Monday, April 6, 2026

இப்படி ஒரு செய்தி இணையதளங்களில் உலவுகிறது!

 ஒரு பத்திரிகையாளர் கூட இதைப் பகிர்ந்துள்ளார். இது உண்மையா என்று தெரியவில்லை!! எங்களைப் போன்றவர்கள் எல்லாம் திமுகமீது நெடுங்காலம் நம்பிக்கை வைத்துஉழைத்து கலைஞர் காலம் முதல் உடனிருந்ததை எல்லாம் அவருடைய மறைவிற்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் தலைமைக்கு வரும் பொழுது இரண்டாம் பட்சமாக்கியது எந்த ஒரு சக்தி! வேறு யாரும் இல்லை! கட்சி அரசியல் மக்கள் நலன் சார்ந்த ஒன்றையும் செய்யவிடாமல் தடுத்தது எல்லாமே இன்றைக்கு ஸ்டாலினின் மருமகனாய் இருக்கும் ஒருவர் தான்.

அம்பாசமுத்திரம் பக்கம் அரியநாயகிபுரத்தில் இருந்து வந்து 2005 ல் திமுகவில் ஸ்டாலினின் மருமகனாக அறிமுகமாகி இன்றைக்கு அவ்வளவையும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து அவர் பேச்சைத் தான் திமுக இனிமேல் கேட்கும் என்று நிலைக்கு வந்த பிறகு இன்றைய திமுகவை பற்றி என்ன சொல்ல வேண்டி இருக்கிறது!! 70 80 ஆண்டுகளுக்கு மேல் மேலாக திமுகவின் செயல் வீரர்களாக இருந்த பலரும் இவரைத்தான் அனுசரித்துப் போக வேண்டும் என்றால் இதுதான் இன்றைய திமுக!! என்ன செய்வது!! இது நீதிக் கட்சி காலத்தில் இருந்து உருவான திராவிட கொள்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளாதாரக் கார்ப்பரேட் மண்டலமாக இன்றைய திமுக உருவாக்கி விட்டதைத்தான் காட்டுகிறது. பலரால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் அரசியல் முன்னெடுப்பை இப்படித் தங்களுக்கான குடும்ப அமைப்பாக மட்டுமே மாற்றிக் கொண்டு விட்டார்கள். தேர்தலில் பணம் மீண்டும் மீண்டும் இந்த அதிகாரத்தைப் பெற்று தருகிறது யாரைச் சொல்லியும் குற்றமில்லை.! அந்தப் பத்திரிகையாளர் சரியாகத் தான் இந்தக் குடும்ப அதிகாரத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்!! அதை உறுதிப்படுத்தும் வகையாக தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏறத்தாழ 30 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பை முதலில் கனிமொழியிடம் ஒப்படைத்து விட்டு இப்பொழுது ஏன் என்று தெரியவில்லை அதை மாற்றி அத்தொகுதிகளை தனது மருமகன் சபரீசன் கவனித்துக் கொள்வார் என்று சொல்லி அந்த பொறுப்பை அவருக்கு கொடுத்து குட்டையை குழப்புகிறார் ஸ்டாலின். இதுதான் கலைஞருக்குப் பிறகான இன்றைய திமுக!! நான் ஒருபோதும் இந்த சபரீசனை ஒரு திமுக சார்ந்த தலைவராக நினைத்துக் கூட பார்த்ததில்லை!! எங்கோ அரியநாத புரத்தில் இருந்து வந்து மிகப்பெரும் அமைப்பான திமுகவின் அனைத்து அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டு எந்தவித அனுபவமும் வரலாறும் அற்ற இந்த மனிதர் வெறுமனே ஒரு குடும்ப உறுப்பினர் என்கிற முறையில் அரசுத்துறை அத்தனையிலும் அதிகாரம் செய்து வருவது திமுகவிற்கு நல்லதல்ல!! திமுகவிற்கெனவே உழைத்து மண்ணோடு மண்ணாகி போன பல தியாகிகளின் பாவம் சும்மா விடாது!! களம் இறங்கிய சபரீசன்... கட்டம் கட்ட படும் கனிமொழி...உச்சக்கட்டத்தில் கோஷ்டி பூசல்... டெல்லி அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டு மாநில அரசியலில் தலையெடுக்க விரும்பிய கனிமொழி, முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்திற்கு தன்னுடைய டெல்லி லாபியை பயன்படுத்தி பல்வேறு நெருக்கடி கொடுத்து, தென் மண்டல பொறுப்பாளர் பதவியை பெற்றார், குறிப்பாக கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே கனிமொழி அரசியல் வருகையை விரும்பாத முதல்வர் முக ஸ்டாலின் , அப்போதே ஓரம் கட்ட முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து கருணாநிதி மறைவுக்கு பின்பு அரசியலில் என்ட்ரி கொடுத்த உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார் கனிமொழி என, முதல்வர் குடும்பம் கனிமொழி டெல்லி அரசியலை பார்த்துக்கொள்ளட்டும், மாநில அரசியலில் தலையிட வேண்டாம் என கனிமொழியை மெல்ல மெல்ல அரசியலில் இருந்து ஓரம் கட்டுவது மட்டுமின்றி, அவருடைய ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் மறுக்கப்பட்டு ஓரம்கட்டும் படலம் அரங்கேறியது. இப்படி ஒரு சூழலில் சாதுர்யமாக டெல்லி லாபியை பயன்படுத்தி கொண்டு முதல் குடும்பத்தையே டாஸ்மாக் அமலாக்க துறை ரைடு மூலம் லாக் செய்து கட்சியில் தன்னை நிலை நிறுத்தி கொண்டார் கனிமொழி, துணை பொதுச் செயலாளரான கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது, மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கனிமொழி தென்மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுகவினரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார் கனிமொழி. குறிப்பாக தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்ட திமுகவை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கனிமொழியின் செயல்பாடுகள் இருந்து வரும் நிலையில், இதை முதல் குடும்பத்தினரானால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் வரும் சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் எதாவது ஒரு தகுதியில் போட்டியிட்டு மாநிலத்தில் அடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்1/2

No comments:

Post a Comment

feb 19