Monday, September 2, 2019

மேற்கு தொடர்ச்சி மலை - இயற்கையின் அருட்கொடைகளை கபளீகரம் செய்வது தான் இவர்களுடைய சுற்றுச்சூழல் சூத்திரங்கள்.

மேற்கு தொடர்ச்சி மலை - இயற்கையின் அருட்கொடைகளை கபளீகரம் செய்வது தான் இவர்களுடைய சுற்றுச்சூழல் சூத்திரங்கள்.
------------------------
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மாதவன் காட்கில், கஸ்தூரி ரங்கன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பைக் குறித்து இரண்டு குழுக்களின் விரிவான அறிக்கைகள் மத்திய அரசிடம் வழங்கப்பட்டன. மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள் காட்கில் குழு 1,29,037 சதுர கி.மீ என்றும், கஸ்தூரி ரங்கன் குழு 1,64,280 சதுர கி.மீ என்றும் வரையறை செய்தது. சுமார் 39 லட்சம் குடும்பங்கள் கேரளப் பகுதியில் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழல் பாதிக்கும் பகுதியில் வசிக்கின்றனர் என்று காட்கில் குழுவும், கஸ்தூரி ரங்கன் குழு 4 லட்சம் குடும்பங்கள் இருப்பதாகவும் தங்களின் அறிக்கையில் கூறியிருந்தனர். இந்த நிலையில் மக்கள் நடமாட்டம், மக்களுடைய தேவைகளை இந்த பகுதியில் பூர்த்தி செய்யும்போது, மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும் என்று தங்களின் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

No photo description available.இந்த மக்களின் மின்சார வசதிக்காக, பெரிய அணைகள், வேறு சில வசதிகள் செய்யபடும் போது பசுமைக் காடுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அளிக்கப்படுகின்றது. அதை தடுக்க வேண்டுட்ம என்று எச்சரிக்கையை குறிப்பிட்டிருந்தது. புதிய பெரிய அணைகள், குவாரிகள் போன்ற நடவடிக்கைகளால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமல்ல, அங்குள்ள அமைதிப் பள்ளத்தாக்கின் அமைப்பும், பாழ்பட்டு போகும் என்றும் வேதனையோடு, தங்களுடைய பரிந்துரைகளை முன்வைத்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை இயற்கையின் அருட்கொடை. அதனுடைய மரபு ரீதியான தன்மைகளை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நாட்டின் முக்கியமான இயற்கை வளங்களை கொண்ட கேந்திரப் பகுதியாகும்.
மேற்கு தொடர்ச்சி மலை தமிழகம், கேரளம், கர்நாடகம், கேரளா, கோவா, மகாராஷ்டிரா, இன்னும் குஜராத் வரை இதனுடைய நீட்சி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை இந்த இரண்டு குழுக்களின் அறிக்கையின் மேல், குறிப்பிட்ட மாநிலங்களின் கருத்துகளை 2015 இறுதியில் கேட்டபோது, கருத்து சொல்லாத ஒரே மாநில அரசு நம்முடைய தமிழக அரசுதான். ஆட்சியில் உள்ளவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையைப் பற்றி தெரியுமா? அதனுடைய சுற்றுச் சூழல் பிரச்சனை குறித்து தெரியுமா?
இவர்கள் மணல் அள்ளி கொழுக்க வேண்டும், குவாரிகள் அமைக்க வேண்டும், மரங்களை வெட்டவேண்டும், மலைக்காட்டுப் பகுதியில் போலிப் பட்டாக்களை பெறவேண்டும் என்பது தான் இவர்களுடைய சுற்றுச் சூழல் சூத்திரங்கள். இப்படி தானே இங்குள்ளவர்கள் அக்கறைப்படுகிறார்கள். வேறென்ன சொல்ல முடியும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-09-2019

கவிஞரின் வரிகளில்.... கடந்த 47 ஆண்டுகளாக கேட்கும் இனிமையான பாடல்.


சிறு வயதில் என்ன பக்குவப்பட்ட பொறுப்பு ...
சகோதர பாசம்...
சோர்வற்ற கடமை.
கவிஞரின் வரிகளில்....
கடந்த 47 ஆண்டுகளாக கேட்கும் இனிமையான பாடல்.

தஞ்சை பெருஉடையார் கோவில் 1859 #Thanjavur

தஞ்சை பெருஉடையார் கோவில் 1859
#Thanjavur 1859
Image may contain: sky and outdoor

Sunday, September 1, 2019

#Gandhi_and_Tagore Not only rare but historical ....

திருநெல்வேலி மாவட்டம் - 229 | Tirunelveli District -229.

திருநெல்வேலி மாவட்டம் - 229 | Tirunelveli District -229. 

இன்றோடு நெஞ்சையள்ளும் எங்கள் தெற்குச் சீமையான வீரபூமி திருநெல்வேலிமாவட்டமாக பிரிந்து இரண்டேகால் நூற்றாண்டுகள் அதாவது 225ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைப் பதிவு செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் ஒரு மமதையும் உள்ளது.
திருநெல்வேலிக்கு நிகர் திருநெல்வேலிதான். எத்தனையோ பிதாமகர்கள், எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ இலக்கிய கர்த்தாகள், வரலாற்று நிகழ்வுகள்.... எதைச் சொல்ல எதைவிட... 
சொல்லிக்கொண்டே போகலாம் நெல்லையின் புகழை.

எனது “நிமிர வைக்கும் நெல்லை” நூலை 15ஆண்டுகளுக்கு முன்னால் பதிப்பிக்கும் போது எவ்வளவு பாராட்டுகள். திருநெல்வேலியினால் எனக்குப் பெருமை கிடைத்தது. 
டெல்லி தமிழ்ச்சங்கத்தில் இந்நூலை வெளியிடும் போது டெல்லிவாழ் அத்தனை நெல்லை வாசிகளும் கலந்துகொண்டு சிறப்பித்ததை மறக்கவே முடியாது. அதேப்போல சென்னையில் நடைபெற்ற இந்நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா இரண்டிலும் நெல்லை நண்பர்கள் திரளாகக் கலந்துகொண்டதும், நெல்லையின் ம.தி.தா இந்துக்கல்லூரியில் நடந்த விழாவிலும் மகிழ்ச்சியோடு நெல்லை மக்கள் பங்கேற்றதையும் நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.

இன்றும் உலக நாடுகளுக்குச் செல்லும்பொழுது, “நிமிரவைக்கும் நெல்லை” நூல் பற்றியும், “கதை சொல்லி” இதழ் பற்றியும் எவரேனும் ஒருவர் நிச்சயம் பாராட்டுவதுண்டு. 48 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டதற்கு இதைவிட வேறு என்ன வெகுமதி வேண்டும் என்று மகிழ்ச்சியாக நினைக்கும் தருணங்கள் இவை.
மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்லக்கூடிய சென்னை ராஜதானியில், 1790ம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் 1ம் நாள் உதயமானது தான் திருநெல்வேலி மாவட்டம். 
18ம் நூற்றாண்டில் அன்றைக்கு சென்னை ராஜதானியில் 23 மாவட்டங்கள் ஆந்திரா- ஒரிசா எல்கை வரையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் பரவி இருந்தன.

