Monday, April 6, 2026

பொதுத்தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் தி.மு.க தலைமை தேர்தல் நிதி வசூலிப்பதற்காக ஒவ்வொரு மாவடத்திலும் மாநாடுகளை நடத்தும்-

 பொதுத்தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில் தி.மு.க தலைமை தேர்தல் நிதி வசூலிப்பதற்காக ஒவ்வொரு மாவடத்திலும் மாநாடுகளை நடத்தும்-

அதில் அறிவிப்பு வந்த நாளிலிருந்து அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தலைமையின் கீழ், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை வசூல் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு கடைகடையாக, வீடுவீடாகச் சென்று வசூல் வேட்டை நடத்துவார்கள்- இவர்கள் புத்தகத்தைத் தூக்கிச் சென்று நிதி கேட்டால் இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது அது ஏன் என்று உங்களுக்கே தெரியும் - இவ்வாறு வசூல் செய்த தொகையில் ஒரு பகுதியை இவர்களே ஆட்டையைப் போட்டுவிட்டு ஒரு பகுதியை மாவட்டச் செயலாளரிடம் கொடுப்பார்கள் - அவர் ஏற்கனவே கட்சியில் ஆட்சியில் பங்குவகித்த முன்னாள் அமைச்சராகத்தான் கட்டாயம் இருப்பார்- அவர் மாநாட்டு நாளில் தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த(?) பணத்தையும் சிறிது சேர்த்துப்போட்டு ஒரு பெரும் தொகையை தலைமையிடம் ஒப்படைப்பார்- உதாரணமாக 2011-ல் நடந்தது, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தேர்தல் நிதியாக 6 கோடி ரூபாய் கொடுத்தார்- அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் நிதியளிப்பு மாநாட்டில் அந்த மாவட்டச் செயலாளர் அதைவிட அதிகமாகக் கொடுக்க வேண்டும் எனவே அவர் 6 கோடியே 50 லட்சம் கொடுத்தார்- இதே போன்று அப்பொழுது தமிழகம் முழுவதும் வசூலான தொகை மட்டும் 180 கோடியைத் தாண்டும் - இதுதான் தி.மு.கவின் வரலாறு- இது மட்டுமல்லாமல் தேர்தல் நேரத்தில் மாஜிக்களுக்கு சில தொகுதிகளைப் பிரித்து பொறுப்பாளர்களாக்கி அந்தத் தொகுதிகளிலும் தேர்தல் செலவை ஏற்க வேண்டும் - கூட்டணிக் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதும் கூட கட்சியின் மாஜிக்களும், தொழிலதிபர்களும் பார்த்துக் கொள்வார்கள்- இன்று தமிழகத்தின் பெரும்பாலான தொழில் அதிபர்கள், கல்வித்தந்தைகள் தி.மு.கவின் பினாமிகளே என்றால் அது மிகையல்ல - இன்று அந்தக் கட்சியின் குடும்பத்திற்குச் சொந்தமாக மட்டும் 45 TV சேனல்கள் இருக்கின்றன - அது மட்டுமல்லாமல் SpiceJet, Express Avenue என்று தமிழத்தின் பெரும்பாலான சொத்துக்கள் அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமானவைதான் - இவர்கள் கால் பதிக்காத தொழில்களே இல்லை- இவற்றோடு சேர்த்து Sun Direct, SCV போன்றவற்றின் சந்தாதாரர்கள் மட்டும் சுமாராக மாதம் ஒன்றிற்கு குறைந்து 250x1 கோடி சந்தாதாரர்கள் என்றால் 250 கோடிகளை சந்தாவாக மட்டும் இந்தக் குடும்பத்திற்குச் செலுத்தி வருகிறார்கள்- சென்ற மாதம் கூட அதிகாரப்பூர்வமாக தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரராக கலாநிதிமாறன் 19,100 கோடி சொத்துமதிப்புடன் முதல் இடத்தில் இருப்பதாகச் செய்தி வெளியானது - இது இவர்கள் கணக்குக் காட்டியுள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டுமே- இவர்களுடைய ஒட்டுமொத்தக் குடும்பம் மற்றும் இவர்களின் பினாமிகளின் சொத்துக்களின் மதிப்பைச் சேர்த்தால் இவர்கள் மட்டும்தான் குறைந்தது 10 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் முதல் இடத்தில் இருப்பார்கள்- இவையெல்லாம் ஐந்துமுறை தமிழகத்தில் ஆட்சிப் பொருப்பில் இருந்து நம்முடை பணத்தை ஊழல் செய்து சம்பாதித்தது- இவ்வளவு சொத்துகள் இருந்தும் இவர்கள் கொரோனா நிவாரன நிதியாகக் கொடுத்தது எவ்வளவு தெரியுமா?- தி.மு.க சார்பில் ஒரு கோடி- தயாநிதிமாறன் சார்பில் ஒரு மாத சம்பளம்- மேலும், தயாநிதியும், கனிமொழியும் MP தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (சொந்தப் பணம் அல்ல) ஒரு கோடி கொடுப்பதாக அறிவிப்பு- சாதாரன திரைப்பட நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி கொடுத்துள்ளார்- ஆனால், தி.மு.கவினர்?- அதே நேரத்தில் தேர்தலின் பொழுது கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி- ம.தி.மு.க, வி.சி.க, தனியரசு போன்றோருக்கு சிலப்பல கோடிகள் - ஆனால் சட்டமன்றத் தேர்தலில் வியூகம் வகுத்துத் தர பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடிகள் என்று அள்ளிவீசத் தெரிகிறது - தயவு செய்து தமிழக மக்களே இதைச் சிந்தித்துப் பாருங்கள் - ஒரு மாபெரும் இக்கட்டான நிலைமையில் இந்த நாடு இருந்த நேரத்திலும்கூட பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவது போல நம்மை நினைத்தது என்றால்?- இன்னுமா புரியவில்லை அவர்களது சுயரூபம் - எக்கேடோ கெட்டுப் போங்கள் -

No comments:

Post a Comment

feb 19