Monday, October 12, 2026

Oct 30, 2025 இந்தியாவின் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழக வருகையின் போது தான் அவரை மதுரையில் சந்தித்ததாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார்

 இந்தியாவின் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழக வருகையின் போது தான் அவரை மதுரையில் சந்தித்ததாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார். ண்மையில் சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு 40 வருடங்களாக தெரிந்தவர். சமகால அரசியலில் இருவரும் ஈடுபட்ட காலத்திலிருந்து நாங்கள் அறிமுகமானவர்கள். அவர் தூத்துக்குடி 

வ உ சி கல்லூரியில் படித்த காலத்திலிருந்து அவரை நன்கு அறிவேன். இப்போது கோவை திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சிபி ராதாகிருஷ்ணன் வருகையின் போது அவரைச் சந்திக்க நான் ஏன் போகவில்லை என்றால் எனக்கு இந்தக் கூட்ட நெரிசலில் அங்கு நிலவும் அரசாங்க புரோட்டாக்காலின் படி காவல்துறையினுடைய கண்காணிப்பின் கீழ் அந்த நெருக்கடியில் சென்று அவரை சந்திப்பது என் மனதிற்கு உகந்ததாக இல்லை. அவர் தனிப்பட்ட நண்பர் என்கிற முறையில் அவரை எப்போதும் சந்திக்க உரிமை உள்ளவன் என்ற முறையில் இந்தக் கூட்டங்களில் சென்று சிக்கி தவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கருதுகிறேன். அவர் துணை ஜனாதியாக வெற்றி பெற்ற போது தனிப்பட்ட முறையில் எனது டில்லி சென்று வாழ்த்துக்களைச் சொன்னேன் அவரது பதவி ஏற்பின் போதும் கூட நான் டெல்லியில் இருந்தேன். அப்படியான ஒரு நண்பராக அவருடன் பழகி இருப்பதால் இந்தக் கூட்ட நெரிசலில் வரிசையில் நின்று சந்திப்பது பொருத்தமாக இருக்காது என்கிற முறையில் நான் செல்லவில்லை. அது வேறு விஷயம்! முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நாகரிகமாக சரிதான். சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தால் இந்துத்துவா தமிழகத்திற்குள் வந்து விடும் என்று நீங்களும் உங்கள் தங்கைக் கனிமொழியும் அவர் ஒரு தமிழர் என்று கூடப் பாராமல் அவருக்கு தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தீர்களே!. இப்போது போய் எதற்கு அவரிடம் பேசுகிறீர்கள்? அதில் பெருமையாக சி பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்திய துணை ஜனாதிபதியாக வந்திருக்கிறார் என்று வேறு அசடு வழிகிறீர்கள். ஒரு காலத்தில் என்டி ராமராவ் காங்கிரசுக்கு முற்றிலும் எதிராக இருந்தபோதிலும் கூட அவர் ஆந்திரா மண்ணைச் சார்ந்த நரசிம்மராவ் பிரதமராக வந்த போது அவரை ஆதரித்தாரே! அந்த நாகரிகம் கூட உங்களுக்கு நமது மண்ணின் மைந்தரான சி பி ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுக்கும் போது அந்தத் தமிழ் மண் பாசம் வரவில்லையே! உங்களுக்கு அதிகாரப் பாசம் தவிர வேறு எந்த பாசமும் கிடையாது என்று நன்றாக தெரியும். தமிழகத்தின் மைந்தன அப்துல் காலாமை திமுக இரண்டாம் முறையாக குடியரசு தலைவராக வர திமுக சம்மதிக்க வில்லை . இப்போது சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு பயணமாக விஜயம் செய்துள்ளார். உங்களின் வாதங்களின் படி அவர் ஏதாவது இந்துத்துவக் கருத்துரைகளைப் பரப்புவதற்காக இங்கு வந்திருக்கிறாரா?அது சம்பந்தமாக ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறாரா? உங்களது தத்துவமும் கொள்கைகளும் இப்படித்தான் யாரையும் மதிக்காத பித்தேறிய வறட்டு வாதங்களால் நிரம்பிக் கிடக்கிறது. இந்துத்துவா ஒற்றை தன்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதை விட லஞ்ச லாவண்யம் ஊழலற்ற ஆட்சியை நிர்வாகத்தை திறமையாக நடத்த தெரியாத நீங்கள் உங்கள் குடும்ப நலச் சொத்துக்களையும் உங்களது விசுவாசிகளை மட்டுமே காப்பாற்றிக் கொளவதற்கு ஆட்சி அதிகாரத்திற்கு வரும் நீங்கள் இந்துத்துவா இந்துத்துவம் என்று அதை எதிர்ப்பதாகக்கூறிக் கொண்டே உங்களது தவறுகள் மோசடிகள் ஏமாற்றுகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மக்களின் முன்பு மூடி மறைக்கிறீர்கள். நேற்றுக் கூட உள்ளாட்சித் துறைகள் முழுக்க ஊழல் மலிந்து விட்டது என்று ஊடக அரசியல் சமூக நல ஆய்வுகள் கூறும் போது அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து எங்கள் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர் என்று பீற்றிக் கொள்கிறீர்கள். அவருக்கு ஓட்டு போடுகிற போது ஓராயிரம் மறுப்புக்கருத்துக்களைச் சொல்லி ஓட்டு போடாமல் இருந்துவிட்டு இப்போது போய் அவரைச் சந்திப்பதாக சொல்லி எங்கள் தமிழ் மண்ணைச் சேர்ந்தவர் என்று புளங்காகிதம் அடைகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் ஆட்சியில் பங்கேற்றீர்கள். அப்போது எல்லாம் உங்களுக்கு இந்துத்துவா தெரியவில்லையா? கலைஞர் கைதின் போது எந்தப் பிணைப்பெட்டிஷனும் போடாமல் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆணையிட்ட வாஜ்பாயும் அத்வானியும் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அதேபோல் உடல்நிலை சரியில்லாத போதிலும் முரசொலி மாறன் அவர்களை இலக்கா இல்லாத மத்திய மந்திரியாக தங்கள் ஆட்சியில் நியமித்தார்களே அதுவும் மறந்து விட்டதா? அவரை வாஜ்பாய் அமெரிக்க சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அவர் இறந்த போது வாஜ்பாய் அவர்கள் அவரது அடக்கத்திற்காக பென்ட் நகர் இடுகாடு வரை மாலை நேரத்தில் வந்திருந்து மரியாதை செலுத்தினார்.1/2
Quote
M.K.Stalin
@mkstalin
நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. @CPR_VP அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! Met our Hon’ble Vice-President, Thiru @CPR_VP,

No comments:

Post a Comment

Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!

  அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!