Thursday, April 2, 2026
#மோடி_கலைஞர்
கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது பிரதமர் மோடி கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்கே நலம்விசாரிக்க வந்தார்! அப்படி வந்த மோடி அவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் வந்த போது அன்றைக்கு திமுகவில் இருந்த நானும் உடன் இருந்தேன்.
அப்போது மோடி அவர்கள் என்னுடன் டெல்லியில் வந்து என் வீட்டில் தங்குங்கள் என்று கலைஞரிடம் சொன்னாரே ஒழிய இந்த வீடு நீங்கள் தங்கி இருக்கப் போதுமானதாக இல்லை என்றெல்லாம் சொல்லவே இல்லை!
அதாவது வீடு வசதி இல்லாமல் இருக்கிறது இங்கு தங்குவதை விட நீங்கள் என்னுடன் வந்து டெல்லியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் என்பதாகத் திரித்துக் கூறுகிறார்கள்.! அப்படியெல்லாம் மோடி அவர்கள் சொல்லவில்லை!. அரசியல் அனுபவம் உள்ள ஒரு மூத்த தலைவர் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்படும் பொழுது அவரை பாதுகாக்கும் பொருட்டும். அவர் மீது தனிப்பட்ட அன்பில் என்னுடன் வந்து தங்குங்கள் என்று அன்புடன் அழைத்தது போலத்தான் அந்த அழைப்பு இருந்தது. இந்த வீடு நீங்கள் இருக்கப் போதாது என்பது மாதிரி ஒரு வார்த்தையும் மோடி அவர்களின் வாயிலிருந்து வரவில்லை,!. எதையும் திரித்துக் கூற வேண்டிய அவசியமே இல்லை!ஒரு மதிப்புக்குரிய தலைவர் என்கிற முறையில் தான் மோடி கலைஞரை டெல்லிக்கு வந்து தங்கும்படி இதயபூர்வமாக அன்புடன்அழைத்தார்! இதுதான் நடந்த உண்மை! மற்றபடி வீடு பத்தாமல் இருக்கிறது என்கிற முறையில் அவர் ஒருபோதும் அவரை அழைக்கவில்லை. அப்படி அவர் சொல்லவும் இல்லை.
#modi_kalignar
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment