முகவை ராஜமாணிக்கம் திருமூர்த்தி கே சி எஸ் அருணாசலம் கவிஞர் மீரா கவிஞர் பரிணாமன் கவிஞர் கந்தர்வன் கவிஞர் ரசூல் போன்ற இலக்கிய படைப்பாளிகளையும் அடிக்கடி சந்தித்து பேசுவததை வழக்கமாக கொண்டிருந்தார். நல்லகண்ணு அரசியல் அறிதிறன் கொண்டவர் மட்டுமில்லாமல் இலக்கியத்திலும் வாசிப்பிலும் மிக நுட்பமானவர்! பிற்காலத்தில் நா வானமா மலை அவர்கள் ஆய்விலும் இவரது கவனம் இருந்தது! பேராசிரியர் ஆ சுப்பிரமணியம் டாக்டர் நெ து ராஜகுமார் முனனவர் முத்துமோகன் மார்க்ஸீய கலை இலக்கிய ஆய்வாளர் பேராசிரியர்திசு நடராஜன் வி கிருஷ்ணமூர்த்தி தோத்தாத்ரி தேவ பேரின்பன் இன்றைக்கு உள்ள சி மகேந்திரன் தமிழ்ச்செல்வனோடும் பரிட்சயங்களை மேற்கொண்டு இன்று வரை இலக்கிய விவாதங்களையும் நிகழ்த்தி வருகிறார். இவர்களோடு மட்டுமல்லாமல் மேலாண்மை பொன்னுச்சாமி தனுஷ்கோடி ராமசாமி கோ மா கோதண்டம் ஸிரிதர கணேசன் மற்றும் எனது அன்பு மகளான லீனா மணிமேகலை போன்றவர்களுடன் கடந்த காலங்களில் கலந்து பேசி என்ன விதமான இலக்கியப் பணிகள் நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்வார். தொலைபேசியில் அடிக்கடி விசாரித்துக் கொள்வார் இப்படி இலக்கியத்திலும் நல்ல கண்ணு அவர்கள் ஒரு தலைசிறந்த பண்பாளர்! இலக்கியத்தையும் அரசியலலையும் தனதுஇரு கண்களாகப் பாவித்தவர்! அந்த வகையில் அரசியல் பொருளாதாரம் இலக்கியம் களப்பணிகள் எல்லாவற்றிலும் ஆலோசனைகளைத் தரத்தக்கவர். அதேபோல் சிறு குறு விவசாயிகள் விவசாயக் கூலிகள் இருவரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமான கருத்து உடையவர் அத்தகைய போராட்டங்கள் இந்தியா போன்ற விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அவசியமானது என்பதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்கள் ஊர் கோவில்பட்டிக்கு வந்தால் இந்த வருடம் வத்தல் விலை சரியாக இருந்ததா பருத்தி விலையில் நியாயம் கிடைத்ததா என்று சங்கரன்கோவில் சந்தைகளில் விவசாயிகளைச் சந்திக்கும்போது விசாரித்துவிட்டு போவார். பத்து வருடத்திற்கு ஒருமுறை தான் எங்கள் பகுதி விவசாயிகள் லாபம் பார்ப்பார்கள். அத்தகைய நிலைமைகளை உணர்ந்து மிகச் சன்னமான குரலில் அவர்களிடம் அவர்களின் நலன்களை பற்றி விசாரித்துக் கொண்டு உள்ள பிரச்சனைகளையும் தெரிந்து கொண்டு அதற்கான அடுத்தகட்டப் போராட்டங்களை திட்டமிட்டு விட்டுத்தான் அங்கிருந்து செல்வார் அவ்வளவு எளிய மனிதர்.
அரசியல் களத்தில் வயது முதிர்ந்த தலைவர்கள் பலரும் இன்று நல்ல கண்ணு அவர்களைப் போல இந்திய அளவில் இல்லை. அருமைக்குரிய தலைவர் நல்ல கண்ணு! ஒரு நூற்றாண்டை எட்டிய நிலையில் ஒரு தத்துவத்தை போல நம்முடன் நலமாக இருக்கிறார். தமிழகத்தில் 90 வயதைக் கடந்த ஹண்டே போன்ற மூத்த தலைவர்களும் இருக்கிறார்கள் என்பது ஞாபகத்தில் உள்ளது! அது தென்புலத்து ஆயுள் என்று நினைக்கிறேன். நல்ல கண்ணு அவர்களுக்கும் எனக்குமான அறிமுகம் 1970 இல் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அழகிரிசாமி மூலம் அவர் திருநெல்வேலியில் வைத்து எனக்கு அறிமுகம்! செயின்ட் ஜார்ஜ் பாளையங்கோட்டை கல்லூரியில் படித்த மாணவர் லூர்து நாதன் மாஞ்சோலை கூலி விவகாரத்தின் போது காவலர்களால் தாக்கப்பட்டு தாமிரபரணி படுகொலையில் இறந்தபோது நான் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தேன். இந்தப் படுகொலை பற்றி விசாரிக்க மு கல்யாணசுந்தரம் அவர்களை அழகிரி சாமி அழைத்து வந்த போது நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து உரையாடினேன். பிறகு அழகிரிசாமி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி சார்பில் நின்று பணியாற்றிய போது தோழர் நல்ல கண்ணு அவர்கள் எங்களது குருவிகுளம் வட்டாரத்தில் தேர்தல் பணியாற்ற வந்தார். அந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து மதியம் உணவு உண்டபின் சற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு மீண்டும் கிராமங்களுக்குப் பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது மஞ்சளும் கருப்புமாக பெயிண்ட் அடிக்கப்பட்ட (டாக்ஸி) வாடகை கார் தான் கிடைக்கும்! 1970 1980களில் இப்போது உள்ளது போல பல வகையான ஏசி கார்கள் எல்லாம் கிடையாது. அந்த ஒரே காரில் நானும் நல்ல கண்ணுவும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் கைகளில் மைக் வைத்துக்கொண்டு மேலே ஒலிபெருக்கிகளைக் கட்டி கிராமத்தின் புழுதி சாலைகளில் பிரச்சாரத்திற்கு போவோம். அக்காலத்தில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்து காரில் பின்பாக ஓடி வருவார்கள். தோழர்கள் சிறு பையன்களுக்கெல்லாம் நோட்டீஸ் இல்லை போங்கள் என்று சொல்லுவார்கள். ஆனாலும் நல்ல கண்ணு அவர்கள் சிறுவர்களுக்கு தான் முதலில் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு கொடுங்கள் அந்த அரிவாள் கதிர் சின்னத்தை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் அதை அவர்கள் பார்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்லித் தூண்டுவார்.1986இல் அழகிரி சாமியோடு எனது திருமணத்திற்கு3/4
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment