தொப்பை அழகாக காட்டியிருப்பார்கள்
8. மேற்கு தொடர்ச்சி மலையில் செண்பக மரங்கள் அதிகமாக இருப்பதனால் செண்பகம் என்ற பெயர் அழகாகவும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு செண்பகப்பூ 100 ரூபாய் விற்கிறது. ஒரு மலரை வாங்கி வீட்டில் வைத்தால் ஒரு நாள் முழுக்க மணம் இருப்பதை உணர முடியும். இந்த செண்பக தோப்பில் மலையில் மலை ஏற்றம் செய்தவர்கள் செண்பக மலரின் வாசனையை உணர்ந்து இருப்பார்கள். அதனால தான் ஷெண்பக தோப்பு பகுதியோடு தொடர்பு ஏற்படுத்துமாறு செண்பகவல்லி அணைக்கட்டு பெயரிடப்பட்டிருக்கிறது. 9. செண்பகவல்லி அணைக்கட்டு எந்த நதியும் இது கட்டப்பட்டிருக்கிறது என்றால் மலையில் நிட்சேப நதி எனறு பெயரில் ஊற்று எடுத்து இருக்கிறது. நிட்சேபம் என்றால் டெபாசிட் வைப்பு என்ற அர்த்தத்தை சொல்கிறார்கள். சிவகிரி – வாசுதேவநல்லூர் இடைப்பட்ட மலைத் தொடரில் செண்பகத்தோப்பு” என அழைக்கப்படும் மலைப் பகுதியில மழைநீர் மற்றும் சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து நதியாக உருவாகிறது அதாவது பல இடங்களில் இருந்து வந்து ஒரு இடத்தில் வைப்பாக .உருவான நீர் நிட்சேப நதி. இந்த நதி வேறு வைப்பாறு நதி வேறு. வைப்பாறு என்பது இதே மலையில் வேறு இடத்தில் இருந்து உற்பத்தி ஆகிறது ஆனால் நிட்சேப நதி வேறு ஒரு இடத்தில் உற்பத்தியாகி கடலில் தனியாக கலப்பதில்லை அது வைப்பாறுடன் வந்து கலக்கிறது. இந்த நதி மேற்கு தொடர்ச்சி மலையில் மேற்குப் பக்கமாக கேரளாவிற்கு செல்லாமல் கிழக்கு பக்கமாக தமிழ்நாட்டை நோக்கி பயந்து வருகிறது. 10. தமிழ்நாட்டை நோக்கி பாய்ந்து வருவதற்கு காரணமாக இருப்பது தான் இந்த செண்பகவல்லி அணை இது மேட்டூர் போல பெரிய அணை எல்லாம் இல்லை இது ஒரு சிறிய அணைக்கட்டு.. நீர்வழியை மாற்றி விடுவதற்காக உருவாக்கப்பட்ட அணைக்கட்டு இந்த அணைக்கட்டு இல்லையென்றால் இந்த நீர் எங்கு செல்லும் என்றால் முல்லைப் பெரியாறு பேசினுக்கு தான் செல்லும் பேசின் என்பது ஒரு நதிக்குள் சேரும் மழைநீர் சேகரிப்பு பகுதியே ஆகும் உண்மையில் சிறு சிறு ஓடைகள் எல்லாம் வைப்பாக சேர்ந்து நிட்சேபா Basin உருவாகி அதிலிருந்து தமிழகத்தை நோக்கி கிழக்குப் பக்கமாக வருவது நிட்சேபா நிதி அந்தத் தண்ணீர் கிழக்குப் பக்கம் தமிழ்நாடு நோக்கி வராமல் பெரும்பாலும் மேற்குப் பக்கமாக சென்று பெரியாறு Basin தனி நீர்ப்பிடிப்பு பகுதியை அடைகிறது. 11. பெரியார் பேசின் மொத்த பரப்பளவு சுமார் 5,398 சதுர கிலோமீட்டர் (sq.km.) ஆகும். இதில்பெரும்பகுதி கேரள மாநிலத்திலேயே உள்ளது. சிறிய பகுதி தமிழ்நாட்டில் (மேற்கு தொடர்ச்சி மலை எல்லைப் பகுதிகள்) அமைந்துள்ளது. அதாவது 10 லிட்டர் பாத்திரம் 20 லிட்டர் பாத்திரம் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் இது எத்தனை லிட்டர் பாத்திரம் என்றால் தோராயமாக 5398 லிட்டர் பாத்திரம் அதாவது மலையால் ஆன பாத்திரம் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். அப்படியானால் செண்பகவல்லி அணைக்கட்டு மூலமாக தண்ணீர் வந்தால் அது தமிழ்நாட்டிற்கு வந்து சேரும்அந்த அணை தற்பொழுது பழுதாகி இருப்பதால் அதனை சரி செய்யாமல் இருப்பதால் அந்தத் தண்ணீர் இப்பொழுது பெரியார் பேசினுக்கு சென்று விடுகிறது என்பதனை புரிந்து கொள்வோம். 12. நிட்சேபா நதி கிழக்கு நோக்கி செண்பகவல்லி அணை மூலமாக வந்தால் சிவகிரி – சங்கரன்கோவில் – கரிவலம்வந்தநல்லூர் – திருவேங்கடம் –வெம்பக்கோட்டை – சாத்தூர் போன்ற ஊரகளை கடந்து தெற்குக் கிழக்கு திசையில் வரும் அதன் பின்னர் அது பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் இருக்கும் இருக்கன்குடி (Irukkankudi) பகுதியில் வந்து வைப்பாறுடன் சேர்கிறது. அங்கிருந்து அது நிட்சேப நதி என்ற தனி பெயரை இழந்து “வைப்பாறு” என்ற பெயரில் தொடர்கிறது.மேற்படி வைப்பாறு திருநெல்வேலி – விருதுநகர் – தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதிகளை கடந்து வைப்பாறு கிராமம் (Vaippar Village) அருகில்வங்காள விரிகுடா (Bay of Bengal) கடலில் கலக்கிறது.அந்த கடற்கரை பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்படியானால் செண்பகவல்லி அணை மூலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கிழக்குப் பக்கமாக திருப்பி விடக் கூடிய முக்கியமான வேலையை இந்த சிறிய அணைக்கட்டு செய்கிறது இந்த சிறிய அணைக்கட்டு மூர்த்தி சிறியது ஆனால் இதனுடைய கீர்த்தி மிகப்பெரியது.2/2 (தொடரும்...........) #ShenbagavalliDam #WaterDispute #RiverWaterIssue #TamilNaduWater #WesternGhats #WaterManagement #DamHistory #LegalAwareness #PublicAwareness #SaveWaterResources #IrrigationMatters #SouthTamilNadu #EnvironmentalAwareness #WaterRights #CommonManVoice
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment