இன்று கொங்கு மண்டலத்தில் கௌசிகா நதி குறித்த பிரச்சனைகளை விவசாய சங்கம் சார்பாக முன்னெடுக்கும் நண்பர்களைச் சந்தித்தேன். பலவான பேச்சுக்கிடையே தமிழ்நாடு முழுக்க எங்கெங்கெல்லாம் நதிகள் அது சார்ந்த நிலவரங்கள் என்னவாகநடக்கிறது அப்படி அங்காங்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து தனித்தனியாக சென்று மாவட்டம் தோறும் அதன் உண்மையான நிலவரங்களை ஆய்வு செய்து நீர் நிலைகளை மீதான ஆக்கிரமிப்புகளை நீக்கும் வகையில் பிறகு அங்கு உள்ள குறைகளை என்னவென்று மக்களிடம் கேட்டு அதைத் தீர்த்து வைக்கும் அளவில் செயல்பட வேண்டும் என்பதாக இருந்தது அந்த பேச்சு!
நதிகள் பாதுகாப்புக் குழு என்ற ஒன்றை ஆரம்பித்து விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் அப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் பேசினோம். கொசிக நதி மட்டுமல்ல கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு நதிகள் நல்லாறு இணைப்பு, பி ஏ பி பம்பாறு, சிறுவாணி அமராவதி போன்ற அனைத்து நதிகள் குறித்தும் விவாதித்தோம். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி நெய்யாறு பச்சையாறு கொடுமுடியாறு அடவி நயினாறு செண்பக வல்லி அணை சீர்திருத்தம் அழகர் அணைத்திட்டம் முல்லைப் பெரியாறு மற்றும் இன்னும் தீர்க்க இயலாத காவிரிப் பிரச்சனை பாலாறு பிரச்சினைகள் குறித்து எல்லாம் பேசினோம். கௌசிகா நதியின் பாதுகாப்பு குழுவின் முக்கியத்துவமான அங்கத்தினராக இருக்கும் சதாசிவம் அவருடன் இயங்கும் விஜயகுமார் சுகுமாரன் சண்முகம் போன்றவரகளுடன் நாங்களும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுத்தோம். நீண்ட நாட்களாகத் தீர்க்க இயலாமல் கிடக்கும் பல்வேறு தமிழ்நாட்டு சமூக விவசாய மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கான ஒரு பயனுள்ள சந்திப்பாக இருந்தது. மேற் சொன்னவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும் அவற்றுக்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதாக முடிவெடுத்தோம். உண்மையில் அவர்கள் அக்கறை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது! எந்தப் பிரதிபலனும் அற்று எந்த அரசியல் அதிகாரமோ அடையாளங்களோ அற்று மக்களுக்காக உழைக்கும் உண்மையான நேர்மைக்காக பாடுபடும் மக்கள் அறிஅந்த ஆளுமைகளைச் சந்திக்கக்கூடிய நல்லதொரு அருமையான வாய்ப்பாகவும் இது இருந்தது. அவ்வப் பகுதி மக்களின் நலன்களின் அசிரத்தையாக இருக்கும் . மாநில ஆட்சியினபாரா முகத்தையும் அவர்கள் எவ்வளவு சொத்துக்களை இப்பகுதியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்கள். #நதிநீர்பிரச்சனைகள் #நீர்வளம் #RiverWaterDisputes #waterresources #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
Yoga day column by VP
Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment