#கீழடி
கீழடி தமிழ் மண்ணின் தொன்மையை சொல்கின்ற பண்டைய நாகரீக கூறுகளின் சாட்சியங்கள் ஆகும். மூத்தகுடி தமிழ் என்பதற்கான அடையாளமாகும். இதில் அகப்புற சிக்கல்கள் இல்லாமல் பொதுவாக அணுகவேண்டும். இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கீழ் குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் கவனத்திற்கு வராத நபர்களின் பணி பாராட்டுக்குரியதாகும். தமிழகம் அவர்களை என்றும் நன்றியோடு பார்க்கும். மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் கலாச்சாரத்துறை இதை இந்தப் பணிகளை மேலும் தொடரச் செய்ய வேண்டும்.
-மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.
-நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கனிமொழி மதி.
-நிலத்தை தானமாக வழங்கிய பேரா. கரு.முருகேசன.
-சு. வெங்கிடேசன். எம்.பி.
-சோலைக்குடும்பர்.
-தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம்.
-ஆசிரியர் பாலசுப்ரமணியம்.
என பலர்.....
அதேபோல ஆதிச்சநல்லூர் முதல் தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர்,ஶ்ரீவில்லிபுத்தூர், பூசநாயக்கன்குளம் போன்ற தமிழகத்தின் பல இடங்களில் அகழாய்வில் பல தரவுகள் கிடைத்தன. எனவே அந்த பகுதிகளில்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். சிவகளையில் அகழாய்வுப் பணிகளை தொடங்க வேண்டும்.
••••••••••••
#அகழ்_ஆய்வு
உடுமலை-மூணார் சாலையில் 1கீமீ தொலைவில் ஆலம்பாளையம் கிராமம் அருகே கிழக்கே பூசநாயக்கன்குளம் ஊரில் கற்கால அடையாளங்கள் கல்பதுக்கை, தாழிகள்,ஓடுகளும், அழிந்த நிலையில் கிடைத்து உள்ளது. இது மாதிரி தாழிகள் பேரூரில், ஆதிச்ச நல்லூரிலும் கிடைத்துள்ளது ரோமில் கிடைத்தன.
#கொடுமணல்
#கீழடி
#ஆதிச்சநல்லூர்
#அகழ்வாராய்ச்சி
#archaeology
#Keeladi
#Kodumanal
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-09-2019.
No comments:
Post a Comment