Monday, October 12, 2026
Nov 10, 2025 #இதுபழையதிமுகவும்அல்ல #இதுபழையதிகவும்அல்ல.
#இதுபழையதிகவும்அல்ல.
————————————————
மத்திய அரசிடம் தொடர்ந்து வேண்டும்மென்றே விரோத போக்கை கையாலும் திமுக அரசு தான் சொந்த மாநிலத்தில் அதைக் காட்டியே பலவிதமான மக்கள் நலன்களைப் புறக்கணிக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாற்றாந்தாய் மனநிலையில் செயல்படுகிறது என்று விமர்சிக்கும் திமுக விற்கு தன் குடும்பத்தை தவிர இந்த மக்களை எந்த வகையில் மாற்றாந் தாய் தளத்தில் நடத்துகிறது என்று அரசியல் புரிந்தவர்களுக்குத் தெரியும்.
இளைஞர்களோ அரசியல் புரிந்தவர்களோ புதியவர்களோ யார் தமிழ்ச் சூழலில் அரசியல் செய்ய வந்தாலும் அவர்களை மிக மோசமான முறையில் சங்கி என்றோ பிற்போக்குத் தனமானவர்கள் என்றோ மேடையில் நாக்கூசாமல் பேசிவிட்டு தங்களுடைய ஆதிக்க அரசியல் அதிகாரத்தை மட்டும் தமிழ்ச் சூழலில் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்ப அரசியல் அதன் அளவில் எத்தனை விதமான சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து கொண்டு தன்னுடைய தனித்த அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதெல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட வேண்டும்.
திராவிட முன்னேற்ற கழகம் திக போன்ற நெடுங்கால சீர்திருத்த பணியில் ஈடுபட்ட முன்னோடிகள் அனைவரையும் ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய தேசியம் என்பது இந்திய இறையாண்மை என்பது எங்களுக்கு எதிரானது என்றும் சொல்லிக் கொண்டு காலத்தை கடத்தி வந்துவிட்டது.வளர்ந்து பெருகிவிட்ட தங்களது தனித்த பொருளாதாரச் செல்வாக்கால் அல்லது ஓட்டு வங்கிகளுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெற்று விட முடியும் என்கிற கார்ப்பரேட் நம்பிக்கையால் மட்டுமே இந்த அரசு கருத்துத் தளத்திலும் பொருளாதார தளத்திலும் செயல்படுகிறது. திமுக வின் ஆட்சிக்காலத்தில் பலன் பெற்றவர்கள் என்று பலரையும் எடுத்து பார்த்தால் பல கோடி கணக்கான ஊழல் பணம் செல்வாக்குள்ள மனிதர்களாக இன்று அவர்கள் திகழ்கிறார்கள்.
இன்றும் பல்வேறு பன்னாட்டு தொழில் ஒப்பந்தங்கள் உள்நாட்டு தொழில் அதிபர்களுடன் கூட்டு என்று ஒரு மக்களுக்கான சேவை அரசாக இயங்க வேண்டியது என்பதையெல்லாம் தாண்டி தனித்த குடும்ப பொருளாதாரச் செல்வாக்கும் அதிகாரமும் உள்ள அரசாக திமுக விளங்குகிறது.
மக்களை பிச்சைக்காரர்களாக்கி இலவசங்களை கொடுப்பதன் மூலமே அதிகாரத்தை பெற்றுவிட முடியும் என்று நம்புகிற இந்த மோசமான சூழல் வெளியே தெரியாத பனிப்பாறை போல தமிழ் மக்களைப் பாதிக்கிறது. உலகின் மாபெரும் நாடான இந்திய தேசிய இறையாண்மையிலிருந்து தமிழ் மக்களைத் துண்டிப்பதன் மூலம் மிக மோசமான தந்திரமான முறையில் தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கும் இன்றைய குடும்ப அரசியலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் எனில் இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் இந்த அரசைப் புறக்கணிக்க வேண்டும்.
இது பழைய திமுக அல்ல இது பழைய திக அல்ல.
இன்று ஏமாற்றும் திராவிட மாடல், விடியல் ஆட்சி
#DMKFailsTN
#திமுக
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
Nov 2, 2025 #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுவாழ்க்கைபயணம்69
#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுவாழ்க்கைபயணம்69 ————————————— ‘நம்ப முடியாத எனது நா...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...

No comments:
Post a Comment