பிரிட்டிஷ்காரர்கள் நில அளவை மூலம் இந்த எல்லைகளை வரையறுத்து தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள். மாநில முதல்வர் என்று அழைக்காமல் பிரதமர் என்று அழைக்கப்பட்டார். நாட்டு விடுதலைக்குப் பின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
நெல்லை மாவட்டத்தின் வடக்கில் விருதுநகரின் தென்பகுதி, திருவில்லிபுத்தூர், தென்கிழக்கே உவரி, மற்றும் தெற்கே வள்ளியூர் தாண்டி பழவூர்,முப்பந்தல் வரையும், கிழக்கே வங்ககடலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஐவகை நிலங்களும் அமைந்த மாவட்டம் தான் அந்தகாலகட்டத்தின் நெல்லைச் சீமை.
மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமான மாவட்டம். தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டாக பாளையங்கோட்டை சிறந்து விளங்கியது. நெல்லை மாவட்டத்திலே பொதியமலையில் உற்பத்தியாகி புன்னைக்காயலிலே கடலில் கலக்கும் தாமிரபரணி தமிழகத்தின் ஒரே ஜீவநதி. உலகின் தொன்மையான நாகரிகம் என்பது தாமிரபரணிக்கரை நாகரிகம்தான் . அதற்கு காலத்தின் சாட்சியாக ஆதிச்சநல்லூர் திகழ்கின்றது.
இம்மாவட்டத்தின் வடபகுதி வானம் பார்த்த கரிசல் மண். மேற்குப் பகுதி செம்மண். ஒருபக்கம் விரிந்த கடல், மறுபக்கம் வானுயர்ந்த மலைத்தொடர், அருவிகள், வனங்கள், தேரிக்காடுகள் என சகல புவி அமைப்புகளைக் கொண்ட ஒருங்கே கொண்ட மாவட்டம். தமிழகத்தில் அதிர்வுகள் பலவற்றை உருவாக்கிய உயிரோட்டமான, தியாகத்திற்கு பெயர்போன வீரக்களம் தான் இந்த பரணி மண். அதன் புகழ்களை இந்த ஒரு பதிவில் அடக்கிவிட முடியாது.
நெல்லையிலிருந்து தூத்துகுடி தனி மாவட்டமாக பிரிந்தாலும் நெல்லையின் சகோதர மாவட்டமாகத்தான் இன்றைக்கும் திகழ்கின்றது. விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பகுதி இங்கிருந்து பிரிந்தாலும் அதன் கலாச்சாரம் நெல்லை மாவட்டத்தோடு ஒட்டியமைந்தது.
திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று தாமிரபரணியை கம்பரும் பாடியுள்ளார்கள். இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது.
விரைவில், நான்காவது பதிப்பாக எனது “நிமிரவைக்கும் நெல்லை” நூல் இரண்டு பாகங்களாக வர இருக்கின்றது. அதில் இயன்ற அளவு திருநெல்வேலியின் தொன்மையும், வரலாறும், சிறப்புகளையும் சொல்லியுள்ளேன். அதன் பெருமை உலகளவு; ஆனால் நானறிந்ததே உள்ளங்கையளவு. அவை அத்தனையையும் முறையாகப் பதிவு செய்துள்ளேன்.
எனது நிமிரவைக்கும் நெல்லையில் குறிப்பிட்டவாறு,
“ என்னைப் பிரசவித்த மண்ணே, 
என் பரம்பரையின் மூத்தகுடிகளே,
எனக்கு நேர்வழி காட்டுங்கள்”

..... என்று இந்த நன்னாளில் மகிழ்ச்சியோடு இந்த நினைவுகளைப் பகிர்வதை நான் பிறந்த பூமிக்குச் செய்யும் கடமையாக நினைக்கிறேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
01-09-2019.

Tail Piece : நெல்லை குறித்து நான் ஏடுகளுக்கு எழுதிய கட்டுரைகள் சில...

No photo description available.

பார்வைகள்_சில..

#

...

தொடர்ச்சியாக அதிர்ஷ்டக் காற்று வீசும் போது... வான சஞ்சாரம் செய்கிறவர்களை எனது நெஞ்சின் ஞாபகக் குறிப்புகளில் நான் பதிவு செய்து கொள்வதில்லை.

