#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
#தஞ்சைதிருச்சிமாவட்டத்தில் ———————————————— நேற்று 01.11 .2025 அன்று காலை 9 மணி அளவில் பாஜக மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்களுடன் தஞ்சை மாவட்டத்தில் நடந்த சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டேன். சரியாகக் கும்பகோணத்தில் ஆரம்பித்த இந்தப் பயணம் மாவட்டத்தின் கீழ்கண்ட இடங்களுக்கு எல்லாம் மக்களைச் சந்திப்பதற்குச் செல்வதாக அமைந்தது. 1- நாச்சியார் கோவிலில் கலைப் பொருட்கள் தயாரிக்கும் கைவினைஞர்களைச் சந்தித்தபோது அவர்களுக்கான வணிகம் மற்றும் வாய்ப்புகள் பற்றியும் தொடரும் ஆதரவற்ற அவர்களின் பல சிரமங்கள் போன்றவற்றையும் கேட்டு அறிந்தோம். 2- பாஜகவின் இளைஞர்கள் மாநாடு குறிப்பாக அவர்கள் அரசியல் விழிப்புணர்வு சார்ந்த கூட்டு நிகழ்வு விழா ஒன்றை நடத்துவதன் பொருட்டு கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அதற்கான இடத்தையும் பார்வையிட்டோம். உடன் பாஜக நிர்வாகிகள் இருந்தார்கள். 3- அதை அடுத்து தஞ்சையை ஆண்ட பெரு மன்னன் ராஜராஜன் சோழன் சதய விழாவில் கலந்துகொண்டு தஞ்சைப் பெருவுடையார் கோவில் அருகே உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து தமிழரின் வரலாற்றுக்குச் சிறப்புச் செய்தோம். 4- அதற்கடுத்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் பாஜகவின் தன்னார்வக் தொண்டு (NGO)குழுவினரோடு அதை ஒருங்கிணைத்த தலைவர் நண்பர் இரா. அர்ஜூணமூர்த்தி, @arujunamurthi கிருத்திகாவோடு ஏறக்குறைய 500 பாஜக தொண்டர்கள் கூடிய சிறப்புக் கூட்டத்தில் அக்குழுவினரை வாழ்த்திப் பேசி மேலும் அவர்களுக்குப் பல வழிமுறைகளில் மக்களிடையே வேலை செய்து செயலூக்கம் பெறும் வகையில் பல ஆலோசனைகள் சொன்னோம். 5- அதை அடுத்து திருச்சி அஜந்தா ஹோட்டலில் நடந்த மாநில பாஜக வழக்கறிஞர்கள் மாநாட்டில்பங்கு பெற்றுப் பேசினோம். கூட்டத்தில் கே டி ராகவன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் குமரகுரு, பால் கனகராஜ் மற்றும் அங்கே பரவலாகக் கலந்து கொண்ட ஏனைய நிர்வாகிகளிடம் திட்ட நடைமுறைகள் பற்றிப் பேசினோம். 6- இறுதியாக மணச்சநல்லூர் இரவு கூட்டத்தில் தலை நிமிரும் தமிழகம் நடை பயணத்தில் கலந்து கொண்டோம். ஏறக்குறைய 19 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரமான அரசியல் பணியில் கடந்த 9 நாட்களாக மக்களைச் சந்திப்பது அவர்களின் பிரச்சனைகளை அருகில் இருந்து கேட்டு அறிவதுமாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுடன் நிகழ்ந்த இந்த சந்திப்புகள் என் அளவில் முக்கியமானவை. இந்த நடைபயணங்கள் உற்சாகம் ஆனதும் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புரிதலையும் தருவதாக இருந்தது. இன்றைய பாரதிய ஜனதாவின் புத்துணர்ச்சி கண்டு பலரும் பல்வேறு கட்சிகளில் இருந்தும் புது வரவுகளாக பாஜகவிற்கு வருகிற சூழல் ஏற்பட்டு வருகிறது. பொதுவாகப் பெண்கள் அரசியல் கட்சிகள் என்றாலே சற்றுத் தயங்குவார்கள். இந்தப் பயணத்தில் நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் உற்சாகமான வரவேற்பையும் அவருக்கான ஆதரவையும் தெரிவித்து மகிழ்ந்தார்கள். அவர்கள் அதிகமாக வருகை தந்தும் சந்தித்தும் தங்களது வாழ்த்துகளைக் கூறினார்கள். #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...




No comments:
Post a Comment