பிழைகளாக வரலாற்றுப் பதிவுகள் செய்யும்போது வேதனையாக உள்ளது.
------------------------------------
It is very much regret to say, while writing important books in erroneous manner by reputed long standing publications. How we could able to tolerate?
சமீபத்தில், முன்னாள் பிரதமரும், ஜனதா கட்சித் தலைவருமான சந்திரசேகரைக் குறித்து, “CHANDRA SHEKHAR - THE LAST ICON OF IDEOLOGICAL POLITICS” என்ற அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை படிக்க முடிந்தது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையேற்க, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பங்கேற்றார். இதை படித்தபோது ஆங்காங்கு பிழைகள் இருந்தன. இதை எழுதியவர்களோ #Harivansh and Ravi Dutt Bajpai. அதை வெளியிட்டது Rupa Publications. இத்தகைய வெளியீட்டு நிறுவனம், எழுதியவரோ நாடாளுமன்ற மாநிலங்களவை (Rajya Sabha) துணைத் தலைவர். உதாரணத்திற்கு இந்த நூலில் 156வது பக்கம் சந்திரசேகர் நடைபயணத்தில் நன்கொடையாக கிடைத்த பணத்தில் ஒரு அறக்கட்டளையை நிறுவி ஏற்காட்டில் பொதுப் பயன்பாட்டிற்கு நிலங்களை வாங்கியிருந்தார். இந்த நூலிலோ ஏற்காடு என்பதற்கு பதிலாக ஆற்காடு என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். வரலாற்றுப் பதிவுகளில் கவனமாக இருக்க வேண்டாமா?
அதேபோலவே, “KASHMIR - LAND OF REGRETS” by Moosa Raza (#OM_Publications) என்ற நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதிலும் பிழைகள். ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு நீலகிரியில் சிறைப்பட்டதாக Moosa Raza பிழையாக எழுதியுள்ளார். ஷேக் அப்துல்லாவை கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.இவர் காஷ்மீரின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவர். இப்படி பெரிய வெளியீட்டு நிறுவனங்கள் பிழைகளாக வரலாற்று செய்திகளை எழுதும் போது வேதனையாக உள்ளது. என்ன சொல்ல?
இதை குறித்து Harivanshக்கும், Moosa Razaக்கும் மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். சொல்லும் பதிவுகளில் வரலாற்றுக் குறிப்புகளும், தரவுகளும் சரியாக இருக்க வேண்டும்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-09-2019.
No comments:
Post a Comment