தமிழ்நாட்டில் மொத்தம் 17 வடிநிலப் பகுதிகள் இருக்கின்றன. அதில் கடைசியாக அமைந்துள்ளதே கோதையாறு வடிநிலப் பகுதி. இந்த வடிநிலப் பகுதியில் பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு–1, சிற்றாறு–2 என மொத்தம் நான்கு அணைகள் உள்ளன. இந்த நான்கு அணைகளும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 81 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கும், அதை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தின் 10 வருவாய்க் கிராமங்களில் உள்ள 17 ஆயிரம் ஏக்கருக்கும், மொத்தம் ஒரு லட்சம் ஏக்கர் பாசன நீர் வழங்குகின்றன.
ஆனால் இன்று இந்த வடிநிலப் பகுதியில் ஒரு அணை வெள்ள அபாயக் கட்டத்தை தாண்டியதால், அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் மரங்களின் மேலே ஏறி பாதுகாப்பாக நிற்குமாறு அரசின் ஆணை! ஆச்சரியமா இல்லையா? அதே வடிநிலப் பகுதியில்தான், அதே அணையின் பாசன நீரை எதிர்பார்த்து இருக்கும் அந்த பத்து வருவாய் கிராம மக்கள் காய்ந்து கருவாடாய் கிடக்கிறார்கள்! அங்குள்ள மரங்களும் செடிகளும் எல்லாம் வாடிப் போய்க் கிடக்கின்றன. காரணம் — கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஆண்டுதோறும் கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது, “பராமரிப்பு வேலை” என்ற பெயரில் காகிதங்களில் வேலை முடிந்துவிடுகிறது. ஆனால் தரையில் கால்வாய் ஓட்டைகள், ஒழுங்கற்ற வடிகால், உடைந்த தடைச்சுவர்கள் — எதுவுமே சரி செய்யப்படவில்லை. அதன் விளைவாக, அணையின் அடிப்பகுதியில் திறக்கும் 400 கனஅடி தண்ணீர், கீழே வரும் போது 40 கனஅடியாக குறைந்து போகிறது! இடையில் தண்ணீர் ஒட்டைகளில் ஒளிந்து வீணாகிறது, மக்களுக்கு சேரவே சேரவில்லை. ஆனால் காகிதத்தில் எல்லாம் “பாசன நீர் வழங்கப்பட்டது” என சரியாக கையெழுத்து போட்டுவிடுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி — மேலே பிம்பம், கீழே ஊழல். ஒரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்கள்; இன்னொரு பக்கம் மக்கள் வறட்சியில் துடிக்கிறார்கள் — இவை இரண்டும் வெறும் ஐந்து கிலோமீட்டர் தூர வித்தியாசம் மட்டுமே! இதை விட பெரிய நிர்வாக தோல்வி எது இருக்க முடியும்? நீர் மேலாண்மை என்பது எந்த அரசுக்கும் உயிர்நாடி மாதிரி. ஆனால் இந்த அரசு அந்த உயிர்நாடியையே அறுத்து விட்டது. ஒருபுறம் தண்ணீரை திறந்து மக்களை சாகடிக்கிறார்கள், இன்னொரு புறம் தண்ணீரை தடுத்துவைத்து வறட்சியில் கொலை செய்கிறார்கள். இது அரசு அல்ல — ஊழலின் வெள்ளம் தான். மக்கள் இதை உணரணும்; இல்லையெனில் நாளை தண்ணீர் இல்லாமல் நாமே வாடி வாடி அழிந்து போவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...

No comments:
Post a Comment