Tuesday, April 28, 2026
#சிசு_செல்லப்பா
#சுதந்திரதாகம்
#மதுரை
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மதுரை இன்று வருகையின போது சிசு செல்லப்பாவின் சுதந்திர தாகம் புதினத்தை படிப்பதற்காக எடுத்துக்கொண்டு வந்திருந்தேன். தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வத்தலகுண்டு தாய்மாமன் வீட்டில் வளர்ந்த சிசு செல்லப்பா ஒரு மிகச்சிறந்த காந்தியவாதி.
சிறந்த விமர்சகர் இலக்கியவாதி எழுத்தாளர் இவருடைய முக்கியமான படைப்புகள் வாடிவாசல் சுதந்திர தாகம் ஜீவனாம்சம் போன்ற நாவல்களோடு எழுத்து என்கிற ஒரு மிகச்சிறந்த நவீன இலக்கிய இதழையும் நடத்திக் கொண்டு வந்தவர். இவரை முன்னோடி நவீன இலக்கியவாதி என்று சொல்வார்கள்.
இதுவரை மூன்று முறைக்கு மேல் அந்த சுதந்திர தாகம் நாவலை வாசித்ததிருக்கிறேன். மதுரையும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் பிரிட்டிஸாரின் அடக்குமுறைகளையும் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அதனால் ஏற்பட்ட போராட்டங்களையும் துல்லிதமாக இந்தச் சுதந்திர தாகம் நாவலில் மிக விரிவாக செல்லப்பா எழுதியிருக்கிறார். காந்தியின் வழியில் அகிம்சை முறையில் எவ்வாறு ஒரு அந்நிய ஆட்சியை தமிழகத்தின் மதுரை உட்பட்ட தெற்குப் பகுதி கிராமப்புற மக்கள் தங்கள் தியாகத்தின் வழியில் எதிர்கொண்டனர் என்பதற்கு இந்த நாவல் மிகப்பெரிய சாட்சி! அன்றைய மதுரை நகர், மதுரை மாவட்ட புவியியல், மக்களின் சமூக வாழ்க்கை என காட்சிகளை எழுத்தில் கொண்டுவந்துள்ளார் இந்த எழுத்து இதழின் ஆசிரியர்.
இந்த நாவலுக்காக இந்திய சாகித்யஅகடாமி விருதையும் அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட விளக்கு விருதையும் பெற்றவர். ஒரு நாடு என்பது அந்நியராட்சியாலும் உள்ளூர் பிரச்சனைகளாலும் எவ்வாறு திணறித் திணறித் தேசிய ஒருமைப்பாடு கண்டது என்பதற்கு ஒருவர் இந்த நாவலை சிரமப்பட்டேனும் வாசித்தாக வேண்டும். உண்மையில் அவர் இறக்கும்வரை அவரது கனவு நாவலான சுதந்திர தாகம் வெளிவரவில்லை! அவர் இறந்த பிறகு கைப்பிரதியாக இருந்த இந்த நாவலை 1998 இல் அச்சிட்டு வெளியே கொண்டு வந்தார்கள். எப்போது வாசித்தாலும் சுதந்திரக்கனல் பற்றி எரியும் அவரது இந்தப்படைப்பு முக்கியமான இந்திய நாவல் வரிசையில் வைக்கப்பட வேண்டியது அவர் மறைந்தாலும் இந்த நாவலுக்கான அவரது புகழ் மறையாது.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment