Monday, October 12, 2026

Nov 7, 2025 "வந்தே மாதரம்" என சொல்லித்தான் தூக்குமேடை ஏறினான் குதிராம் போஸ்.

 "வந்தே மாதரம்" என சொல்லித்தான் தூக்குமேடை ஏறினான் குதிராம் போஸ். "வந்தே மாதரம்" என சொல்லிகொண்டேதான் பிரிட்டிஷ்காரனிடம் அடிவாங்கி செத்தான் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய், கொடிகாத்த குமரனும் அதை சொல்லியே ரத்தம் சிந்தினான்

திலகர் முதல் வ.உ.சி வரை ஒவ்வொருவரும் முழங்கிய வார்த்தை அது கங்கை கரை முதல் தாமிரபரணிவரை ஒருசேர எழுந்த எழுச்சி அந்த வார்த்தை, கங்கை கரையிலே சித்தரஞ்சன் தாஸ் போன்ற தேசாபிமானிகள் அதை உரக்க சொல்லை தாமிரபரணி கரையிலே அதை சொல்லியே மக்களை திரட்டினார் வ.உ.சி ஜாலியன் வாலாபாக்கில் செத்தவர்கள் அதை சொல்லித்தான் செத்தார்கள், அந்தமான் சிறையிலே அலறியவர்களும் "வந்தே மாதரம்" என வங்க கடலோடு அலறித்தான் சொன்னார்கள் பிரிட்டிஷ்காரனை நோக்கி துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாந்தன், நீலகண்ட பிரம்ம்ச்சாரி, ஆசாத் சந்திரசேகர் ,நேதாஜி முதல் லண்டனில் பிரிட்டிசாரை சுட்டு கொன்ற உத்தம்சிங், மதன்லால் திங்காரா வரை முழங்கியது அந்த வார்த்தைதான் 1947ல் தேசம் சுதந்திரம் அடைந்தபோது, தேசியகொடி கம்பீரமாக பறந்தபோது ஒவ்வொருவர் நாவிலும் ஒவ்வொரு வீட்டிலும் உற்சாகமாக எழுந்ததும் இந்த வார்த்தைதான் யார் அந்த மாபெரும் வார்த்தையினை , தேச மந்திரத்தை கொடுத்தான்? அவன் பெயர் சட்டர்ஜி 19ம் நூற்றாண்டில் வங்கத்தில் அவன் எழுதிய எழுத்துத்தான் எழுத்துலகில் பெரும் திருப்பம் கொடுத்தது, இலக்கிய மரபுக்கு அவன் தலைகீழ் திருப்பம் கொடுத்தான் அவன் வழியில்தான் பின் மகாகவி பாரதியும் வந்தான் பாரதிக்கு மட்டுமல்ல தேசத்துக்கே இலக்கிய முன்னோடியாக இருந்த அந்த தேசாபிமானியின் பெயர் "பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்" பின்னாளில் இது "பங்கிம் சந்திர சட்டர்ஜி" என மாறிற்று எவ்வளவோ எழுதியவன் "ஆனந்த மடம்" என்றொரு இலக்கியத்தை எழுதினான், அதில் வந்த வார்த்தைதான் "வந்தே மாதரம்" அதற்கு "தேசதாயே உனக்கு வணக்கம்" என பொருள் இந்த "வந்தே மாதரம்" எனும் வங்க சொல்தான் திலகர், லஜபதிராய் பின்னர் பாரதி என தேசமெங்கும் பெரும் எழுச்சி கொடுத்தது ஒவ்வொரு இந்துஸ்தானியும் இது எங்கள் மண் , இது பாரத தாயின் தேசம், நாமெல்லாம் இந்தியர்கள் , நாமெல்லாம் இந்திய தாயின் மக்கள் என ஒன்றாய் எழசெய்தது அந்த "வந்த மாதரம்" எனும் அந்த ஒரு மந்திரம்தான் அசைக்கமுடியா பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்த தேசம் ஒற்றுமையாக நின்று போராடி பிடுங்கி எரிய வைத்தது இன்றும் "வந்தே மாதரம்" எனும்போது நம்மை அறியாமல் ஒரு பரவசமும், கம்பீரமான நாட்டுபற்றும், ஆனந்த கண்ணீரும் வருவது இயல்பு நாட்டுபற்றுள்ள ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்துவிட்ட தேச மந்திரம் அது இன்று வலுவான பாரதமாக நாம் வலுத்து நிற்கவும் அந்த ஒற்றுமை நிலைக்கவும் இந்த "வந்தேமாதரம்" எனும் முழக்கமே வேர் அதைத்தான் முழங்கி சுதந்திரம் பெற்றோம், அந்த பெயரைத்தான் சுவாசமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அந்த உன்னதமான தேசாபிமானிக்கு பெரும் அஞ்சலியினை "வந்தே மாதரம்" என தேசம் சொல்லும் நேரம், அவன் கொடுத்த முழு பாடலையும் காணலாம் பாரத பிரதமர் மோடி "வந்தே மாதரம்" என முழங்க அழைப்பு விடுத்திருக்கும் நேரம், அதன் முழு பொருளையும் முழு பாடலையும் ஒவ்வொரு இந்தியனும் அதை அறிந்திருத்தல் அவசியம் அதனை தமிழக ஊடகங்கள் செய்யவில்லை, கட்சிகள் செய்யவில்லை என்பதால் நாம் நம் கடமையாக தருகின்றோம், அதனை ஒவ்வொருவரிடம் கொண்டு சேர்க்கும் கடமை எல்லோருக்கும் உண்டு, குறிப்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு நிரம்ப உண்டு நாளைய தலைவர்களான குழந்தைகள் அதனை மனதில் நிறுத்தி வளர்தலே இந்நாட்டுக்கு பலமானது, இதோ அந்த பாடலின் பொருள் "பாரத தாயே உன்னை வணங்குகிறோம் சட்ட்ர்ஜியும் அவர் கொடுத்த 'வந்தே மாதரம்" பாடலும் மறக்க கூடியது அல்ல‌ இந்த வங்கபாடலுக்குத்தான் தமிழில் மொழி சொன்னான் பாரதி "வந்தே மாதரம் என்போம்-எங்கள் மாநிலத் தாயை வணங்குதல் என்போம் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜென்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே" சட்டர்ஜியின் வந்தே மாதரம் எனும் வங்க வரிகளும், எங்கள் தாயே என பாரதி எழுதிய வரிகளும் மொழியால் வேறு என்றாலும் அவை வணங்கியது இந்த பாரத அன்னையினை, அவள் திருவடிகளையே போற்றி பாடின‌ அந்த மகத்தான பாடலை ஒவ்வொரு இந்தியனிடமும் ஒவ்வொரு குடிமகனிடமும் ஒவ்வொரு குழந்தையிடமும் கொண்டு சேர்ப்போம் அன்று நாட்டில் பெரும் எழுச்சிதந்த இந்த "வந்தே மாதரம்" ஒலிக்க ஒலிக்க தேசம் இன்னும் இன்னும் எழும்பி ஒளிரட்டும்

No comments:

Post a Comment

Nov 5, 2025 ஒன்றை மறந்தால்‌, இன்னொன்று வரும்

  ஒன்றை மறந்தால்‌, இன்னொன்று வரும் புகைப் பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப்‌ போடப்போய்‌, வெற்றிலைப்‌ போட்டுக்கொண்டே புகைப் பிடிக்கும்‌...