Friday, September 27, 2019

* #தமிழகம்_கேரள_முதல்வர்கள்_சந்திப்பு; இரு மாநில #நதி_நீர்_சிக்கல்களை குறித்த பேச்சுவார்த்தை....

* #தமிழகம்_கேரள_முதல்வர்கள்_சந்திப்பு; இரு மாநில #நதி_நீர்_சிக்கல்களை குறித்த பேச்சுவார்த்தை....
என்ன பேசினார்களோ? தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக தருமா?*
*இந்த பதிவில் சொல்லப்பட்ட பிரச்சனைகள் பேசப்பட்டதா?*
-------------------------------------

கடந்த 25-09-2019 அன்று திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும் சந்தித்து தமிழக - கேரள நதிநீர் பிரச்சனைகள் குறித்து சந்தித்து பேசியுள்ளனர். இரு தரப்பிலும் தலா 5 பேர் இணைந்து 10 பேர் சேர்ந்த குழு அமைந்துள்ளது. சரி தான். ஆனால் பேசப்பட்டது என்ன?
வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டால் நல்லது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசியுள்ளனர். ஆழியாறு-பரம்பிக்குளம் நிறைவேற்றி 60 ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் சிக்கல்கள் உள்ளன. பாண்டியாறு-புன்னம்பழா போன்ற திட்டங்களும் சிக்கல்களில் உள்ளன. 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த நெய்யாறு அணையை கேரள அரசு மூடிவிட்டது. தக்கலை, திரிவிதாங்கோடு, விளவங்கோடு முதலான பகுதிகள் பச்சை பசேலென்று திருவணந்தபுரம் செல்லும் சாலையின் இருபக்கமும் வாழையும், நெற்பயிர்களும் இருக்கும். முதல் ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிடப்பட்டு காமராஜர் தமிழகத்தின் முதல்வரக இருந்தபோது கேரள முதல்வர் சங்கரோடு இணைந்து நெய்யாறு அணை திறப்பு விழா குமரி மாவட்டத்தில் நடந்தது. இந்த அணையின் கட்டுமாண செலவினை தமிழக அரசே அப்போது ஏற்றது. மீண்டும் தமிழக அரசிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து இந்த அணையை கேரள அரசு மூடிவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 
இதற்கு சற்று வடக்கே நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாற்று பிரச்சனையிலும் கேரளா வம்பு பிடிக்கின்றது. 1989ல் செங்கோட்டை அருகே கட்டப்பட்ட அடவி நாயினார் அணைக்கும் நீர்வரத்தை தடுக்கிறது கேரளம். இந்த அணையை இடிப்பதற்காக 2002ல் அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் கடப்பாரை, மம்பட்டியுடன் வந்தது ரணமான செய்தியாகும். 
இதற்கடுத்து கோதையாறு, கீரியாறு திட்டமும் நெல்லை மாவட்டத்தில் 40, 50 ஆண்டுகளாக பேசப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. 
அச்சன்கோவில் - பம்பை – தமிழகத்தின் சாத்தூர் அருகே வைப்பாறோடு இணைப்பை மத்திய அரசு விரும்பியும் அதை நடைமுறைபடுத்த இயலவில்லை. 
உள்ளாறு திட்டம் குறித்து அறிய 1997ல் தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் மேற்கொண்டு இந்த பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 
செண்பகவல்லி மூன்றாவது முறையாக பாதிப்புகள் ஏற்பட்டு செப்பன்னிட முடியாமல் வழக்குமன்றம் வரை சென்றும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. 
இவையெல்லாம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த நீராதாரப் பிரச்சனைகள் ஆகும்.
 அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை திட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் போன்ற பகுதிகளுக்கான நீராதார பிரச்சனைகளிலும் கேரளா தடுக்கின்றது.
முல்லை, பெரியாரை பற்றி அனைவரும் அறிந்த சிக்கலாகும். இந்த முல்லை பெரியாறு நதிமூலம் நம் மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகேயுள்ள செண்பகவல்லி திட்டம் தான்.
மதுரை, திண்டுக்கல் மாவட்டம் பயன்பெறும் ஆலடி அணை, மஞ்சளாறு, மாம்பழ ஆறு போன்றவற்றிலும் கேரளா தமிழகத்திற்கு எதிராக பிடிவாத போக்கை  கொண்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு, பவாணி, அமராவதி என அனைத்திலும் கேரளா தடுப்பணைகளை கட்டிக்கொண்டே வருகின்றது.
நீலகிரி மாவட்டத்தில் மேயாறிலும் பிரச்சனைகள். எனவே குமரி முனையில் இருந்து நீலகிரி தொட்டபெட்டா வரை கேரளத்தின் பிடிவாத போக்கு. 

*இவையெல்லாம் கேரளத்துடன் உள்ள பல சிக்கல்கள் குறித்தான எனது கட்டுரைகள்.*

https://youtu.be/T3mZku7wlcg

http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/02/blog-post_45.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2016/09/blog-post_50.html
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/06/blog-post_87.html

#பம்பைஅச்சன்கோவில்வைப்பாறுடன் #நதிகள்இணைப்பு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27-09-2019.

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...