Tuesday, October 13, 2026

Oct 22, 2025 படைப்பாளி #மாதவையா நினைவு தினம்......! #AnantanarayananMadhaviah

 படைப்பாளி #மாதவையா நினைவு தினம்......!

#AnantanarayananMadhaviah அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (A. Madhaviah, ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892-இல் முதல் மாணவராக முடித்தார். இவர் நீச்சலில் கில்லாடி. தாமிரபரணி இக்கறையிலிருந்து அக்கறை சென்று பள்ளியில் கல்வி கற்றார.ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார். இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். அப்போட்டியில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவல், சிறுகதை தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை நடத்தினார் . அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான மா. அனந்த நாராயணன், மீனாட்சி தியாகராஜன், மா. கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலட்சுமி, விசாலாட்சி, டாக்டர் சரசுவதி உட்டபட ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன். சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே53 வயதில்(இதே அக்- 22ல்) உயிர் பிரிந்தது. #Madhaviah #மாதவையா #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost



No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...