#நீண்டஎங்களதுபகுதியின்எதிர்பார்ப்புநிறைவேறியது
#இளையரசனேந்தல்பிர்கா கோவில்பட்டியில் இணைப்பு அடுத்து #கோவில்பட்டிமாவட்டம்கோரிக்கை ———————————————— நமது போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு* *கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் மூன்று மாதத்திற்குள் இணைக்க நடவடிக்கை என அரசு தரப்பு தகவல்* *இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சியில் உள்ள மக்களின் 17 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இருந்த போதிலும் ஊராக வளர்ச்சி துறை மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து வந்தது. தென்காசி மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு நெல்லை மாவட்டத்துடன் இருந்து வந்தது. 01.09.2017ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட போது இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளின் ஊராக வளர்ச்சி துறை தென்காசி மாவட்டத்துடன் தொடரும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. . இதற்கிடையில் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டும் என்ற அரசாணை ரத்து செய்ய கோரி தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, ஜெயபிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் ஆகியோர் தலைமையான பெஞ்ச் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமென்ற அரசாணை ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளனர் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க ஏற்கனவே கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளதாகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை இயக்குனருக்கு இது அனுப்பப்பட்டிருப்பதாகவும், மூன்று மாதங்களுக்குள் உத்தரவுகள் நிறைவேற்றப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேசிய விவசாயிகள் மற்றும் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழுவுக்கு கிடைத்த மகத்தான வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
Oct 22, 2025 "கேட்டுக்கோடி உருமி மேளம்" – நம்ம ஊரு fusion பாட்டு! 'பட்டிக்காடா பட்டணமா..
"கேட்டுக்கோடி உருமி மேளம்" – நம்ம ஊரு fusion பாட்டு! 'பட்டிக்காடா பட்டணமா.. கிராமத்துக்கும், டவுனுக்கும் இடையில நடக்கிற ச...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...




No comments:
Post a Comment