மாவையின் பிறந்த நாளையும் விட்டு வைக்காத சுமந்திரன் அதிரடி உத்தரவு
அமரர் மாவையின் 83, வது பிறந்த நாள் இன்று-27/10/2025 இன்றைய நாளில் கட்சியின் எந்த ஒரு உறுப்பினரும் மாவையின் அகவை நாளை சிறப்பிக்கும் எந்த ஒரு வேலையிலும் செயற்பாட்டிலும் ஈடுபடக் கூடாது, கட்சியில் இருந்து நீக்கப்படும் இறுதி நேரத்தில் மரணமடைந்தார் எனவே கட்சி கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாத எவருக்கும் கட்சி எந்த ஒரு மரியாதையும் வழங்காது எனவே அதற்கு மாவையும் விதிவிலக்கல்ல என்று யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து தொகுதி கிளைகளுகளின் தலைவர், செயலாளர்களுக்கும் சுமந்திரன் தொலைபேசி வழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீ.வி.கே.சிவஞானம் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் இறப்பதற்கு முதல் நாள் மாவையின் வீட்டிற்கு சென்று கட்சி தலைமை பதவியில் இருந்து நீங்குமாறு மிரட்டாது விட்டிருந்தால் இம் மரணம் நிகழாது தவிர்க்க பட்டிருக்கலாம் என்பது குடும்பத்தின் நம்பிக்கை.
எது எப்படியோ மாவை மீது பல விமர்சனங்கள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது ஆனால் மாவையால் அழைத்து வரப்பட்ட சுமந்திரன் மற்றும் சீ.வி.கே ஆகியோரே மரணத்திற்கு காரணம் என்று கட்சியின் தொண்டர்கள் கருத்தாக உள்ளது.
மாவையின் வரலாறு,
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழ்தேசிய காவலனும், சிறைமீண்ட செம்மல், பெருந்தலைவர் அண்ணன் மாவை சேனாதிராசா அவர்களின் 83 வது அகவை நாள் இன்றாம்.
அவர் மறைந்தாலும் அவருடைய தமிழ்த்தேசிய பணிகளை அவர் பிறந்த நாளில் நினைத்துப் பார்ப்போம்..!
இதேவேளை அன்னாரின் ஓராண்டு நினைவு எதிர்வரும் 2026, ஜனவரி,29, ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது..!
அன்றைய நாளில் அன்னாரின் குடும்பத்தார் அவருக்கு உருவச்சிலை திறப்பு நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..!
No comments:
Post a Comment