Tuesday, October 13, 2026

Oct 25, 2025 #தஞ்சைபகுதிநெல்விவசாயிகள்பிரச்சனைகள்

 #தஞ்சைபகுதிநெல்விவசாயிகள்பிரச்சனைகள்

இன்றைக்கு (25-10-2025)தஞ்சை மாவட்டம் பூதலூர்ப் பகுதியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களோடு சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டேன். அந்தப் பகுதியில் நெல் கொள்முதல் மற்றும் நெல் விவசாயிகள் பிரச்சினைகளை பற்றி நெடுநேரமாக அவர்களோடு பேச முடிந்தது. கொள்முதல் செய்யாமல், கிடங்கு வாடகை, மூட்டைக்கு ரூ 40 இடைத்தரகர் லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிலை.குவிந்திருக்கும் நெல் மற்றும் வெட்டவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்ட நெல்மூடைகளின் சேதாரம் பற்றி அறிந்தபோது இந்தத் திமுக அரசின் அலட்சியம் குறித்து மிகுந்த வேதனை ஏற்பட்டது. எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்லா கிராமப்புறங்களிலும் கொள்முதல் நிலையங்களை கட்டுவதை விட்டுவிட்டு இப்படிப் பொது இடங்களில் அடுக்கி வைப்பதன் மூலம் உற்பத்தியான உணவுப்பொருட்கள் வீணாவது என்பது இந்த அரசின் கையாலாகாத தனத்தைத் தான் காட்டுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். அந்த வகையில் இந்தப் பயணத்தில் நெல் அறுவடை செய்கிற இடத்திலிருந்து நெல் களத்தில் அடித்து அடுக்கி வைக்கப்படும் இடம் வரை மாநிலத் தலைவரோடு சென்று ஆய்வு செய்ததில் அந்த பகுதி டெல்டா மாவட்ட விவசாயிகளின் சிரமங்களை நேரில் அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு பல விதமான ஆலோசனைகள் வழங்கவும் ஏதுவாக இருந்தது. அத்துடன் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுடன் கலந்து கொண்டேன். #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்




Uploading: 85287 of 85287 bytes uploaded.


No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...