Sunday, September 1, 2019

பார்வைகள்_சில..

#

...

தொடர்ச்சியாக அதிர்ஷ்டக் காற்று வீசும் போது... வான சஞ்சாரம் செய்கிறவர்களை எனது நெஞ்சின் ஞாபகக் குறிப்புகளில் நான் பதிவு செய்து கொள்வதில்லை.

பரமபத ஆட்டத்தில் ஏணியும், பாம்பும்-மாறி மாறிச் சந்தித்துக் கொள்வதைப் போல, சாதனையும், சோதனையும் மாறி மாறி மேடை ஏறும் ஒரு வாழ்க்கை நாடகத்தில்-ஏற்றுக் கொள்ளப்படும் கதாநாயகனே என் மனதிலும் இடம் பெறுகிறான்.
****

பூக்கடைகள் எல்லாம் நந்தவனங்களாக மாறிய மாதிரி இலக்கிய அழகு அரசியல் சிம்மாசனம் ஏறியது.

இலக்கியத்தில், நெல்லை குருநாதய்யர்,சீத்தாரமையர் பஞ்சாங்கமாக குமுதம் இதழும் - ‘அவள் ஒரு தொடர்கதை’யில் ஒரு விதவைப் பெண் கல்யாண உடைகள் தைக்கும் காட்சியைச் சித்தரிக்கும் போது “இந்த விதவைக்கு இத்தனை முகூர்த்தங்களா?” எனப் புதுக் கவிதை வசனம் எழுதிய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரும் - இமயத்தின் சிகரத்தில் வைத்து இந்த மனிதனின் நடையைப் புகழ்ந்த பிறகு... கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்க்கிற கடமை மட்டுமே எனக்கு மீதமிருக்கிறது.
****

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் மூத்த அரசியல்வாதிகளுக்கு நல்ல அறிமுகத்தோடு மத்தியில் இவன் அரும்பியபோதே; நன்றியற்ற மனிதர் களால் தள்ளி குழி பறித்தலும் நிர்மலமாக ஜீவிக்கின்ற அக புற விசைகளை யாராலும் இவனை தடுக்க முடியாது. காலம் எங்கெங்கோ இவனைத் தூக்கி எறிந்தாலும் “வெளிச்சத்தைப் புதைக்க முடியாது”.மனத்திடம்தான்......
*****

ஏகாந்த,சல்லாப அரசர்கள்அரசிளங்
குமரிகளை அமர்த்தி வைத்தபடி ரதங்கள் பவனிவரும் ராஜபாட்டையில் - கையில் கட்டுச் சோற்று மூட்டையோடு, கால் நடையாகப் புறப்பட்ட கிராமத்துக்காரனைப் போல் இப்பொழுதும் நான்.....
****

"வார்த்தைகள்....
நடந்தால் - வசனம்
நடனமாடினால் - கவிதை!"
****

கண்ணா! உன் புல்லாங்குழல் துவாரங்களை நீ மெல்லிய விரல்களால் மூடிக்கொண்டால் இருட்டு; திறந்துவிட்டால் பகல்!..  
****

நமக்கு நண்பர்களாக எவர் வேண்டுமானலும் இருக்கலாம். எதிரிகளாக மாத்திரம் எவரையும் அங்கீகரித்துவிடக் கூடாது.
****

நாய்பெற்ற தெங்கம்பழம் போலத் தான். தேங்காயை வைத்து நாய் உருட்டத் தான் முடியுமேயொழிய உடைத்து பயன்படுத்த முடியாது. அப்படியான பயனற்ற நிலை போல தான் 
ஒரு பிழையையோ, தவறையோ,
பொய்யோ பெரும்பான்மையோரின் சரியே என வெட்டிக் கூப்பாட்டால் உண்மையாகாது.
****

இன்று ஜெயில் நாளை மான்புமிகு அமைச்சர் ...
இன்று மான்புமிகு அமைச்சர் நாளை ஜெயில்...
(நவீன ஜனநாயகமா?)
ஏன்யெனில் இங்கு தகுதியே தடை....
****

'There is a tide in the affairs of men,
Which, taken at the flood, leads on to fortune; 
Omitted, all the voyage of their life
Is bound in shallows and in miseries.
On such a full sea are we now afloat,
And we must take the current when it serves 
Or lose our ventures.'
- Julius Caesar, Act IV, Sc. 3

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-09-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...