Monday, October 12, 2026

Nov 4, 2025 ஒரு செய்தியை கேள்விப்பட்டேன்.

 ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். கொங்கு மண்டலத்தில் அமைச்சர் முத்தூர் சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பை கொடுத்து இருக்கிறார்கள். மிக நல்லதொரு விஷயம். அவர் மிக நீண்ட கால திமுக நிர்வாகி. திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக கொங்கு மண்டலத்தில் 1991 முதல் பல வகையில் களப்பணி ஆற்றியவர். என்பதை அறிவேன். திரு மு. பெ. சாமிநாதன். மாதிரியான உண்மையான ஆளுமைகள் அப்பால் தான் கொங்கு மண்டலத்தின் பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை திமுக கொடுத்ததன் பிராயச் சித்தமாக இன்றைக்கு சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படியான உண்மைத் தொண்டர்களை திமுக அடையாளம் காணும்பொழுது அது உண்மையில் திமுகவை அடகு வைத்து சம்பாதித்த கொழுத்த மாவட்ட செயலர்கள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் போன்றவர்களை விசாரணை செய்யும் வகையில் இருந்தால் நமக்கு மகிழ்ச்சி தான் இதைத்தான் நான் திமுகவில் இருந்த போதும் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த குடும்பம் இப்பொழுதுதான் திரும்புகிறது . #திமுக #dmk

No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..