Tuesday, April 28, 2026

#ராஜ்யசபாதேர்தல் என்றால் எனக்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள்.

 #ராஜ்யசபாதேர்தல் என்றால் எனக்கு கலைஞரும் ஸ்டாலினும் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்கள் என்னிடம் இந்த முறை ராஜ்ய சபா சீட்டு உங்களுக்கு தான் என்று உறுதி எல்லாம் கூறிவிட்டு ஏமாற்றிய கதை எல்லாம் உண்டு. கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதியில் 2002 முதல் என் vote extract அதற்கான படிவங்களையும் தயார் செய்து ராஜ்யசபா எம்பி கான தேர்வில் என்னை பரிந்துரைக்க முயன்ற போதும் சட்டென உதாசீனப்படுத்தி அவர்கள் மனம் போன போக்கில் வேறு பெயர்களை அறிவிப்பார்கள்!

. அதுபோல வைகோவும் அதே முறையில் நினைவுக்கு வருவார். 1998 நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை சீட்டை எனக்கெனத் தீர்மானித்து வாங்கப்பட்டு பிறகு அப்படி வாய்ப்பு தர முடியாது என்பதற்காக அவர் சொன்ன காரணம் ஒரே ஜாதியில் இருக்கும் இரண்டு பேருக்கு அந்த சீட்டைத் தர முடியாது என்று கூட்டணித் தர்மம் சொல்கிறது என்றார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பிறகு வேறு வேறு ஜாதிகளில் இருக்கக்கூடிய இரண்டு நபர்களுக்கு தனது கூட்டணியில் சீட்டு கொடுத்தார். இன்று பார்த்தால் அவரும் அவரது மகனுக்குமாக ஒரே ஜாதியில் இந்த சீட்டுகளை வாங்கிக் கொள்கிறார். இப்படித்தான் வைகோ என்னை ஏமாற்றினார். என்ன சொல்ல இப்படிப்பட்ட மனிதர்கள் நல்ல மனிதர்கள்❓பணிகளை இவர்கள் நம்பி சேயதோம் என்றால நம்மை நாம் ஏமாந்து நாசம் ஆனாலும் நேர்மையாக தனித்து இருக்கறோம் என்பது தெம்பு, pride ….இன்றைக்கு எல்லாம் யார் யாரோ ராஜிய சபா சீட்டை பெற்றுக் கொண்டு திமுகக்கூட்டணியில் இடம்பெறுகிறார்கள். தகுதியே தடை என்கிற நிலையில் இந்த ஒட்டுமொத்த அரசியல் வியாபாரிகள் ஒரு நியாயஸ்தனை அதுவும் வாழ்நாள் முழுக்க அவர்களுக்காகத் தொண்டாற்றி உதவி செய்து பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு பல்வேறு தலைவர்களையும் அறிமுகப்படுத்தி நம்பிக்கையுடன் அரசியல் பணி செய்த என்னை எங்கே நிறுத்தினார்கள் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை முன்வைக்கிறேன்! எதுவும் தெரியாத முட்டாள்களுக்காக உழைத்து கொடுத்துவிட்டு எதையும் பெறாமல் வெளியே வந்திருக்கிறேன் என்கிற கவலை எனக்கு இல்லை. ஆனால் அவர்கள் புலம்பும்போது உண்மையில் சகிக்கத்தான் முடியவில்லை. அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை. #RajyaSabhaelections #tamilnadupoltics #தமிழகரசியல் ரசியல்





No comments:

Post a Comment

Oct 22, 2025 அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... சில விடயங்கள் நடக்கின்றன…..

  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... சில விடயங்கள் நடக்கின்றன….. டில்லியும், விஜயவாடாவும் தமிழகத்தை நோக்கின்றன…. பொறுத்திருந்து பார்ப...