Saturday, April 11, 2026

 கடந்த ஒரு வாரமாக தமிழக அரசின் பணத்தில் ஸ்டாலின் புகழ் பாடும் விளம்பரங்கள் எல்லா தமிழ் , ஆங்கிலத் தமிழ் நாளிதழ்களிலும் முன்பக்கத்தில் முழுப்பக்கமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.!!

அரசு விளம்பரங்கள் என்றால் ஏதேனும் திட்டங்களை நிறைவேற்றும் பொழுது அல்லது புதிய பணிகளைத் தொடங்கும் பொழுது வேலை வாய்ப்புகள் குறித்தும் கூட மக்களுக்குத் தெரியும் வண்ணம் விளம்பரங்கள் கொடுப்பது வழக்கமானது. இது அப்படி இல்லாமல் அரசு பணத்தை எடுத்து முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட புகழ்ச்சியைப் பாடும் வகையில் அதை வீணடித்துக் கொண்டிருப்பது என்ன வகையில் நியாயம்! ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விளம்பரங்கள் வந்து கொண்டிருப்பதன் மூலம் எத்தனை கோடி அரசு பணம் வீணாகிறது. இதனால் என்ன பலன் தமிழ்நாட்டுக்கு? ஐந்து வருடங்கள் ஆளலாம்! ஆனால் அரசு எந்திரங்களை மறைமுகமாகத் தேர்தல் விளம்பரத்திற்கு துஷ்பிரயோகம் செய்வது சட்டப்படித் தவறாகாதா? "தடி எடுத்தவன் தண்டல்காரன்" கதையாக இருக்கிறது!



No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...