Saturday, September 28, 2019

#மெய்யான_நேர்மையான_வரலாறு #வேண்டும்.

நேற்று (27-09-2019) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் Madras School of Economics அரங்கத்தில் Revolutionaries during Independence Struggle in India (இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்கள்) என்ற தலைப்பில் பொருளாதார ஆலோசகரான சஞ்ஜீவ் சான்யால் பேசினார். தினமணி ஆசிரியர் 


நண்பர் கே. வைத்தியநாதன் தலைமை ஏற்றார்.

அவரது உரையில் வடபுலத்தை சார்ந்த விடுதலை போராட்ட தலைவர்களை மட்டுமே குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தை சார்ந்த வா.வே.சு.ஐயர் பெயரை மட்டும் 2, 3 முறை உச்சரித்தார். மற்ற புரட்சியாளர்களான பூலித்தேவர், கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, கான் சாகிப் மருதநாயகம்,வெள்ளையனையே தூக்கில் போட்ட உடுமலைப்பேட்டை தளி எத்திலப்ப நாயக்கர், ஒண்டிவீரன், முத்துராமலிங்க சேதுபதி மன்னர், தஞ்சை மன்னன் அமரசிம்மன், காஞ்சி சங்கராச்சாரியார் பாராட்டிய திப்பு சுல்தான், வீரன் அழகு முத்துகோன், மூக்கன் ஆசாரி, சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், செண்பகராமன், தில்லையாடி வள்ளியம்மை, மாடசாமி, பாஷ்யம் அய்யங்கார், எம்.பி.டி.ஆச்சார்யா, தளவாய் வேலுத்தம்பி, வீரன் அழகு முத்துகோன் போன்ற பல ஆளுமைகள் சுதந்திரத்துக்காக சர்வபரி தியாககங்கள் செய்தார்கள். இதுகுறித்து அந்த விழாவிலேயே கடுமையாக ஆட்சேபித்து அந்த ஆளுமைகளின் பலரின் பெயர்களையும் பதிவு செய்தேன். 
அதுமட்டுமா, மீரட் கலவரத்திற்கு முன்னரே வேலூர் புரட்சி நடந்தது. 
அதற்கு பின், திண்டுக்கல்-பழனி புரட்சி, தூத்துக்குடி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் - சாத்தூர் - விருதுநகர் சதி வழக்கு, குலசேகரப்பட்டினம் சதி வழக்கு, தேவக்கோட்டை சதி வழக்கு, திருவாடானை சதி வழக்கு என இப்படி பல வரலாற்று நிகழ்வுகளும் விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியது. இவையெல்லாம் மறைக்கப்படுகிறது. சிலர் மறந்தும் விட்டனர் என்பது தான் வேதனையான விடயம். 

தமிழகம் எல்லா காலக்கட்டங்களிலும் தன்னுடைய பங்களிப்பை இதய சுத்தியோடு ஒவ்வொரு பிரச்சனையிலும் வழங்கியுள்ளதை மறுக்கப்படும்போது, ரௌத்திரம் எழத்தான் செய்கிறது. 

வரலாறு என்பது தெற்கிலிருந்துதான் எழுதப்பட வேண்டும். லெமூரியா கண்டம் முதல் குறிப்பாக தமிழகத்தில் இருந்து தான் எழுத வேண்டுமென்று எழுதி வருகிறேன். வரலாற்றில் நேர்மையான பதிவுகள் இருக்க வேண்டும் என்று உரைத்தேன். இதே கருத்தை தினமணி ஆசிரியரும் எடுத்துரைத்தார். 

இப்படி விடுதலை போராட்டக் காலத்தில் இன்னும் பல ஆளுமைகளின் தியாகப் பங்களிப்புகள் இருந்தன. இவர்களது வரலாற்றை விரிவாகச் சொல்ல வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐ.என்.ஏ படையில் தமிழர்கள் தான் அதிகமாக இடம்பெற்றனர். 

விதியே, விதியே, தமிழ்சாதியே. 

வரலாறு நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு செல்கின்ற அடையாளம் மட்டுமல்ல சீதனமும் ஆகும்.

#இந்திய_விடுதலைப்_போரட்ட_வரலாறு
#தமிழக_விடுதலை_வீரர்கள்
#விடுதலை_போராளிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-09-2019.
https://www.facebook.com/100008390956876/posts/2513077038981970?sfns=mo

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...