Tuesday, October 13, 2026
Oct 28, 2025 #நெல்கொள்முதல்_திராவிடமாடல்
———————————————
தமிழ்நாடு முழுக்கச் செய்தி ஊடகங்கள் மற்றும் எங்கு பார்த்தாலும் பைசன் படத்தைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதை பார்த்த பல தலைவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். ஏதோ அவர்களுக்குத் தோன்றுகிறது உணர்ச்சி வசப்படுகிறார்கள்.அதைக் குறையாகச் சொல்லவில்லை. சரிதான்.
தஞ்சை டெல்டா பகுதியில் மழை தொடர்ந்து பெய்து அங்கே நெல் சாகுபடியானது கொள்முதல் செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. வெட்ட வெளிகளில் தார்ப்பாய்களை போட்டு மூடி
சேமித்து வைத்த நெல் மூடைகளும் மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகப் போய்விட்டன. அதன் பாதிப்பால் தவித்துப் போய் கிடக்கிறார்கள் விவசாயிகள். அந்தத் துறையில் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்! லஞ்சம்! அதுபோக அந்த மூடைகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்முதல் நிலையங்களின் வாடகையும் விவசாயிகளின் மீதே சுமத்தப்படுகிறது.
விவசாயத்திற்கு 40000 கோடி ஒதுக்கீடு செய்கிறது மாநில அரசு அதில் ஓடாத ஸ்ப்ரேயர் நலிந்த தார்பாய் முலைக்காத விதை சத்து இல்லாத நுன் ஊட்டச்சத்து கலவை இவை தான் வழங்க படுகிறது விவசாயிகள் அப்பாவிகள்.மத்திய அரசு நிதியில் தான் மாநில அரசு இடை தரகராக வாங்கி தருகிறது
விவசாயிகளுக்கு கிராமதோறும் நெல் களங்களும் நெல் உளர் மில் அமைத்து. தருவதுடன்
சேமிப்பு கிடங்குகள் அரசு அமைக்க வேண்டும் அல்லது விவசாயிகள் சொந்தமாக அமைக்க மத்திய மாநில அரசுகள் ஊக்கமும் வழிகாட்டுதலும் மானியமும் வழஙக வேண்டும்
நெல் கொள்முதல் விலை ரூ.2500.
இதில் மத்திய அரசு ரூ.2369 பணம் தருகிறது.
மீதமுள்ள ரூ.131மட்டுமே தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஒரிஸ்ஸா அரசு தன் பங்காக ரூ.800ஆந்திர அரசு ரூ.500 தருகிறது.
இது டெல்டா விவசாயிகளின் பிரச்சனை என்று முதல்வர் சொல்கிறார் ஒரு சினிமா இயக்குனர் ஒரு படம் எடுத்து அதை பாராட்டிக் கொண்டிருக்கிற வேலையை ஒரு பக்கம் செய்து கொண்டு மறுபக்கம் இந்த விவசாயப் பிரச்சினைகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று உண்மையில் சொல்ல வேண்டியது தானே அவரது கடமை. மக்கள் சினிமா பார்த்துக் கொண்டிருப்பதால் அதை வைத்து இதை மடைமாற்றம் செய்ய முடியுமா? சாதியை முன் வைத்து திரைப்படங்கள் எடுக்கப்படுவது உண்மையில் வன்முறையைத் தூண்டுகிறது என்பதை தவிர சாதியை ஒழித்து விட முடிந்ததா?
சாதி ஒழிப்பு ஏற்பாட்டில் 90களில் இருந்து மீண்டும் சாதி கூர்மையாகி அதனால் வன்முறையும் கலவரங்களும் தான் ஏற்பட்டிருக்கிறது.இதில் ஏதும் குறைந்திருக்கிறதா? ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று வேறு சொல்கிறீர்கள். ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு என்னென்ன ஜாதிக்காரர்கள் இன்னின்ன தொகுதியில் நிற்க வேண்டும் என்று ஜாதியைப் பிரித்து அதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். இப்படி சாதியை வளர்த்தெடுப்பது அரசியல் கட்சிகள் தானே? ஜாதியை ஒழிப்பதற்குப் படம் எடுத்து இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு மறுபக்கம் அதே ஜாதியை முன் வைத்துப் பிரித்தாளும் வேலையைச் செய்வதும் நீங்கள் தானே?
இந்த விஷயத்தில் என்னையா உங்களது சங்கதி! முன்னுக்கு பின் முரணாகச் செய்து கொண்டு மக்களிடையே கண் துடைப்பு வேலைகளைச் செய்து மீண்டும் மீண்டும் அதிகாரத்தில் இருப்பதற்காக இம்மாதிரி சினிமாக் கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மேடைகளில் அந்த இயக்குனரை அழைத்து ஆரத் தழுவிக் கொண்டு சிரிக்கவும் செய்கிறீர்கள். உண்மையில் அந்த இயக்குனர் நல்லவர் என்றால் உங்களை எதிர்த்துத் தானே அவர் முதலில்படம் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நானும் கூட்டு நரியும் கூட்டு என்கிற தந்திரங்களை எத்தனை காலம் கடைப்பிடிப்பீர்கள்? உங்களுக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துகள். வேறு என்னத்தைச் சொல்ல?
#நெல்கொள்முதல்
#தஞ்சைமண்டலம்
#உணவுக்கழகம்
#விவசாயிகள்
#மத்தியஅரசு
#ஆதாரவிலை
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,
பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...


No comments:
Post a Comment