Tuesday, September 10, 2019

அரசியல் உச்சத்திலும் வைக்கும். கீழேயும் தள்ளிவிடும். சிலர் இயற்கை கொடியது என்பார்கள்.

இந்திய அரசியலில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி  ஆகியோர் 
பாஜக மூத்த தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இன்றைக்கு டில்லியில் வாழ்ந்த வசிப்பிடத்தை விடுத்து வெளியேறும்படியான நிலை வந்துள்ளது. அத்வானியைப் பற்றி நம் அனைவருக்கும் ஏற்கனவே நன்கு தெரியும். ஆனால் முரளி மனோகர்  ஜோஷி, அவசரநிலை இந்திராவின்  காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு உருவான ஜனதா கட்சியை கட்டமைத்ததில் முக்கியமான பங்களித்தவர் ஆவார். பாஜக தேசிய தலைவராகவும் இருந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு பேராசிரியராகவும் இருந்துள்ளார். 

தற்போது இவர்களுடைய அரசு வீடுகளை விடுத்து தங்களுக்கான கூட்டை டில்லியில்  தேடுகிறார்கள். 

அரசியல் உச்சத்திலும் வைக்கும். கீழேயும் தள்ளிவிடும். சிலர் இயற்கை கொடியது என்பார்கள்.எல்லாம் காலநிலை மாற்றம் போலதான்.....
தியாகம்,பனி என்பது கேள்வி குறியே....
தகுதியற்றவர்களுக்கும் அரசியலில்  இடமும் அங்கீகாரமும் செல்வாக்கையும் 
தாரளமாக வழங்கிறது.இதுதான் நமது
அமைப்பு முறை.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-09-2019


No comments:

Post a Comment

இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார்

ஏப்ரல் 28 - பிரபல T.V.S. குழுமத்தின் நிறுவனர் T.V. சுந்தரம் நினைவு நாள் இன்று (1955 ). இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம...