Saturday, September 7, 2019

தமிழக_விவசாயிகள்_சங்க_போராட்ட_வரலாறு_நூல்


#தமிழக_விவசாயிகள்_சங்க_போராட்ட_வரலாறு_நூல்
-----------------
கடந்த 1964ல், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக கட்டமைக்கப்பட்ட தமிழக விவசாயிகள் சங்க வரலாற்றை குறித்து ஏறத்தாழ 500 பக்கத்துக்கு மேல் நூலாக வெளி வருகிறது. விவசாய சங்க போராட்டங்களின் போது, கோவை நகரில் நடைபெற்ற மாட்டுவண்டி போராட்டத்தை நியூயார்க் டைம்ஸ் ஏட்டில் இந்திய விவசாயிகளின் பேட்டன் டாங்க் என்று மாட்டு வண்டியை குறித்து எழுதியது. இப்படியான பல வரலாற்றுச் செய்திகளை உரிய தரவுகளுடன் ஆவணங்களையும் எழுதியுள்ளேன். இந்த பணியை கடந்த 2007இல் துவங்கி இன்றைக்குத் தான் இறுதிப்படுத்தி அச்சுக்கு அனுப்பியுள்ளேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கான ஆவணங்கள் பலவற்றை தேடி அலைந்து எப்படியும் நூலாக கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தில் பல முயற்சிகளின் விளைவாக பணி முடிந்தது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவன் என்றி மட்டுமல்லாமல், என் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்கள் என்ற நிலையில் உரிய கடமைகளை முடித்தோம் என்று மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகள் போராட்ட வரலாறு அறியப்படவேண்டும், வாசிக்கப்பட வேண்டும்.
#விவசாயிகள்_போராட்டம் #விவசாயிகள்_சங்கம் #KSRadhakrishnan_Postings #KSRPostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 07-09-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...