பரமபத ஆட்டத்தில் ஏணியும், பாம்பும்-மாறி மாறிச் சந்தித்துக் கொள்வதைப் போல, சாதனையும், சோதனையும் மாறி மாறி மேடை ஏறும் ஒரு வாழ்க்கை நாடகத்தில்-ஏற்றுக் கொள்ளப்படும் கதாநாயகனே என் மனதிலும் இடம் பெறுகிறான்.
****

பூக்கடைகள் எல்லாம் நந்தவனங்களாக மாறிய மாதிரி இலக்கிய அழகு அரசியல் சிம்மாசனம் ஏறியது.

இலக்கியத்தில், நெல்லை குருநாதய்யர்,சீத்தாரமையர் பஞ்சாங்கமாக குமுதம் இதழும் - ‘அவள் ஒரு தொடர்கதை’யில் ஒரு விதவைப் பெண் கல்யாண உடைகள் தைக்கும் காட்சியைச் சித்தரிக்கும் போது “இந்த விதவைக்கு இத்தனை முகூர்த்தங்களா?” எனப் புதுக் கவிதை வசனம் எழுதிய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரும் - இமயத்தின் சிகரத்தில் வைத்து இந்த மனிதனின் நடையைப் புகழ்ந்த பிறகு... கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்க்கிற கடமை மட்டுமே எனக்கு மீதமிருக்கிறது.
****

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் மூத்த அரசியல்வாதிகளுக்கு நல்ல அறிமுகத்தோடு மத்தியில் இவன் அரும்பியபோதே; நன்றியற்ற மனிதர் களால் தள்ளி குழி பறித்தலும் நிர்மலமாக ஜீவிக்கின்ற அக புற விசைகளை யாராலும் இவனை தடுக்க முடியாது. காலம் எங்கெங்கோ இவனைத் தூக்கி எறிந்தாலும் “வெளிச்சத்தைப் புதைக்க முடியாது”.மனத்திடம்தான்......
*****

ஏகாந்த,சல்லாப அரசர்கள்அரசிளங்
குமரிகளை அமர்த்தி வைத்தபடி ரதங்கள் பவனிவரும் ராஜபாட்டையில் - கையில் கட்டுச் சோற்று மூட்டையோடு, கால் நடையாகப் புறப்பட்ட கிராமத்துக்காரனைப் போல் இப்பொழுதும் நான்.....
****

"வார்த்தைகள்....
நடந்தால் - வசனம்
நடனமாடினால் - கவிதை!"
****

கண்ணா! உன் புல்லாங்குழல் துவாரங்களை நீ மெல்லிய விரல்களால் மூடிக்கொண்டால் இருட்டு; திறந்துவிட்டால் பகல்!..  
****

நமக்கு நண்பர்களாக எவர் வேண்டுமானலும் இருக்கலாம். எதிரிகளாக மாத்திரம் எவரையும் அங்கீகரித்துவிடக் கூடாது.
****

நாய்பெற்ற தெங்கம்பழம் போலத் தான். தேங்காயை வைத்து நாய் உருட்டத் தான் முடியுமேயொழிய உடைத்து பயன்படுத்த முடியாது. அப்படியான பயனற்ற நிலை போல தான் 
ஒரு பிழையையோ, தவறையோ,
பொய்யோ பெரும்பான்மையோரின் சரியே என வெட்டிக் கூப்பாட்டால் உண்மையாகாது.
****

இன்று ஜெயில் நாளை மான்புமிகு அமைச்சர் ...
இன்று மான்புமிகு அமைச்சர் நாளை ஜெயில்...
(நவீன ஜனநாயகமா?)
ஏன்யெனில் இங்கு தகுதியே தடை....
****

'There is a tide in the affairs of men,
Which, taken at the flood, leads on to fortune; 
Omitted, all the voyage of their life
Is bound in shallows and in miseries.
On such a full sea are we now afloat,
And we must take the current when it serves 
Or lose our ventures.'
- Julius Caesar, Act IV, Sc. 3

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-09-2019

திருநெல்வேலி மாவட்டம் -

திருநெல்வேலி மாவட்டம் - 229 | Tirunelveli District -229. 
_________________________________________________________

இன்றோடு நெஞ்சையள்ளும் எங்கள் தெற்குச் சீமையான வீரபூமி திருநெல்வேலிமாவட்டமாக  பிரிந்து இரண்டேகால் நூற்றாண்டுகள் அதாவது 225ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைப் பதிவு செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் ஒரு மமதையும் உள்ளது.

திருநெல்வேலிக்கு நிகர் திருநெல்வேலிதான். எத்தனையோ பிதாமகர்கள், எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ இலக்கிய கர்த்தாகள், வரலாற்று நிகழ்வுகள்.... எதைச் சொல்ல எதைவிட... 
சொல்லிக்கொண்டே போகலாம் நெல்லையின் புகழை. 

எனது “நிமிர வைக்கும் நெல்லை” நூலை 15ஆண்டுகளுக்கு முன்னால் பதிப்பிக்கும் போது எவ்வளவு பாராட்டுகள். திருநெல்வேலியினால் எனக்குப் பெருமை கிடைத்தது. 
டெல்லி தமிழ்ச்சங்கத்தில் இந்நூலை வெளியிடும் போது டெல்லிவாழ் அத்தனை நெல்லை வாசிகளும் கலந்துகொண்டு சிறப்பித்ததை மறக்கவே முடியாது.  அதேப்போல சென்னையில் நடைபெற்ற இந்நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா இரண்டிலும் நெல்லை நண்பர்கள் திரளாகக் கலந்துகொண்டதும், நெல்லையின் ம.தி.தா இந்துக்கல்லூரியில் நடந்த விழாவிலும் மகிழ்ச்சியோடு நெல்லை மக்கள் பங்கேற்றதையும் நன்றியோடு நினைவில் கொள்கிறேன். 

இன்றும் உலக நாடுகளுக்குச் செல்லும்பொழுது, “நிமிரவைக்கும் நெல்லை” நூல் பற்றியும், “கதை சொல்லி” இதழ் பற்றியும் எவரேனும் ஒருவர் நிச்சயம் பாராட்டுவதுண்டு. 48 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டதற்கு இதைவிட வேறு என்ன வெகுமதி வேண்டும் என்று மகிழ்ச்சியாக நினைக்கும் தருணங்கள் இவை.

மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்லக்கூடிய சென்னை ராஜதானியில், 1790ம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் 1ம் நாள் உதயமானது தான் திருநெல்வேலி மாவட்டம்.  
18ம் நூற்றாண்டில் அன்றைக்கு சென்னை ராஜதானியில் 23 மாவட்டங்கள் ஆந்திரா- ஒரிசா எல்கை வரையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் பரவி இருந்தன. 

பிரிட்டிஷ்காரர்கள் நில அளவை மூலம் இந்த எல்லைகளை வரையறுத்து தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள்.  மாநில முதல்வர் என்று அழைக்காமல் பிரதமர் என்று அழைக்கப்பட்டார். நாட்டு விடுதலைக்குப் பின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 

நெல்லை மாவட்டத்தின் வடக்கில் விருதுநகரின் தென்பகுதி, திருவில்லிபுத்தூர், தென்கிழக்கே உவரி, மற்றும் தெற்கே வள்ளியூர் தாண்டி பழவூர்,முப்பந்தல் வரையும், கிழக்கே வங்ககடலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஐவகை நிலங்களும் அமைந்த மாவட்டம் தான் அந்தகாலகட்டத்தின் நெல்லைச் சீமை. 

மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமான மாவட்டம். தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டாக பாளையங்கோட்டை சிறந்து விளங்கியது.  நெல்லை மாவட்டத்திலே பொதியமலையில் உற்பத்தியாகி புன்னைக்காயலிலே கடலில் கலக்கும் தாமிரபரணி தமிழகத்தின் ஒரே  ஜீவநதி.  உலகின் தொன்மையான நாகரிகம் என்பது தாமிரபரணிக்கரை நாகரிகம்தான் . அதற்கு காலத்தின் சாட்சியாக ஆதிச்சநல்லூர் திகழ்கின்றது. 

இம்மாவட்டத்தின் வடபகுதி வானம் பார்த்த கரிசல் மண்.  மேற்குப் பகுதி செம்மண். ஒருபக்கம் விரிந்த கடல், மறுபக்கம் வானுயர்ந்த மலைத்தொடர், அருவிகள், வனங்கள், தேரிக்காடுகள் என சகல புவி அமைப்புகளைக் கொண்ட ஒருங்கே கொண்ட மாவட்டம். தமிழகத்தில் அதிர்வுகள் பலவற்றை உருவாக்கிய உயிரோட்டமான, தியாகத்திற்கு பெயர்போன வீரக்களம் தான் இந்த பரணி மண். அதன் புகழ்களை இந்த ஒரு பதிவில் அடக்கிவிட முடியாது. 

நெல்லையிலிருந்து தூத்துகுடி தனி மாவட்டமாக பிரிந்தாலும் நெல்லையின் சகோதர மாவட்டமாகத்தான் இன்றைக்கும் திகழ்கின்றது. விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பகுதி இங்கிருந்து பிரிந்தாலும் அதன் கலாச்சாரம் நெல்லை மாவட்டத்தோடு ஒட்டியமைந்தது.  

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று தாமிரபரணியை கம்பரும் பாடியுள்ளார்கள். இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. 

விரைவில், நான்காவது பதிப்பாக எனது  “நிமிரவைக்கும் நெல்லை” நூல் இரண்டு பாகங்களாக வர இருக்கின்றது. அதில் இயன்ற அளவு திருநெல்வேலியின் தொன்மையும், வரலாறும், சிறப்புகளையும் சொல்லியுள்ளேன்.  அதன் பெருமை உலகளவு; ஆனால் நானறிந்ததே உள்ளங்கையளவு. அவை அத்தனையையும் முறையாகப் பதிவு செய்துள்ளேன்.

எனது நிமிரவைக்கும் நெல்லையில் குறிப்பிட்டவாறு, 

 “ என்னைப் பிரசவித்த மண்ணே, 
என் பரம்பரையின் மூத்தகுடிகளே,
எனக்கு நேர்வழி காட்டுங்கள்”  

..... என்று இந்த நன்னாளில் மகிழ்ச்சியோடு இந்த நினைவுகளைப் பகிர்வதை நான் பிறந்த பூமிக்குச் செய்யும் கடமையாக நினைக்கிறேன். 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
01-09-2019.

Tail Piece : நெல்லை குறித்து நான் ஏடுகளுக்கு எழுதிய கட்டுரைகள் சில... 

http://ksr1956blog.blogspot.in/2015/08/agriculture.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_64.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/thamirabarani.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_35.html

http://ksr1956blog.blogspot.in/2014/09/blog-post_4.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_70.html

http://ksr1956blog.blogspot.in/2015/07/pamba-achankovil-vaippar-link.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post_27.html

http://ksr1956blog.blogspot.in/2015/06/blog-post.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/regional-folklore-gods.html

http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_25.html 

http://ksr1956blog.blogspot.in/2015/06/red-matta-rice.html

http://ksr1956blog.blogspot.in/2015/05/nagarcoil-tirunelveli-tutucorin.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_14.html

http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_17.html

http://ksr1956blog.blogspot.in/2015/03/blog-post.html

http://goo.gl/TZkia7

http://goo.gl/omI2fE

http://thikasi.blogspot.in/2010_08_01_archive.html

https://groups.google.com/forum/#!topic/muththamiz/Mh9tTr9oDLY

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/16115-2011-08-13-22-08-30

http://www.dinamani.com/editorial_articles/article1191712.ece 

#Tirunelveli #Nellai #NimiravaikkumNellai #Nellai229#MadrasPresidency


OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...