Monday, April 6, 2026

மகளிர் உதவித் தொகை கொடுத்துவிட்டாலே வெற்றி பெற்று விடுவோம் என்பது இங்குள்ள சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமேயானால் மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான்

 மகளிர் உதவித் தொகை கொடுத்துவிட்டாலே வெற்றி பெற்று விடுவோம் என்பது இங்குள்ள சிலரின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தோமேயானால் மூன்று ஆண்டுகளாக ராஜஸ்தான்

தெலுங்கானா சட்டீஸ்கர் ஆந்திரப் பிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை கொடுத்தபின்பும் அக் கட்சிகள் தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற முடியவில்லை! அதேபோல மத்திய பிரதேசம் ஜார்கண்ட் மகாராஷ்டிரா பீகார் போன்ற மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அங்குள்ள கட்சிகள் வெற்றி பெற்றன. அதையும் மறுக்க முடியாது. ஆனால் மகளிர் உரிமைத் தொகை தான் ஒரு கட்சியினரின் தேர்தல் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது என்பதை ஏற்க முடியாது! 2011 தேர்தலில் திமுகவின் மருமகன் சபரீசன் உருவாக்கிய வியூகம் அல்லது அவருடைய ஸ்டேட்டஜி யை பயன்படுத்தியதால் திமுக தோல்வியைக் கண்டது. அதை அடுத்து 2016 இல் ஸ்டாலின் நமக்கு நாமே என்கிற திட்டத்தை முன்வைத்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வந்த பிறகும் கூட அவருடைய மருமகனுடைய அந்த குறிப்பிட்ட ஸ்டேட்டஜி ஓட்டுக்கு பணம் கொடுத்தும் திமுக வெற்றி பெறவில்லை.! அந்த வகையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் நடந்தது. ஆகவே மகளிர் உரிமைத் தொகை தான் தேர்தல் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது!அது ஒரு மாயை.! அது ஒரு சரியான மக்கள் கணிப்பும் ஆகாது! அதைவிட முக்கியம் ஒரு வணிக அரசியல் ஊழலில் ஊறிப் பெருத்த அரசாங்கம் தான் இது மாதிரியான இலவசங்களை கொடுத்து ஓட்டை அறுவடை செய்கிறது என்கிற முறையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக கூட ஜனநாயகத்தில் அமைகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோக மருமகனுடைய ஸ்டேட்டஜியை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஐ பேக் நமக்கு நாமே அது இதுவென்று கார்பெட் ஐடியாக்களை கொடுத்து தோல்வியை தழுவியது திமுகவிற்கு மிகப்பெரிய பாடமாக இருந்திருக்க வேண்டும். என்றாலும் அது தன் பழைய வழக்கத்தை கைவிடுவதில்லை. பத்தாண்டு அதிமுக ஆட்சி, டி.டி. வி. தினகரன வாக்கு பிரிப்பு என்ற நிலுவையில் 2001 இல் திமுக ஆட்சிக்கு வந்ததை யாரும் மறுக்க முடியுமா ? ஆகவே 2026 தேர்தலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!! எல்லாவற்றையும் தாண்டி திமுகவின் மீது அதிருப்தி எல்லா மாவட்டங்களிலும் தொகுதிகளிலும் இருக்கிறது! அதைஅவர்கள் புரிந்து கொள்வது முக்கியம்.! If we postpone the election to may first week 1) people may forget this 5000 2)March April payment of 1000 they may not get..(will upset in ladies side)



No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...