ஒரு அரசு தரும் மக்களுக்கான இலவசங்கள் இலவசங்கள் என்பது உண்மையில் என்னவாக ஒரு நாட்டின் பொருளாதார வரவு செலவுகளுக்குள் இடம்பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்!!. குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணங்கள் வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் செலவு சுமார் 6936 கோடி இதை ஆண்டுக்கு ஒரே ஒரு முறைச் செலவாக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அதற்கு இணையாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டம் அரசின் கழுத்தில் நிரந்தரமான நிதிக் சுமையைக் கட்டுகிறது. இந்தத் திட்டம் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 13,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக ஒரே நேரத்தில் சுமார் 20000 கோடி கூடுதல் சுமையை அரசு தன்னிச்சையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இவையெல்லாம் மக்களுக்காக தானே அரசு செலவழிக்கிறது என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் வருமானம் போதாமல் கடனில் மூழ்கி இருக்கும் ஒரு குடும்பத் தலைவர் வீட்டையே அடமானம் வைத்து விருந்துகள் கொடுத்தால் அதை வள்ளல்த் தன்மை என்று சொல்ல முடியுமா? தமிழக அரசின் தற்போதைய நிதி நிலையயும் இதே நிலைதான்!! கஜானா காலியாக இருக்கும் பொழுது கடன் வாங்கி இலவசங்களை வாரி வழங்குவது மக்கள் நலமல்ல அது அரசியல் சூதாட்டம்.!! முதல்வர் இந்த இலவச அறிவிப்புகளை வெளியிடும் அதே நேரத்தில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகத்தின் நிதி நிர்வாகத்தின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.! அரசு தனன்னிச்சையாக நினைத்த மூன்று முக்கிய நிதி இலக்குகளில் இரண்டில் அது முற்றிலும் தோல்வி அடைந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.! இது அரசியல் விமர்சனம் அல்ல!! அரசின் சொந்த கணக்கு புத்தகத்தில் இருந்து வெளிவந்த முதல் தோல்வி!!வருவாய்ப் பற்றாக்குறை ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தை அளவிடும் மிக முக்கியமான அளவுகோல்!! வருவாய் பற்றாக்குறை அதாவது அன்றாட செலவுகளுக்கே வருமானம் போதாமல் கடன் வாங்கும் நிலையை தமிழக அரசு 2025 26க்குள் பூஜ்ஜியமாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயத்திருந்தது! ஆனால் நடைமுறை என்ன சொல்கிறது!! 2022-23ல் ரூ36,215 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை அடுத்த ஆண்டில் நினைத்தது மாதிரி குறையவில்லை!! மாறாக 45 ஆயிரத்து 121 கோடியாக அந்தப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சி தருவது இந்த குறிப்பிட்ட நிதி மதிப்பீட்டு எண்கள் மட்டுமல்ல! இடைக்கால நிதி திட்டத்தில் அரசு தானே கணித்திருந்த அளவைவிட இந்த பற்றாக்குறை 71.5% அதிகம் அதாவது காகிதத்தில் சீர்திருத்தம் என்றும் நடைமுறையில் கடன் குவிப்பு என்றும் நடந்திருக்கிறது!! அன்றாட நிர்வாக செலவுகளுக்கே கடன் வாங்கும் அரசு எப்படி ஆயிரக் கணக்கான கோடிகளை வழங்க முடியும் என்ற அடிப்படைக் கேள்விக்கு இங்கு பதில் ஏதுமில்லை!! இது முதல் தோல்விய எனில் தோல்வி 2-நிதிப் பற்றாக்குறை நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மைச் சட்டம் மாநிலங்களுக்கு ஒரு தெளிவான எல்லையை வகுத்துள்ளது. நிதிப் பற்றாக்குறையானது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்தில் இருக்க வேண்டும்! இது ஆலோசனை அல்ல!! சட்டப் பூர்வமானது!!ஆனால் தமிழக அரசு இந்த எல்லையைத் தாண்டி மிகப்பெரிய ரிஸ்கை எடுத்துள்ளது! அதன்படி தற்போதைய நிதிப் பற்றாக்குறை 3.32% ஆக இருக்கிறது! நிர்ணயித்த இலக்கை விட இது ஆபத்தான எல்லைகளைத் தொட்டு இருக்கிறது! என்று சி ஏ ஜி குறிப்பிடுவது சாதாரண எச்சரிக்கை அல்ல அது ஒரு நிர்வாகத் தோல்விக்கான சிவப்பு விளக்கு எச்சரிக்கை. இதில் ஒரே ஆறுதல் என்னவெனில் மூன்று இலக்குகளில் ஒன்றில் மட்டுமே அரசு வெற்றி பெற்றுள்ளது அது கடன் ஜிஎஸ்டி பி விகிதம். அது ஒருபுறம் இருக்க அரசியல் ஆதாயங்களுக்காகப் பொருளாதாரத்தை பலிகடாவாக ஆக்குவது இந்திய அரசியலில் புதிது அல்ல!! ஆனால் திராவிட மாடல் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு தற்போது எடுத்து வரும் நிதி சார்ந்த முடிவுகள் பொருளாதாரத்தின் அடிப்படையையே அதன் அரிச்சுவடியையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வகையில் உள்ளன! கேட்பதற்கு மக்கள் நலன் போல தோன்றும் அறிவிப்புகள் உள்ளே பார்த்தால் நிதி நிர்வாகத்தின் முழுமையான திவால் தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. பழம் வெளியே பளபளப்பாக இருந்தாலும் உள்ளே முற்றிலும் அழுகிப் போய் இருக்கிறது! சமீபத்தில் அரசு வெளியிட்ட இரண்டு அறிவிப்புகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு!! ஒன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரருக்கு ரூ 3000 உட்பட பரிசுத்தொகுப்பு மற்றும் அரசு ஊழியருக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் இவை இரண்டும் தேர்தல்அரசியலுக்குப் பயன்படக்கூடிய இனிப்பான அறிவிப்புகள் ஆனால் இந்த இனிப்பு எங்கிருந்து வருகிறது யார் அதற்கான விலையைச் செலுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் திராவிட மாடலின் பொருளாதாரம் முற்றிலும் கிழிந்து1/2
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment