Saturday, April 11, 2026
#மின்சாரவாரியத்தின்அவலம்
தமிழக மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து தமிழக மின் உற்பத்திக் கழகம் தனி நிறுவனமாக 2024 ல் பிரிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! இந்த நிறுவனத்திற்குக் கீழ் திருவள்ளூர் தூத்துக்குடி சேலம் போன்ற மாவட்டங்களில் 5120 மெக்காவாட் தயாரிக்கும் திறனில் ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன.
சென்னை நாகை ராமநாதபுரத்தில் 408 மெகாவாட் திறனில் மூன்று எரிவாயு மின் நிலையங்கள் இருக்கின்றன.! இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தமிழக மின் பகிர்மானக் கழகத்திற்கு விற்பது அத்துடன் அனல் மின் நிலையங்களில் வெளியேறும் சாம்பலை தனியாருக்கு விற்பது போன்றவை காரணமாக மேற்கண்ட மின் உற்பத்தி கழகத்திற்கு தொடர் வருவாய் கிடைத்து வருகிறது!. இந்தத் திமுக ஆட்சியில் இந்த நிறுவனம் 2024 -25 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு விபரங்கள் அடங்கிய முதலாவது ஆண்டு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. மேற்கண்ட ஆண்டில் அதன் செயல்பாட்டு வருவாய் 16028 கோடியாகவும் . அத்துடன் இதர வருவாய் 1264 கோடியுடன் சேர்த்து மொத்த வருவாயாக 14292 கோடி ரூபாய்களை அது ஈட்டி உள்ளது.
ஆனால் இதே காலத்தில் இதற்கான உற்பத்திச் செலவு போக மொத்தமான செலவு எனச் சொல்லி 19,521 ரூபாயை அது கணக்குக் காட்டியுள்ளது. இதன் காரணமாக 2024 -25 ஆம் ஆண்டில் 2229 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவிக்கிறது. ஏன் எதற்கு எப்படி என்ற விபரங்களை யார் கேட்பது?
இப்படி ஒரு நிர்வாகம்! இதற்கு ஒரு கழகம்.!
#TNEB
#மின்சாரவாரியம்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
No comments:
Post a Comment