Thursday, September 19, 2019

தண்ணீர்.. தண்ணீர்.. இப்படியான சூழல் நீடித்தால் எதிர்கால சமுதாயம் என்ன செய்யுமோ?

தண்ணீர்.. தண்ணீர்.. என்ற பாலச்சந்தரின் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே குடிக்கத் தண்ணீருக்கு தமிழகத்தின் பலப் பகுதிகள் பெரும் பாதிப்பு அடைந்திருந்தது. இன்றைக்கு அந்த பாதிப்பு அதிகமாகிவிட்டது. ஐ.நா. மன்றமே தமிழகம் பாலைவனம் ஆகிவிடும், வறட்சி நிலமாகிவிடும் என்ற எச்சரித்துள்ளது. ஒரு காலத்தில் ஆறுகள், ஏரிகளில் தண்ணீரை பார்த்தார்கள், பின்னர் கிணற்றில் தண்ணீரை பார்த்தனர், இப்போது குழாய்களிலும் தண்ணீர் பாட்டில்களிலும் பார்க்க வேண்டிய நிலை. இப்படியான சூழல் நீடித்தால் எதிர்கால சமுதாயம் என்ன செய்யுமோ? அப்படியான தண்ணீர் பற்றாக்குறையை நான்கு வகையாக பால்கன் மார்க் என்ற அறிஞர் வகைப்படுத்தி உள்ளார். அவை வருமாறு.
1. தனி மனிதனின் ஆண்டு நீர்வளம் 1,700 கன மீட்டருக்கு கூடுதலாக இருந்தால் தண்ணீர் சிரமமில்லை. அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு 1,700 கனமீட்டருக்கம் அதிகமாக தண்ணீர் கிடைத்தால் அவர் தண்ணீர் பற்றாக்குறை இன்றி வாழ்கிறார் என்று அர்த்தம்.
2. 1,000 கன மீட்டர் முதல் 1,700 கனமீட்டர் தண்ணீர் கிடைத்தால் அவர் சிரமத்தில் இருக்கிறார்.
3. 500 கனமீட்டர் முதல் 1,000 கனமீட்டர் வரை கிடைத்தால் தண்ணீர் பற்றாக்குறை.
4. 500 கனமீட்டருக்கும் குறைவாக கிடைத்தால் தண்ணீர் பஞ்சம் என்று அர்த்தம்.
தனி மனிதன் திருப்தியாக வாழ ஆண்டுக்கு 1,700 கனமீட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில், நடப்பாண்டில் தமிழகத்தின் நீர்வளத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் 62 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. அதாவது நடப்பாண்டில் தமிழகத்தின் தனிமனித நீர்வளம் 641 கனமீட்டர் மட்டுமே.

2050ஆம் ஆண்டில் தமிழகத்தின் மக்கள் தொகை 11 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அப்போது தனி மனித நீர்வளம் 416 கன மீட்டராக இருக்கும்.
அப்போது இருக்கும் நீர்வளத்தை பயன்படுத்தி விவசாயம் செய்தால், இங்கு வாழும் மக்களுக்கு ஒரு வேளைக்கு போதுமான உணவைத்தான் உற்பத்தி செய்ய இயலும். எனவே அப்படி ஒரு மோசமான நிலை ஏற்படுவதை தவிர்க்கவும், நீர்வளத்தை பெருக்கவும் அரசு இப்போதே முனைப்புடன் செயல்படுவது அவசியம்.
இதற்கு மழை நீர்ச் சேகரிப்பு, நிலநீர்ச் செறிவு, விவசாயத்தில் நீர் மேலாண்மை, கடல்நீரை நன்னீராக்கி பயன்படுத்துதல், நதிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுப்பது போன்ற பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

#தண்ணீர்_பற்றாக்குறை
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18/09/2019

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...