செண்பகவல்லி அணை கட்டு சிக்கல்! (பார்ட் 1)
1. கி. மு 6 ம் நூற்றாண்டு கபிலவஸ்து என்ற இடத்தில் சாக்கியர்கள் வாழ்ந்தனர். அதற்கு அருகில் கோலியர்கள் என்ற மற்றொரு குலமும் வாழ்ந்தது. இந்த இரு குலங்களுக்கும் நடுவே ஓடியது ரோகிணி நதி. அந்த நதியின் நீரால் இரு தரப்பினரும் விவசாயம் செய்து வாழ்ந்தனர்.ஒரு வருடம் கடும் வறட்சி ஏற்பட்டது. நதியில் நீர் குறைந்தது. “இந்த நீர் எங்களுக்கு தான் உரிமை” என்று சாக்கியர்கள் கூறினர். “இல்லை, நாங்களும் அதே அளவுக்கு உரிமை கொண்டவர்கள்” என்று கோலியர்களும் வாதிட்டனர். விவசாயிகள் இடையே தொடங்கிய தகராறு, குலங்களின் பெருமை பிரச்சினையாக மாறியது. இரு தரப்பும் ஆயுதம் எடுத்து போருக்கு தயாரானார்கள். 2. அந்த நேரத்தில் புத்தர் அங்கு வந்தார். இரு தரப்பினரையும் பார்த்து அமைதியாக கேட்டார்: “இந்த ரோகிணி நதியின் நீரின் மதிப்பு என்ன?” அவர்கள் சொன்னார்கள்: “அது மிகவும் முக்கியமானது.”புத்தர் மீண்டும் கேட்டார்: “இந்த நீருக்காக மனித உயிர்களை இழப்பது சரியா? மனித உயிரின் மதிப்பு அதிகமா? இல்லையா இந்த நீரின் மதிப்பு அதிகமா?”அவர்கள் தலைகுனிந்தார்கள். நீர் முக்கியம் தான். ஆனால் உயிர் அதைவிட உயர்ந்தது என்பதை உணர்ந்தார்கள்.புத்தர் சொன்னார்: “நீர் குறைந்திருக்கலாம். ஆனால் அறிவு குறையக்கூடாது. நீரை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்தால் அது திரும்ப வராது.” அந்த போதனைகள் இரு தரப்பையும் உருக்கியது. போர் நிறுத்தப்பட்டது. ரோகிணி நதியின் நீர் சமமாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. என்று புத்தர் வரலாறு சொல்லுகிறது. 3. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஆத்து தண்ணீர் பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது சரிசெய்ய புத்தர்களின் ஆளுமை தேவை பட்டு இருக்கிறது. அப்படி பட்ட பிரச்சினை தான் சென்பகவல்லி அணை கட்டு பிரச்சினை. இது சாமானியனுக்கு இன்றைய தலைமுறைக்கு போய் சேர வேண்டும் என்று எழுதுகிறேன். 4. மேற்கு தொடர்ச்சி மலை, அது தென்தமிழகத்தின் உயிர்க்கோடுஆகும் இயற்கை, நீர்வளம், காடுகள், ஆறுகள், அருவிகள், பழங்குடியினர் வாழ்க்கை, மற்றும் ஆன்மீகத் தலங்கள், இலக்கியம், வரலாறு புராணம் ஆகியவற்றால் காலத்தின் சாட்சியாக இந்த மலை இருக்கிறது. 5. பசுமை நிறைந்த எவர்கிரீன் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு பல அரிய மருந்து மூலிகைகள் காணப்படுகின்றன. அத்துடன் பல வகையான பறவைகள், விலங்குகள், பாம்புகள், மற்றும் தாவரங்கள் வாழ்கின்றன. இந்த மலைத்தொடர் தெற்கு பருவமழையை தடுக்கவும், மழையை ஈர்க்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லை முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை ஓர் இயற்கை கோட்டையாக நிற்கிறது. இங்கு உள்ள முக்கிய மலைப்பகுதிகளில் களக்காடு, முந்தந்துறை, அம்பாசமுத்திரம், குற்றாலம் பாபநாசம் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவ நல்லூர், சிவகிரி போன்ற பாரம்பரிய ஊர்கள் இருக்கின்றன. இந்த மலைப்பகுதி தான் தாமிரபரணி நதியின் தாய் மடியாக இருக்கிறது. இந்த மலையில் உள்ள களக்காடு – முந்தந்துறை புலிகள் காப்பகம் (Kalakad–Mundanthurai Tiger Reserve) இந்தியாவின் முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு மண்டலங்களில் ஒன்று. இங்கு புலிகள், யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற விலங்குகள் வாழ்கின்றன. உலகின் முக்கிய உயிரியல் பன்மை மண்டலங்களில் (Biodiversity Hotspot) ஒன்றாகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட மலை மீது தான் செண்பகவல்லி அணை இருக்கிறது. 6. தென் தமிழகத்தில் செண்பகவல்லி மிக சிறப்பான பெயர்.குற்றாலம்மலைகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள செண்பகதேவி அம்மன் கோவில் உள்ளது அதன் அருகிலேயே செண்பக தேவி அருவியும் இருக்கிறது. இயற்கைச் சூழலோடு செண்பக மரங்கள் நிறைந்ததால் “செண்பகாதேவி” என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. குற்றாலம் செல்லும் பொழுது மலையில் நடந்து போய் குளித்து இருக்கிறேன். கோவில்பட்டியில் மிகவும் புகழ்பெற்ற அம்மன் கோவில்.“செண்பகவள்ளி அம்மன் ஆகும் ” செண்பக மலரைத் தலையாலங்காரம் செய்ததால் அந்த பெயர் என்று நினைக்கிறேன். 7. ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருந்து பத்து கிலோமீட்டர் மலை அடிவாரத்தை நோக்கி சென்றால் செண்பகத் தோப்பு என்ற உலகின் அழகிய பகுதிகளில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் ராக்காச்சி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தம். மாம்பழ தோப்புகளில் நடுவில் பயணித்து நான் சென்று அங்கு இருக்கும் அருவியிலும் கொடுத்திருக்கிறேன் இந்த செண்பகத் தோப்பு மலையில் தான் செண்பகவல்லி அணைக்கட்டு இருக்கிறது. திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மதுரை விருதுநகர் மக்களுக்கு செண்பகத் தோப்பு தெரிந்திருக்கும் பயணித்து இருப்பார்கள். மேற்கு தமிழக மற்றும் வட தமிழக மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இயக்குனர் முத்தையா அவர்களின் சசிகுமார் லட்சுமி மேனன் நடித்த குட்டிப்புலி என்ற திரைப்படத்தில் இறுதிக் காட்சிகளில் செண்பகா1/2
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment