Monday, October 12, 2026

Nov 4, 2025 வெற்றிகொண்டட்டாம்…..

 வெற்றிகொண்டட்டாம்…..

எங்கள் பகுதியில,இளையரசனேந்தல் பிர்கா 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனில் இணைக்க உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாட்டம் இளையரசனேந்தல் குறுவட்டத்தை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களை 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை மூலம் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து மேற்படி 12 வருவாய் கிராமங்களை கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. ஆனால் மேற்படி 12 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 12 பஞ்சாயத்துகளை திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் யூனியனிலே தொடர்ந்தது. இதனால் பஞ்சாயத்து பணிகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், வருவாய் பணிகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைத்து துறைகளும் கோவில்பட்டி தாலுகாவோடும் தூத்துக்குடி மாவட்டத்தில் இணைந்து இருந்தாலும் உள்ளாட்சி பணி மட்டும் குருவிகுளம் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்தது. இதை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் உருவாக்கும் போது மேற்படி 12 பஞ்சாயத்துகளை உள்ளாட்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம், குருவிகுளம் யூனியனில் தொடர்ந்தது. இந்த நேரத்தில் மேற்படி தென்காசி மாவட்டத்திற்கு மற்றபட்ட அரசாணை 98 ஐ எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் தாக்கல் செய்யப்பட்டு, மேற்படி மனுவின் அடிப்படையில் கோவில்பட்டி யூனியன், தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி 12 இணைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. மேற்படி உத்தரவு மேற்படி 12 பஞ்சாயத்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. மேற்படி தீர்ப்பினை வரவேற்று இன்று 04.11.2025 அன்று காலை 7.45 மணிக்கு இளையரசனேந்தல் முக்கு ரோட்டில் வைத்து தேசிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடப்பட்டது.


Uploading: 105391 of 105391 bytes uploaded.



No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..