Saturday, September 28, 2019

ஐ.நாவில் தமிழ், கனியன் பூங்குன்றனார், தமிழர், ஈழம்


ஐ.நா. மன்றத்தின் 74வது பொதுக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசுகையில் புறநானூற்றில்

சங்க காலப் புலவரான கணியன் பூங்குன்றனார் பாடிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளை மேற்கோள் காட்டி 3000 ஆண்டுகளுக்கு மூத்த மொழியாக தமிழ் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசினார். அதேபோல, இதற்கு முன்னர் அவர் தமிழை மூத்த மொழி என்று வேறுசில தருணங்களில் குறிப்பிட்டதுண்டு. அவரது பேச்சில் காஷ்மீர் பிரச்சனை குறித்து எதுவும் இடம்பெறவில்லை. 
ஆனால், பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் காஷ்மீர் பேச்சு குறித்து பேசினார். அவர் பேசும்போது, இலங்கையில் தமிழர்கள் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தை குறித்தும் மதவாதம், தீவிரவாதம் என்று பட்டும்படாமல் பேசியது வேதனையைத் தந்தது. இம்ரான் கான் ஐ.நா. மன்றத்தில் தமிழர் என்று ஒருபுறம் உச்சரித்தாலும் மறுபுறம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதை ஏற்றுக் கொள்ளமுடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டு பேசுவது தவறானது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காட்டுகின்ற தீவிரவாதம் அப்பாவி மக்களை கொன்று ரணகளமாக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் விடுதலை கிடைக்கவும் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழர்களை கொன்றொழித்ததை எதிர்த்து சமர் செய்தனர். ஆனால், இம்ரான் கான் கருத்து பிழையானது. ஏற்றுக் கொள்ளமுடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை மட்டுமல்லாமல் தாங்கமுடியாத அழிவுகளையும் மூர்க்கத்தனமாக செய்துவிட்டு விடுதலைப்புலிகளையும் தங்களுடைய வாதத்திற்கேற்றவாறு அடையாளப்படுத்துவது சற்றும் நியாயமில்லை. 
காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) வேண்டுமென்று தனது பேச்சில் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார். ஈழப்பிரச்சனையும், காஷ்மீர் பிரச்சனையும் ஒன்றல்ல. பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் இந்த கோரிக்கை அர்த்தமற்றது. இது ஆரோக்கிய புவியரசியலுக்கு (Geo Politics) வழிவகுக்காது. மேலும் சிக்கலைத்தான் உருவாக்கும்.
ஆனால் நேற்று நடந்த 74வது கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழ், கணியன் பூங்குன்றனார், மூத்த மொழி தமிழ் என்று ஒலித்தது வரலாற்றின் கட்டாயம். கன்னித் தமிழுக்கென்று உலகளவில் கண்ணியமான இடம் இருக்கிறது என்று ஒருபுறம் மகிழ்ச்சியாக உள்ளது. 
#தமிழீழ_விடுதலை_புலிகள்
#விடுதலை_புலிகள்
#ஐ_நா_மன்றம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-09-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...