Monday, October 12, 2026

Oct 30, 2025 அதெற்கெல்லாம் எந்தநன்றியும் காட்டாத சுயநலக்கூட்டம்தானே நீங்கள்!

 அதெற்கெல்லாம் எந்தநன்றியும் காட்டாத சுயநலக்கூட்டம்தானே நீங்கள்! 

அன்றைக்கு வாஜ்பாய் மாலை 5 மணி வரை அந்த இடுகாட்டில் இருந்து விட்டு தான் திரும்பினார் அதற்கு மறுநாள் காலையில் நீங்கள் பாஜக உதறி விட்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவு தெரிவித்தீர்கள்.உங்களுக்கு இப்படியான சந்தரப்ப வாதங்கள் தவிர தத்துவமோ ஞானமோ என்ன இருக்கிறது. போர்பஸ் ஊழல் வழக்கில் குற்றவாளியாக நிருபணமான ராஜீவ் காந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் கொள்ளை அடிக்க ராஜீவ் காந்தி வருகிறார் என்றெல்லாம் எச்சரிக்கைப் பிரச்சாரம்செய்தீர்கள்!ஈழத் தமிழருக்கு ஆதரவாக நான் டெசோ மாநாடுகள் ஏற்பாடு செய்யும்பொழுது அதில் கலந்துகொண்டு தமிழர்களைக் கொன்றவர் ராஜீவ் காந்தி என்றெல்லாம் பேசிவிட்டு மீண்டும் காங்கிரசருக்கு ஆதரவளித்தீர்கள். இதெல்லாம் என்ன நியாயம் என்று உங்கள் மனசாட்சிக்குத் தெரிந்தால் சரி.! இது அரசியலில் ஒரு பண்பட்ட நிலை! ஆனால் எந்த ஒரு கொள்கை நிலைப்பாடும் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஓட்டு போட மறுத்து விட்டு இன்று அவரை சந்தித்து பேசினேன் என்பதை எதில் சேர்ப்பது. பிறகு இதே முதல்வர் ஸ்டாலின் நேற்று தென்காசியில் பேசும் போது பாஜகஎவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியில் திமுகவை ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்கிறார். பாஜக தான் என்கிற மாதிரி ஒரு கற்பனையான மாயையைக் கட்டுகிறார். எதிர்ப்பு வேண்டும் தான்! அதற்காக உண்மைக்குப் புறம்பாக எதையாவது பேசிக்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ளும் இந்த இரட்டை நிலை அதாவது ஒரு பக்கம் சார்பு ஒரு பக்கம் எதிர்ப்பு போன்ற அரசியல் தந்திரங்கள் முதல்வருக்கு வேண்டுமானால் வழக்கமாக இருக்கலாம்! அறத்தையும் நீதியையும் பேசுகிற அரசியல்வாதிகளுக்கு இது அழகல்ல! ஒரு காலத்தில் ‘இந்திராவே இந்தியா இந்தியாவே இந்திரா ‘என்று இருந்தது போல "தமிழ்நாடே திமுக.திமுக தான் தமிழ்நாடு" என்கிற மாதிரி ஆட்சி அதிகாரத்தின் பாசிசப் போக்கில் தமிழ்நாடு இன்று சிக்கி இருக்கிறது. 2/2 facebook.com/share/p/1Eg2PZ

No comments:

Post a Comment

Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!

  அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!