அமைச்சரவையில் இடம் பிடிக்கும் திட்டத்தில் கனிமொழி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனிமொழி நகர்வு அடுத்து உதயநிதிக்கு போட்டியாக உருவெடுத்து விடுவார் என்கிற அச்சம் முதல் குடும்பத்திற்கு ஏற்பட உடனே கனிமொழியின் ஆட்டத்தை தடுத்து நிறுத்தும் வேளையில் இறங்கி இருக்கிறது முதல் குடும்பம்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தற்போது தென் மண்டலங்களுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவரும் தனியாக தொகுதி வாரியாக கூட்டங்கள் போட்டு நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வருகிறார். அதாவது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை தன்னுடைய ஆதரவாளர்களாக கனிமொழியின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமைத்துள்ளது சபரீசனின் தென் மண்டல சுற்று பயணம். இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட பகுதி பணிகளை சபரீசன் தலையிடுவது கனிமொழிக்கு மிக பெரிய அளவில் அதிருப்தியை ஒரு பக்கம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், கனிமொழி ஆதரவாளர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தப்பி தவறி கூட கொடுத்து விட கூடாது என்பதர்க்கவே சபரீசன் தென் மண்டலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் கனிமொழிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் புகுந்து சபரீசன் ஆய்வு செய்வது திமுகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். #திமுக #DMKFails #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment