Tuesday, April 28, 2026

Former Union minister, six-time MP #KPUnnikrishnanpassesaway …. Deep my condolences

 Former Union minister, six-time MP #KPUnnikrishnanpassesaway …. Deep my condolences

My good old friend Unnikrishnan served as Union Minister for Telecommunications, Shipping and Surface Transport in the Cabinet of VP Singh (1989-90). During his ministerial tenure, he played a key role in overseeing the evacuation of Indians during the Gulf War crisis. நணபர் கே.பி. உன்னிகிருஷ்ணன் மறைவு(20 செப்டம்பர் 1936 - 3 மார்ச் 2026) மத்திய அமைச்சராகவும், கேரள வடகரா தொகுதியின் ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் . ஆழ்ந்த இரங்கல். கேபி உன்னிகிருஷ்ணன் பலரின் அன்பையும் பெற்றவர்!ஒரு காலத்தில் டெல்லிக்குச் சென்றால் அவர் வீட்டில் என்னைத் தங்க வைக்கும் அளவிற்கு நட்பும் கொண்டவர். நானஏறக்குறைய 1975 லிருந்து அவருடன் என் நட்பு தொடர்ந்து இருந்தது. இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்த ஒரு இளைஞர். தேர்ந்த வாசிப்பாளர்! அவரது வீடு நிறையப் புத்தகங்கள் இருக்கும்!. நல்ல பண்பாளர்!. ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறி எமர்ஜென்சிக்கு பிறகு உருவான காங்கிரஸ் (எஸ் )என்ற கட்சிக்குள் இடம் பெயர்ந்தார். அதற்கு அசாமைச் சேர்ந்த சரத்சின்கா எ”தலைவராக இருந்தார். கேரளாவைச் சார்ந்த ஏ.கே அந்தோணி அந்த கட்சியின் சார்பில் தான் கேரளாவில் முதலமைச்சராக இருந்தார். பின்னாலில் உன்னிகிருஷ்ணன் காங்கிரஸ் எதிர்ப்பாளர். சரத் பவார் போன்ற காங்கிரஸின் முக்கிய தலைவர்களோடு இணைந்து அன்றைக்குக் காங்கிரஸை விட்டு வெளியேறினார். பிறகு வந்த பிரதமர் சந்திரசேகருடன் மிகுந்த நெருக்கம். வி பி சிங் காலத்தில் அமைச்சராக உன்னிகிருஷ்ணன் இருந்தார். அவர் சென்னைக்கு வரும்போது என் வீட்டிற்கு வந்ததெல்லாம் உண்டு. அவர் சென்னையில் எம்சிசி , சட்டக்கல்லூரியிலும் கல்லூரிப் படிப்பை முடித்தவர். நல்ல முறையில் ஆங்கிலமும் இந்தியும் பேசத் தெரிந்தவர். கேரளாவைச் சேர்ந்தவராயினும் அதேஅளவில் தமிழையும் நன்றாகப் பேசுவார். கேரளாவின் வடுகரா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று ஆறு முறை நாடாளுமன்றம் போனவர். 1990 இல் வி பி சிங்கின் ஆட்சிக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனுக்கு அரசியல் முக்கியத்துவம் பெரிதாக இல்லாமல் போய்விட்டது. அதன் பிறகு நோய்வாய்ப்பட்டார். அந்தச் சூழலிலும் அவரை நான் டெல்லிக்குச் சென்று இரண்டு மூன்று முறை சந்தித்து இருக்கிறேன். இன்றைக்கு அவர் காலமாகி உள்ளார். டெல்லியில் , மத்திய நிதியமைச்சர் ஆக இருந்த தாரகேஸ்வர்சின்காவும் கேபி உன்னிகிருஷ்ணனும் டெல்லியின் அரசியல் நுட்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. அது போக உன்னி கிருஷ்ணன் என்னை டெல்லிக்கு வரும்போது எல்லாம் மிகச் சிறந்த உணவு விடுதிகளுக்கு அழைத்துச் செல்வார். இன்னார் எனப் பாராமல் பலருக்கும் உதவி செய்வார். ஒரு இளம் துருக்கியர் என்ற அளவில் காங்கிரஸில் அவர் இருந்தபோது அவருடன் எனக்குப் பழக்கம்! அவருக்குக் காமராஜர் உடனும் நெருக்கம் இருந்தது. இவருக்கும் சஞ்சய் காந்திக்கும் அக்காலத்தில் முரண்பாடு இருந்தது. இப்படி இவரின் நினைவுகள் பின்னோக்கி ஓடுகின்றன. உன்னிகிருஷ்ணன் தனது இளமைப் பருவத்தில் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர் . 1960களில், அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து 1962 இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரானார். மாத்ருபூமி மற்றும் பிற பத்திரிகைகளுக்கு சிறப்பு நிருபராக கட்டுரைகளை எழுதினார் . 1971 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக முதன்முதலில் வட்டகரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியபோது அவர் தேர்தல் களத்தில் இறங்கினார் . 1980 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் (யு) கட்சிக்கும் பின்னர் 1984 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) கட்சிக்கும் மாறிய போதிலும் , அடுத்த ஐந்து மக்களவைத் தேர்தல்களில் (1977, 1980, 1984, 1989, 1991) அவர் தோற்கடிக்கப்படாமல் இருந்தார். 1981–84 காலகட்டத்தில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் (மதச்சார்பற்ற) தலைவராக இருந்தார் . 1980–82 காலகட்டத்தில், அவர் பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். விஸ்வநாத் பிரதாப் சிங் அமைச்சரவையில் (1989–90) தொலைத்தொடர்பு, கப்பல் போக்குவரத்து, மேற்பரப்பு போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார் .அமைச்சராக இருந்த காலத்தில், வளைகுடாப் போரின் போது இந்தியர்களை வெளியேற்றுவதை அவர் மேற்பார்வையிட்டார். . தொகுதியில் அவருக்கு ஏற்பட்ட ஒரே தோல்வி 1996 ஆம் ஆண்டுதான். உன்னிகிருஷ்ணன் பின்னர் தீவிர அரசியலை விட்டு விலகி, தனது இருப்பிடத்தை புது தில்லிக்கும் , பின்னர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பன்னியங்கராவில் உள்ள தனது மூதாதையர் வீட்டிற்கும் மாற்றி , புத்தகங்களைப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1/2


