைகோ உட்பட அரசியல் தலைவர்கள் பெண்ணியவாதிகளும் அரசியல் முற்போக்காளர்களும் சங்கீதா விடயத்தில் எதுவும் பேச இயலாமல் வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறார்களா? இல்லை மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்கள் விஜயிடம் கேட்ட சொன்ன அறிவுரைகளில் ஏதேனும் தவறு இருக்கிறதா? இந்தப் பரபரப்பு அரசியலுக்கு எல்லாம் ஒருபோதும் அறம் அஞ்சாது! Tailpiece ~நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இன்னும் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் தனியாக வைத்திருப்பதால், பல வதந்திகள் வருகின்றன. ஆனால் அவர் பல பேட்டிகளில் தெளிவாகக் கூறியவற்றைப் பார்த்தால், முக்கிய காரணங்கள் இவைதான் ~சரியான நபரை சந்திக்கவில்லை ,திரிஷா பலமுறை கூறியிருக்கிறார்: "நான் எனக்கான சரியான ஆளை சந்தித்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன். ஆனால் இப்போது அந்த நேரம் வரவில்லை" (If I meet the right person, I would marry right away, but the timing isn't right yet). 25 வயதில் சரியானவரை சந்தித்திருந்தால் திருமணம் செய்திருப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். ~ 2015-ல் தயாரிப்பாளர் வருண் மணியன் உடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணத்துக்குப் பிறகு நடிப்பை விட்டுவிட வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் (குறிப்பாக வருண்) கேட்டதால், அவர் அதை ஏற்க மறுத்து நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார். இது அவருக்கு மிக முக்கியமான விஷயம்,தனது கேரியரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ~ "திருமணம் ஒரு சமூகத் தேவை அல்ல. காதலால் மட்டுமே திருமணம் நடக்க வேண்டும். பலர் சமூகத்துக்காகத் திருமணம் செய்து பின்னர் பிரிந்து வேதனைப்படுவதைப் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறியிருக்கிறார். வயது முக்கியமல்ல, சரியான நபரும் காதலும் முக்கியம் என்று நம்புகிறார். ~தனி குழந்தை சிண்ட்ரோம் (Single child syndrome) — அவர் ஒரே குழந்தை என்பதால், தனியாக இருப்பதற்கு பழக்கப்பட்டவர். "ஒருவருடன் அறையைப் பகிர்ந்து கொள்ள முடியாது, தனியாகத் தூங்கப் பழக்கம்" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். டேட்டிங் கான்செப்ட்டிலும் அவர் நம்பிக்கை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். ~தற்போது (2026 பிப்ரவரி வரை) திரிஷா திருமணம் செய்யவில்லை,1/2




திருமணத் திட்டமும் இல்லை என்று தெரிகிறது. அவர் தனது கேரியர், விலங்குகள் மீதான அன்பு, தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கிறார். திருமணம் என்பது அவருக்கு "விருப்பம்" மட்டுமே, "கட்டாயம்" அல்ல. ( திருமணம் செய்துதான் வாழ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை நண்பர்களே த்ரிஷா ஒரு முறை கூறினார் நான் Cm ஆகவேண்டும் அதான் என் கனவு என்று, உங்கள் கனவுகள நோக்கி ஓடுங்கள் திருமணம் எல்லாம் தேவையே இல்லை 😏அதே style) #bjp #tvk #trishakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்





No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...