————————————————-
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் சிலவே. அவைகளை அடைய அமைத்துக் கொள்ள வேண்டிய தனி வாழ்வும், பொது வாழ்வும் சிக்கல் எதுவும் அற்றதே, எளிதானதே. அவைகளை நிறைவு செய்து வாழ்வது நிறைவாழ்வு, ஞான வாழ்வு, அற வாழ்வு.
“*அற மெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாதிதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உளையுளும்
அல்லது கண்டதில்*”
என்று கூறும் மணிமேகலை.
மக்கள் அனைவரும் எளிய உணவும், உடையும், உறைவிடமும் பெற்று இனிது வாழ்வதற்கு ஏதுவான வழிவகைகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் குமரப்பா.
“ஜீவாதாரமான தேவைகளை உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றையுமாவது, அந்தந்த இடத்தில் உற்பத்தியாகுபவைகளைக் கொண்டு செய்து கொள்ள வேண்டும். உண்மையாக என்ன வேண்டும் என்பதை மறந்துவிட்டு, வெறும் தேவைகளை மாத்திரம் பெருக்கிக் கொண்டு போவதில் பயனில்லை. ஓரிடத்தில் மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்கள் என்னவோ, அவைகள் அங்கேயே உற்பத்தியாகுமானால் போலித் தேவைகள் மறைந்தொழியும்” என்று உறுதிபடக் கூறுகிறார் குமரப்பா.
மனித வாழ்வின் முன்னேற்றம் என்பது இயற்கையில் பொதிந்துள்ள அறிவையும், உண்மையையும் தேடி உணர்ந்து, மனிதனுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இயற்கை உபயோகிப்பது என்று வரை நெறியப்பட்ட கோட்பாடுகளை வகுத்தவர் ஜே.சி. குமரப்பா.
#ஜே_சி_குமரப்பா
#Green_Revolution
#J_C_Kumarappa
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-09-2019.
(படம். உத்தமர் காந்தி, ஜே.சி.குமரப்பா, துர்கா மேத்தா, அபா காந்தி ஆகியோருடன் 1940இல் சேவகிராம ஆசிரமத்தில்..)
No comments:
Post a Comment