KP Unnikrishnan, former Union Minister and six-time Member of Parliament from Vadakara, Kerala, passed away at the age of 89, marking the end of a political career that spanned more than three decades in national public life. Born on September 20, 1936, into a family from the Malabar coast, he was the son of E Kunhikannan Nair. Unnikrishnan was educated at Madras Christian College, Chennai, and later completed his law degree in the city. His early political leanings were shaped by his association with the Socialist Party and the Praja Socialist Party before he joined the Indian National Congress in the 1960s.By 1962, he had become a member of the All India Congress Committee. Before entering full-time politics, Unnikrishnan worked as a journalist and contributed articles to Mathrubhumi and other periodicals as a special correspondent. His electoral journey began in 1971 when he was fielded as the Congress candidate from Vadakara. Unnikrishnan went on to win six consecutive Lok Sabha elections, 1971, 1977, 1980, 1984, 1989 and 1991, an achievement that underscored his enduring connection with the constituency. Despite shifting political affiliations, moving to Congress(U) in 1980 and later to the Indian Congress (Socialist) in 1984, he remained electorally undefeated until 1996, when he suffered his only loss in Vadakara. Between 1981 and 1984, he served as leader of Congress (Secular) in Parliament and was a member of the Public Accounts Committee from 1980 to 1982. Unnikrishnan served as Union Minister for Telecommunications, Shipping and Surface Transport in the Cabinet of VP Singh (1989-90). During his ministerial tenure, he played a key role in overseeing the evacuation of Indians during the Gulf War crisis. It appears a strange coincidence as he breathed his last at a time when West Asia has turned into a war zone. After stepping away from active politics following his 1996 defeat, he divided his time between New Delhi and his ancestral home at Panniyankara in Kozhikode district, devoting himself to reading and writing.2/2 #kpunnikrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...