Monday, April 6, 2026
#மகளிர்உரிமைதொகை
————————————-
திமுக அரசு குடும்பப்பெண்களுக்கு வங்கியில் 5000 ரூபாய் செலுத்தி பெண்களின் உரிமைத்தொகை என்கிற பெயரில் தங்களது ஓட்டு வங்கிக்கான லஞ்சத்தைக் கொடுத்திருப்பது எல்லா ஊடகங்களிலும் பேசு பொருளாகி உள்ளது. சரி குடும்பப் பெண்களுக்கு உதவித்தொகை என்கிற பெயரில் தேர்தல் காலம் நடக்கும் மூன்று மாதத்திற்கு மூவாயிரத்தையும் பிறகு கோடைகாலச் சிறப்புத்தொகை என்கிற பெயரில் மேலும் 2000த்தையும் இலவசமாகக் கொடுத்து விட்டு அதை பெண்களின் உரிமைத்தொகை என்று புத்திசாலி த்தனமாகக் கதை அளக்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் பல நிறுவனங்கள் வழியாக அரசு அதிகாரத்தின் மூலம் சம்பாதித்த ஊழல் பணம் இப்படியாக மறு தேர்தல் மூலம் ஆட்சிக்கு வரப்பயன்படுகிறது.
தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரையில் இந்த பணம் பெண்களுக்கான உரிமை என்கிற முறையில் செயல்பட்டு அந்தப் பணத்தை பெற்றுக் கொள்வதில் யாருக்கும் எந்தவித வெட்கமும் இல்லாமல் ஏற்கும் படி சராசரி ஆக்கப்பட்டுள்ளது.வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால் இப்படி எல்லாம் தரமாட்டார்கள் என்கிற அச்சத்தில் அதைப் பெற்றுக் கொண்டு திமுகவிற்கான ஓட்டாக மாற்றுவதில் இந்த பணம் எதிர்கால அரசியலாக உறுதிப்படுத்தப்படுகிறது. வரும் நடப்புத் தேர்தலில் விலை போன ஜனநாயகத்தின் அதிர்ச்சி இப்படியாகத்தான் இருக்கிறது.
இருக்கட்டும் தமிழகத்தில் மொத்தம் பெண்கள் 2 கோடியே71 லட்சம். இதில் 1 கோடி 31 இலட்சத்து பெண்கள்
5000 ரூபாயை பெற்றனர்.மீதம் 1 கோடி 46 இலட்சத்து பெண்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்க வில்லை.ரூ 6, 550 கோடி கடன் பெற்று இந்த தொகையை தருகிறது என்பது வேதனை.
பொதுவான பார்வையில் வைத்து பார்த்தால் பெண்களுக்கு ஏதோ உதவித் தொகை கிடைத்தது மாதிரியும் அவர்களுக்கான நலன்களைச் செய்தது மாதிரியும் இந்தத் திட்டம் தோன்றினாலும் அதன் நீண்ட கால விளைவுகளாகப் பார்த்தோமேயானால் இந்த உதவித்தொகையை நம்பியே பெண்களைக் குடும்பத்துக்கு வெளியே வாழ வைப்பது மாதிரி ஒரு மோசடி நடந்து கொண்டிருக்கிறது. மீனை கொடுப்பதற்கும் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதற்கும் இடையே ஒரு தனிப்பட்ட குடும்ப முதலாளித்துவ அரசுதமிழ்நாட்டின் மீது ஒரு மோசமான வலை பின்னல் போல படர்ந்து இருக்கிறது. இன்றைக்குத் தமிழக வாக்காளர் சமூகம் இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்து விடலாம். ஆனால் நாளை இதனுடைய விளைவுகளை அனைத்து மக்களும் தங்களது நெருக்கடியில் உணரும் பொழுது அல்லது கடுமையான பற்றாக்குறையைச் சந்திக்கும் பொழுது அத்தகைய நிலைமைகளுக்கு ஒருபோதும் இந்தத் திமுக அரசு பொறுப்பு ஏற்காது என்பதுதான் உண்மை. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் ஓசி பஸ் ஓசி பயணம் ஓசி ஓசி என்று மக்களை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
இது தேச இறையாண்மையை காக்கும் பொருட்டு கொள்ளையர்களிடம் இருந்து மாற்று அரசியலை மீட்டெடுக்க வேண்டிய காலமாக இருப்பதை மக்கள் உணர வேண்டும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்கள் தோறும் திமுகவின் செயல் வீரர்கள் தங்களை சரியாக இந்த அரசு ஊதிய முறையில் அனுசரிக்கவில்லை. கடுமையாக உழைத்த எங்களுக்கு என எதையும் நிறைவேற்றித் தரவில்லை என்று அதிருப்தியில் இருக்கிறார்கள். எத்தனையோ விதமான முறைகளில் மனுக்கள் கொடுத்தும் எங்களுக்கானத் தேவைகளை இதுவரை இந்த அரசு செய்யவில்லை என்றாலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று அவர்கள் எங்களது சுற்றுப்பயண காலங்களில் முறையிட்டார்கள்.
நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் இந்த மோசடிக்காரர்களை எனக்குத் தெரியாதா என்ன!!
எச்சரிக்கை.!!. விடியல் அரசா...? மக்களுக்கு விலை பேசும் அரசா ...?
திடீரென 5000 ரூபாய் எதற்கு?
புதியதாக தொடங்கப்பட்ட ஆயிரம் மனமகிழ் மன்றங்களை மறைக்கவா ..?
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை மறைக்கவா...?
போதைப் பொருள்களால் தமிழகம் தள்ளாடுவதை மறைக்கவா ...?
சாலையில் அமர்ந்து போராடும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டங்களை மறைக்கவா...?
அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பை உருவாக்கிய கல்குவாரி கொள்ளைகளை மறைக்கவா...?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை மறைக்கவா...?
பொங்கலுக்கு ஏழை, ஏளிய மக்கள் அனைவருக்கும் வேட்டி சேலை கிடைக்காத கோபத்தை தணிக்கவா ...?
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment