Saturday, September 28, 2019

#தமிழ்_இலக்கியத்_தன்மை

*1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை 

என்னும் எட்டுத்தொகை சங்க நூல்கள்..... !

*1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் 

என்னும் பத்துப்பாட்டு சங்க நூல்கள்....!! 

*உலகினர் வியந்து போற்றும்  1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி
18.கைந்நிலை 

என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்.....!!! 

*1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி  
4) வளையாபதி 
5)குண்டலகேசி

போன்ற 
ஐம்பெரும் காப்பியங்கள்..... !!!!
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் *ஐம்பெருங்காப்பியங்கள்*,

*உதயணகுமார காவியம்*
*நாககுமார காவியம்*
*யசோதர காவியம்*
*சூளாமணி*
*நீலகேசி*

போன்ற*ஐஞ்சிறுகாப்பியங்கள்* என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. *அறம், பொருள், இன்பம் , வீடு* என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘*சிறுகாப்பியம்*’ எனப்பட்டன.

*1.அகத்தியம் 
2.இறையனார் களவியல் உரை 3.புறப்பொருள்வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் 
போன்ற இலக்கண நூல்கள்.....!!!!! 

*1.தேவாரம் 
2.திருவாசகம் 
3.திருப்பாவை 
4.திருவெம்பாவை 
5.நாச்சியார் திருமொழி 
6.ஆழ்வார் பாசுரங்கள் 

போன்ற உலகின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்....! !!!!!

*1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா 
6.முத்தொள்ளாயிரம் 

போன்ற எண்ணற்ற  சிற்றிலக்கிய வகைகள்.....!!! 

இதுபோன்று எந்த மொழியிலும் இலக்கண இலக்கிய நூல்களை சொல்லிவிடுங்கள் பார்க்கலாம்....??!!

அது மட்டுமா...?  கம்பனின் கவிநயமான கம்பராமாயணம், வில்லிபுத்தூராரின் பாரதம் என நீண்ட பட்டியலிடலாம். கிறித்துவ இலக்கியமான எச்.கிருஷ்ணப்பிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம், உமறுப் புலவரின் சீறாப்புராணம் எனப் பல கவிதை நயமான இலக்கியங்கள். 
காளமேகப்புலவர், குணங்குடி மஸ்தான் போன்றோர் பாடிய எண்ணற்ற தனிப்பாடல்கள் என எதை சொல்வது, எதை விடுவது.

*ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்.... 
1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு 
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி மொழி தமிழ்.... !!


#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-09-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...