Monday, October 12, 2026

Oct 31, 2025 1967 ல் ‌ தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற பொழுது ஆர்.

 ‌‌ 1967 ல் ‌ தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற பொழுது ஆர். கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள்தான் தமிழ் நாடு காங்கிரஸ் மாநில தலைவராக இருந்தார் அந்த நேரத்தில் பம்பாயில் சுற்றுப்பயணம் செய்வதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரும் சொல்லின் செல்வர் சம்பத் அவர்களும் உரையாற்ற வந்திருந்தார் போதார் கல்லூரி மைதானத்தில் அவர்கள் பொதுக்கூட்டம் நடந்தது அதிலே கிருஷ்ணசாமி நாயுடு ஐயா பேசுகின்ற பொழுது

‌ துணிவெளுக்க ‌ மணலும் உண்டு . தோல்வெளுக்க சாம்பல் உண்டு மனம் வெளுக்க வழி இல்லையே ‌ இந்தப் பாடலை சொல்லி ஆதங்கத்துடன் உரையாற்றினார் அடுத்து பேசிய சொல்லின் செல்வர் சம்பத் எனக்கு முன்னால் பேசிய கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் இவ்வளவு உருக்கமாக சொன்னாலும் நம்முடைய தமிழர்கள் எங்கே கேட்க போகிறார்கள் அங்கே ஒரு கொடி அசைந்து வருகிறது கண்கள் நட்சத்திரம் போல் ஒளி வீசுகின்றன அன்னம் நடை பயில்வது போல் நடந்து வருகிறது அருகில் வந்து பார்த்தால்‌ ஆ...ஒரு பெண்‌ என்று கிருஷ்ணசாமி நாயுடு பேசினால் நம் தமிழர்கள் ரசித்து கேட்பார்கள் பாவம் அவர் பாரதியார் பாடலை பாடுகிறார் கேட்பதற்கு யார் இருக்கிறார்‌ என்று புதிதாக காங்கிரசில் சேர்ந்த அந்த முன்னாள் திமு கழக தலைவர் ‌ சம்பத் ‌ அவர்கள் பேசினார். #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்

Uploading: 38091 of 38091 bytes uploaded.


No comments:

Post a Comment

Oct 21, 2025 பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும்,

  பெரிய கட்சியாக மாற உதவியது . அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாகக் காணப்பட்டார், பின்னர் துணைப் பிரதம...