தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே #தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். இந்த நிலையில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக மத்திய அரசை எதிர்த்தும், கர்நாடக அரசை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், "1892 மற்றும் 1933 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை அல்லது தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. அணை அல்லது தடுப்பணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்து தமிழக விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும். #penaru
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment